Header Ads



வாழைச்சேனை தௌஹீத் பள்ளிவாசலில், நடந்துது என்ன..?


வாழைச்சேனையில் தௌஹீத் ஜமாஅத்தின் (JDIK) பள்ளிவாயல் தாக்கப்பட்டமை தொடர்பாக…

தலைவர்/ செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா,
கல்குடாக் கிளை.

இல 04, கே.பீ. ஹாஜியார் வீதி,
05.06.2018

அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

வாழைச்சேனையில் தௌஹீத் ஜமாஅத்தின் (JDIK) பள்ளிவாயல் தாக்கப்பட்டமை தொடர்பாக…

கடந்த 04.06.2018ம் திகதி கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் (JDIK) வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள பள்ளிவாயலொன்று ளுஹர்த் தொழுகை வேளையில் தாக்கப்பட்டு தொழுகைக்கு வந்திருந்த ஐந்து சகோதரர்கள் மிக மோசமாக துன்புறுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலை கல்குடா ஜம்இய்யதுல் உலமாவின் நிருவாகத்திலுள்ள ஒரு சில உலமாக்களை உள்ளடக்கிய தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

இதேவேளை கடந்த 01.06.2018ம் திகதி அறபா நகர் ஜும்ஆப் பள்ளிவாயலில் நிருவாகத்திற்கெதிரான குழப்பம் ஒன்றும் நடைபெற்று அமளிதுமளியில் முடிந்துள்ளது. இந்த இரண்டு சம்பவங்களும் அதற்கு முன்னர் நடைபெற்ற சில சம்பவங்களும் தப்லீக் ஜமாஅத்தினர் எனக் கூறிக்கொள்ளும் உலமாக்களைக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஒன்றினாலயே திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளமை கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்.

இச்சம்பவங்களில் பொது மக்கள் அணிதிரண்டு தாக்குதலைச் செய்ததாக கூறப்பட்டாலும் பொதுமக்களின் பிரவேசத்திற்கு பதிலாக கல்குடா ஜம்இய்யதுல் உலமா நிருவாகத்தில் அங்கம் வகிக்கும் ஒரு சிலரினால் ஒழுங்கமைக்கப்பட்ட முன்கூட்டிய திட்டமிடல்களுடன் கூடிய ஒரு குழுவாகவே இது செயல்படுகின்றது. கல்குடா ஜம்இய்யதுல் உலமாவில் முக்கிய அங்கம் வகிக்கும் உலமாக்களைக் கொண்ட நிறுவனம் என்ற வகையில் இச்சம்பவங்ளை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் அவற்றுடன் சம்பந்தப் பட்டவர்களுக்கெதிராக தக்க நடவடிக்கை எடுக்குமாறும்; இச்சம்பவத்திற்கெதிராக பகிரங்க கண்டனம் ஒன்றை விடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

அப்பாவி மக்களை எமக்கெதிராக இப்புனிதமிகு ரமழான் மாதத்தில் தூண்டிவிட்டு இப்பிரதேசத்தின் அமைதியை குலைக்கும் வண்ணம் இவ் உலமாக்களை தலைமையாகக் கொண்டு குழுவாக செயல்படும் அளவுக்கு எம்மிடமுள்ள இஸ்லாமிய மார்க்கத்திற்கெதிரான செயற்பாடுகள் என்னவென தெளிவு படுத்துமாறு கோருவதுடன் அவ்வாறு இருப்பின் அவற்றை பகிரங்கமாக பொது மக்களுக்கு தெளிவூட்டுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

அதிகார மட்டங்களில் கல்குடா ஜம்இய்யதுல் உலமாவின் பெயரைப் பயன்படுத்தி செயற்பட்டு வரும் இக்குழுவினருக்கெதிராக தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து, மீண்டும் இத்தகைய சம்பவங்கள் தொடருமாயின் நாமும் எமக்கெதிரான செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்த களத்தில் இறங்க வேண்டி வரும். இது இப்பிரதேசத்தின் அமைதி நிலையை வெகுவாகப் பாதிக்கும் என்பதை எச்சரிக்கையாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

……………….
அஷ் ஷெய்க் ஏ.எல். பீர் முஹம்மத் (காஸிமி) MA
பொதுத் தலைவர்
JDIK

பிரதி
• அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா – கொழும்பு
(எச்.எம்.எம்.பர்ஸான்)

14 comments:

  1. பொதுபல சேனாவின் மறுவடிவமே ஜம்மியதுல் உலமா சபை என்றால் யார்தான் கேட்பார்கள், ஜப்னா முஸ்லிம் உட்பட?

