Header Ads



முஸ்லிம்­களும் காணாமல் ஆக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

கடந்த யுத்த கால சூழ்­நி­லையில் தமி­ழர்கள் மாத்­திர மன்றி, சிங்­கள, முஸ்லிம் மக்­களும் காணாமல் ஆக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அதே போன்று வடக்கு, கிழக்கில் மாத்­தி­ர­மன்றி, தென் இலங்­கை­யிலும் காணாமல் ஆக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தின் ஆணை­யாளர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் தெரி­வித்தார்.

காணாமற் போனோ­ருக்­கான அலு­வ­லகம், தனது பிராந்­தியச் சந்­திப்பை நேற்று, திரு­கோ­ண­ம­லையில் நடத்­தி­யது. இதன்­போது, நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கருத்து தெரி­விக்கும் போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர், மேலும் அங்கு கருத்துத் தெரி­விக்­கையில்,

உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிக் கொண்டு வர வேண்டும். பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் சாட்­சிகள் பாது­காக்­கப்­படும். தேடு­வது என்­பது மிகவும் சிர­ம­மான காரி­ய­மாகும். பொய்­யான உறுதி மொழி­களை எங்­களால் வழங்க முடி­யாது. ஒரு மாதத்­திலோ அல்­லது இரு மாதத்­திலோ இதற்கு நிவா­ரணம் பெற்றுத் தர முடியும் என பொய் கூற மு­டி­யாது.

பாதிக்­கப்­பட்­ட­வர்கள் எதனை எதிர்­பார்க்­கி­றார்கள் என்று சொன்னால் தான் தீர்வு காண முடியும்.

30 வரு­டங்­க­ளாக நடை­பெற்ற இந்த துர­திஷ்­ட­வ­ச­மான நிகழ்வு இனிமேல் இந்த நாட்டில் நிகழக் கூடாது என்­ப­தற்­கா­கத்தான் இந்த அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது

இந்த அலு­வ­லகம் தொடர்பாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் மனப்­பாங்கு என்ன என்­பதை நாங்கள் அறிய வேண்டும்.

வட­கி­ழக்கில்  8 அலு­வ­ல­கங்­களும் வெளியில் 4 அலு­வ­ல­கங்­களும் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இதில் திரு­கோ­ண­ம­லை­யிலும் ஒரு அலு­வ­லகம் அமை­ய­வுள்­ளது. தலைமை காரி­யா­லயம் கொழும்பில் அமைந்­துள்­ளது.

800 க்கும் மேற்­பட்ட மக்கள் இங்கு வந்து அலு­வ­லகம் தொடர்­பான விளக்­கத்தைப் பெற்­றி­ருக்­கி­றார்கள்.

400க்கும் மேற்­பட்ட மக்கள் இங்கு கவ­ன­யீர்ப்பு போராட்டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தார்கள். அவர்­களை நாங்கள் அழைத்து அலு­வ­லகம் தொடர்­பான சந்­தே­கங்­க­ளுக்கு விளக்கம் கொடுத்தோம்.

பாதிக்­கப்­பட்ட  தமிழ், சிங்­கள மற்றும் முஸ்லிம் மக்கள் பல்­வேறு எதிர்­பார்ப்­போடு இதில் கலந்து கொண்­டனர். மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

இரா­ணு­வத்­தாலும் பாதிக்கப் பட்­டிரு க்கிறார்கள். புலி­க­ளாலும் பாதிக்கப்பட்­டி­ருக்­கி­றார்கள்.  இது நான்­கா­வது சந்­திப்பு ஆகும். இதற்கு முன்னர் மன்னார், மாத்­தறை, முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­ட­ங்­களில் நடை­பெற்­றி­ருக்­கின்­றது.

இதற்கு முன்னர் அமைக்­கப்­பட்ட ஆணைக்குழுக்­க­ளுக்கு முன்பாக பாதிக்­கப்­பட்­ட­வர்கள் சாட்­சி­யங்கள் வழங்­கி­யி­ருக்­கி­றார்கள். அதில் இருந்தும் நாங்கள் சாட்­சி­யங்­களைப் பெற்­றி­ருக்­கிறோம் என்று தெரி­வித்தார். அலு­வ­ல­கத்தின் ஆணை­யாளர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் தலை­மையில் நடை­பெற்ற இந்த மக்கள் சந்­திப்பில் ஆணை­யா­ளர்­க­ளான மேஜர் ஜெனரல் முகாந்தி பீரிஸ், எஸ்.கே. லிய­னகே, மிராக் றஹீம், ஜெய­தீப புண்­ணி­ய­மூர்த்தி, கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

-Vidivelliகியாஸ் ஷாபி

No comments

Powered by Blogger.