Header Ads



பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கு உயிரைத், தியாகம் செய்யவேண்டிய காலகட்டத்தில் வாழ்கின்றோம்

இந்நாட்டிலுள்ள ஏனைய மக்கள் தொகுதியினருக்கு உலகில் செல்வதற்கு பல நாடுகள் உள்ளது, ஆனால் பௌத்தர்களுக்கு உள்ள ஒரே நாடு இலங்கை மாத்திரமே என தம்புள்ளை அதுபாரயாய ஸ்ரீ போதிருகாராமா விகாராதிபதி அலுத்கம உபனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று பெரும்பாலான இராணுவத்தினர் சிறையிலேயே உள்ளனர். இந்த இராணுவத்தினருக்காக கருத்துத் தெரிவிக்க முன்வந்தால், காவியுடையைக் கலட்டிவிட்டு சிறையில் இருக்கவேண்டி வருகின்றது. இது எமது தேசியப் பொறுப்பாகும் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய உரிமையைப் பாதுகாப்பதற்கும் இந்த பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கும் உயிரைத் தியாகம் செய்யவும் முன்வர வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

2 comments:

  1. Can you name one country for Srilankan Muslims or Hindhus based on ethnic problems??

    ReplyDelete
  2. ஏம்பா, புத்தர் பிறந்த நேபாளம், மற்றும் தாய்லாந்து, மியன்மார், சீனா போன்ற நாடுகளும் பௌத்த நாடுகள் தானே உமது கண்களுக்கு அவை தெரியவில்லையா? என்ன நீர் கெட்ட கேடு எங்கு சென்றாலும் உம்மால் வாழ முடியாது.

    நீதி என்றால் யாவருக்கும் சமமாக தானே இருக்க வேண்டும் தவறு செய்தால் யாராக இருந்தாலும் சிறையில் வைப்பதை தானே தண்டனை என்கிறார்கள் அப்போ தவறிழைத்தவன் இராணுவம் என்ன காவி என்ன கைதி கைதி தானே அதில் என்ன வேறுபாடு.

    புத்த பெருமான் இராணுவத்துக்கும், காவிக்கும் சட்டத்தை, நீதியை வளைத்து அல்லது நொடித்து பாவிக்கும் படி கூறியிருக்கிறாரோ?

    ReplyDelete

Powered by Blogger.