    ReplyDelete
  2. This thableeq jamath is behind all this problems.because they have brainless members.

    ReplyDelete
  3. சகோதரர் shafraz khan,
    அந்த தவ்ஹீத் காரன் சொல்வது போல அவர்களின் வழிகேட்டை தப்லீக் வாதிகள் மக்களுக்கு தைரியமாக செல்லமுடியும் தானே????


    ஏன் தெளிவு படுத்த தயங்குகிறார்கள.
    அவங்க என்ன இறாலா?

    ReplyDelete
  4. ஒருவகையில் தப்லிக் ஜாமத்தினரை குறை கூறுவதிலும் அர்த்தம் இல்லை ,பாவம் அவர்கள்.தப்லிக் ஜமாத் என்பது ஒரு பாமரர்களின் கோட்டையாகும் ,அந்த இயக்கத்த்தால் உருவாக்கப் பட்டவர்கள், சுயமாக சிந்திக்கத் தெரியாத கூழ் முட்டைகளாகவே இருப்பார்கள் .
    பொதுவாக ஜமாத்தே இஸ்லாம், தவ்ஹீத் ஜமாத், ஏன் சுன்னத் வல்ஜமாத்தில் உள்ளவர்கள் கூட மற்றவர் பேசுவதை விளங்க அல்லது சிந்திக்க கூடியவர்கள்.
    தப்லிக் ஜாமத்தில் இழுத்து செல்லப்படுபவர்கள் ஆறு நம்பருக்குள் அடக்கப்பட்ட கிளிப்பிள்ளைகள் அல்லது செம்மறியாடுகள் .
    அறிவுப் பொக்கிஷமான, அகிலத்தின் அருட்டகொடையான அல் குறுஆனிலும் பார்க்க பல கட்டுக் கதைகள் நிறைந்த தஃலீம் புத்தகத்தை மதிப்பார்கள் .
    எமது சமூகத்தின் கல்வி,அரசியல் பொருளாதாரம் என்பன பற்றிய அணு அளவும் அறிவற்றவர்களாகவும் பாராமுகமாகவும் இருப்பார்கள் .இவர்கள் சமூகத்தின் ஒரு சாபக்கேடே .
    வட்டி, சூது, சீதனம், மதுபோதை, இணைவைப்பு, பித்அத் போன்ற எந்தப்ப பாவங்களையும் தடுக்காமல் அவர்கள் இயக்கத்தை வளர்க்க ஆள் சேர்ப்பதில் மும்முரமாய் இருப்பார்கள் .முஸ்லீம்களின் கல்வி சுய தொழில் வறுமை போன்றவற்றிக்கான எந்த ஆகுமான முன்னெடுப்புகளிலும் ஈடுபடாமல் ,தொழில் புரிபவர்கள் ,மாணவர்கள் மற்றும் இளஞ்சர்களை கூடித்திருந்து கூட்டான்சோறு சமைத்து உண்பதில் பிடியாய் இருப்பார்கள்.ஊத்தை பிடித்த ஜூப்பாக்கள், பானை போன்ற வயிறுகள் ,உழைப்பு உடற்பயிற்சி அற்ற ஒரு சமூகத்தை ,சிந்திக்காத தெரியாத ஒரு சமூகத்தை உருவாக்கி ,பள்ளிகளை ,உலாமா சபயை அவர்கள் ஆதிக்கத்தில் வைத்திருக்கிறார்கள்

    ReplyDelete
  5. Can this Thabliq group take action against Shia Mustafa University in Colombo? If they can do that they would have done a big help to the community.

    ReplyDelete
  6. Is it necessary to JM to publish this type of letter & dividing the society. Harmony is important.

    ReplyDelete
  7. Mr.Haleem.
    Don’t sound like an idiot. There are many professionals and high profile educated individuals in Thabligi jamath ..whole world knows it. Don't blame the whole jamat for some some mistakes of individuals. For example. High qualified Doctors like professor rizvi sherif ,Professor Malhar Deen. Doctor anwer etc.. are connected to Thabligi jamath. And list continues. Are they also fools according to your articles ?.

