Header Ads



பற்பசை ரசாயனம் பெருங்குடல் புற்று நோயை ஏற்படுத்தும்- ஆய்வில் தகவல்

பற்பசை எனப்படும் ‘டூத் பேஸ்ட்’ மக்களின் அன்றாட வாழ்க்கையில் அங்கமாகி விட்டது. அதில் ‘டிரைகுளோசன்’ என்ற நுண்ணுயிர் எதிர்ப்பு ரசாயன பொருள் உள்ளது. இவை பார் சோப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

இது பாக்டீரியாவை கட்டுப்படுத்துவதால் பெருங்குடல் புற்று நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டிரைகுளோசன் ரசாயனத்தை எலிகளின் உடலில் செலுத்தி ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது எலிகளுக்கு பெருங்குடல் புற்று நோய் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டிரைகுளோசன் ரசாயனம் பெருங்குடலில் சுழற்சி மற்றும் அவை சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கி அதன் மூலம் புற்றுநோயாக மாறுவது கண்டறியப்பட்டுள்ளது.

‘டிரைகுளோசன்’ என்ற ரசாயன பொருள் மக்கள் பயன்படுத்தும் 2 ஆயிரம் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. இஸ்லாம் வாழ்க்கையின் அனைத்துக்  துறைகளுக்கும் தீர்வு கொண்டுள்ள மார்க்கம் என்பதன் அடிப்படையில், பல் சுகாதாரத்துக்கும்அது வழி சொல்லியே உள்ளது.

    நபியவர்கள் மிஸ்வாக் குச்சி மூலம் பல் சுத்தம் செய்பவர்களாக இருந்தார்கள்.
    இதனுடைய நன்மைகளாவன:

    பற்களில் உள்ள பக்டிரியா கிருமிகளை அழிக்கிறது.

    பல்கறைகளை நீக்குகிறது, வாயை சுத்தப்படுத்துகிறது.

    பல் ஈறுகளுக்கு சக்தி அளிக்கிறது.

     சளியை நீக்குகிறது.

    வாயின் துர்நாற்றத்தை போக்கி நறுமணத்தை அளிக்கிறது.

    பித்தத்தை போக்குகிறது.

    பார்வையை கூர்மை ஆக்குகிறது.

    நபியவர்களின் முறையைக் கையாள்வதினால் அனாவசியமான ரசாயனப் பாதிப்புகளில் இருந்து விடுபடுவதோடு நபிவழியை -  'சுன்னத்தை' கடைப்பிடித்த நன்மைகளையும் இறை உவப்பையும் பெற்றுக்கொள்கிறோம்.
     

    ReplyDelete
  2. நுஸ்ரான் மௌலவி சமூகத்தில் இவ்வாறான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றார். அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!!!

    ReplyDelete

Powered by Blogger.