    ReplyDelete
  8. Mr. Haleem
    There are many Thabligi social service organisation all over the country . Just check. Small example is NIDA foundation. And many orphanages are managed and funded by Thabligi members they don't do these in the name of Thablig jamath . Don’t lie because of the hatred you have on Thablig jamat. If can visit the professional programme in Colombo markaz and see . You will accept your article is filled with false information .

    ReplyDelete
  9. Mr.Haleem
    There are many millioners and billioners engaged in Thabligi jamath. If they want just to eat and sleep they can do it at home. I have seen many people who work in companies like Thabligi Shura member rafeek bhai so expo lanka and take all the benefits. And back the screen they say TJ are fools and uneducated. Those who say only beggars and fools are in Thabligi jamath should just go and check who are the owners of No limit ,Expo lanka etc..

    ReplyDelete
  10. Mr.Ghous.e
    Why Thawheed jamat can't take any action? . Why can't they break dharga and stop grave worship? . Only Bayan is not enough.

    ReplyDelete
  11. ஹலீம் என்ற காழ்ப்புணர்ச்சியாளன் தனது அறியாமையை வெளிப்படுதியுள்ளான்.அவனுக்கு தெரியாது அதில் எத்தனை விஞ்ஞானிகள் மருத்துவர்கள் பேராசிரியர்கள் என அனைத்து துறைகளிலும் மிக முக்கியமானவர்களெல்லாம் ஈடுபடுகிறார்கள் என்று.சில வருடங்களுக்கு முன் இம்தாதுள்ளா அப்பாசி என்ற ஓர் அணுவிஞ்ஞானி கூட வந்து குர்ஆனிய வசனங்கள் மட்டுமே வைத்து பயான் செய்தார்.அடுத்து சஹாபாக்களில் இருந்தது போன்று சமூகத்தில் உள்ள அனைத்து தரத்திலுள்ளவர்களும் உள்ள ஒரே அமைப்பு வங்ளாதேஸ் இஜ்திமாவில் குறித்த காலப்பகுதியில் இருகட்டங்களாக பலநாடுகளிலிருந்து 70 இலட்சம் பேர் கலந்து கொள்ளும் ஓர் அமைப்பை அறிவீனத்துடன் தொடர்புபடுத்தி பேசுவது அறிவீனத்தின் வெளிப்படேயன்றி வேறில்லை.அப்படி இல்லையாயின் மேற்சொன்ன விஞ்ஞானிகள் விளக்கம் இல்லாத மடையர்களாகவா ஈடுபடுகிறார்கள்.ஆம் என்று யாராவது சொன்னால் அல்லாஹ் "அவர்களது அறிவின் எல்லை அவ்வளவுதான் "என்று எண்ணவேண்டியதுதான். இப்படியான காழ்புணர்ச்சிக் கருத்துக்களுக்கு இடம் கொடுக்க கூடாது.

    ReplyDelete
  12. பொதுத் தலைவர் காஸிமியின் கடிதத்தைப் பார்த்தவுடன் இந்தச் செய்தியைப் பற்றிய தெளிவு இல்லாதவர்கள் தப்லீக் ஜமாஅத்தின் மீது வெறுப்பும் காஸிமியுடைய தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது அநுதாபமும்தான் ஏற்படும்.
    உண்மையில் அங்கு என்ன நடந்தது? இதுவரை இந்தப் பகுதியில் ஒரேஒரு ஜீம்மா பள்ளிதான் இருக்கிறது. அந்த ஜீம்மா பள்ளியின் கீழ் 9 பள்ளிகள் ஒற்றுமையாகச் செயற்பட்டு வருகின்றன. தற்போது இவர்கள் கட்டியுள்ள பள்ளிக்குப் பக்கத்தில் இன்னுமொரு பள்ளி இருக்கிறது. இந்தப் பள்ளியை இவர்கள் இந்த இடத்தில் கட்டவேண்டிய எந்த அவசியமும் இல்லை. இவ்வாறு தேவையே இல்லாத இடத்தில் பள்ளியைக்கட்டியது மட்டுமல்லாது அதனை ஜீம்மா பள்ளியாக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள்.
    இவர்களது கொள்கை நபிவழிக்கு முரணான சர்வதேச பிறைக் கொள்கையுடையவர்கள். இதனால் ஒற்றுமையாக இருக்கும் இந்த ஊரிலே இவர்களினால் எதிர்காலத்தில் ஊரில் பிளவுவர முடியும். குறிப்பிட்ட இந்த இடத்துக்கு சற்றுத்தூரத்தில் இன்னுமொரு தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ)தின் பள்ளியும் இருக்கிறது.ஆனால் இப்போது புதிதாக பள்ளியைக் கட்டும் இந்த தவ்ஹீத் ஜமாத் அந்த தவ்ஹீத் ஜமாத் பள்ளிக்குச் செல்லமாட்டார்கள்.
    இப்போது பள்ளியைக் கட்டும் இந்த தவ்ஹீத் ஜமாத்திலிருந்து இன்னுமொரு தவ்ஹீத் ஜமாத் பிரிந்து இவர்களுக்கு எதிராக இன்னுமொரு பள்ளியைக் கட்டுவார்கள். இது இன்சா அல்லாஹ் நடந்தேயாகும். ஏனெனில் ஹதீஸிலும் இது பற்றி முன்னறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது. மறுமை நாள் நெருங்கும் போது பள்ளிகள் அதிகரிக்கும் என்பது நபிமொழி. இவ்வாறு உண்மையில் குழப்பத்தை உண்டாக்குபவர்கள் யார்??

    ReplyDelete
  13. பொதுத் தலைவர் காஸிமியின் கடிதத்தைப் பார்த்தவுடன் இந்தச் செய்தியைப் பற்றிய தெளிவு இல்லாதவர்கள் தப்லீக் ஜமாஅத்தின் மீது வெறுப்பும் காஸிமியுடைய தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது அநுதாபமும்தான் ஏற்படும்.
    உண்மையில் அங்கு என்ன நடந்தது? இதுவரை இந்தப் பகுதியில் ஒரேஒரு ஜீம்மா பள்ளிதான் இருக்கிறது. அந்த ஜீம்மா பள்ளியின் கீழ் 9 பள்ளிகள் ஒற்றுமையாகச் செயற்பட்டு வருகின்றன. தற்போது இவர்கள் கட்டியுள்ள பள்ளிக்குப் பக்கத்தில் இன்னுமொரு பள்ளி இருக்கிறது. இந்தப் பள்ளியை இவர்கள் இந்த இடத்தில் கட்டவேண்டிய எந்த அவசியமும் இல்லை. இவ்வாறு தேவையே இல்லாத இடத்தில் பள்ளியைக்கட்டியது மட்டுமல்லாது அதனை ஜீம்மா பள்ளியாக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள்.
    இவர்களது கொள்கை நபிவழிக்கு முரணான சர்வதேச பிறைக் கொள்கையுடையவர்கள். இதனால் ஒற்றுமையாக இருக்கும் இந்த ஊரிலே இவர்களினால் எதிர்காலத்தில் ஊரில் பிளவுவர முடியும். குறிப்பிட்ட இந்த இடத்துக்கு சற்றுத்தூரத்தில் இன்னுமொரு தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ)தின் பள்ளியும் இருக்கிறது.ஆனால் இப்போது புதிதாக பள்ளியைக் கட்டும் இந்த தவ்ஹீத் ஜமாத் அந்த தவ்ஹீத் ஜமாத் பள்ளிக்குச் செல்லமாட்டார்கள்.
    இப்போது பள்ளியைக் கட்டும் இந்த தவ்ஹீத் ஜமாத்திலிருந்து இன்னுமொரு தவ்ஹீத் ஜமாத் பிரிந்து இவர்களுக்கு எதிராக இன்னுமொரு பள்ளியைக் கட்டுவார்கள். இது இன்சா அல்லாஹ் நடந்தேயாகும். ஏனெனில் ஹதீஸிலும் இது பற்றி முன்னறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது. மறுமை நாள் நெருங்கும் போது பள்ளிகள் அதிகரிக்கும் என்பது நபிமொழி. இவ்வாறு உண்மையில் குழப்பத்தை உண்டாக்குபவர்கள் யார்??

    ReplyDelete

Powered by Blogger.