Header Ads



பிறை விடயத்தை, நிதானமாக அணுகுவோம்


இந்த ஆண்­டுக்­கான ஷவ்வால் மாத தலைப்­பிறை தொடர்பில் சர்ச்­சைகள் தோன்­றி­யுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. ரமழான் 28 இல் பிறை தென்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புள்­ள­தாக வானிலை ஆய்­வு­களை முன்­னி­றுத்­தியும் இம்­முறை இலங்­கையில் தாம­தித்தே ரமழான் ஆரம்­ப­மா­ன­தாக முன்­வைக்­கப்­படும் கருத்­துக்­களைத் தொடர்ந்­துமே இந்த சர்ச்சை தோன்­றி­யுள்­ளது.

இந் நிலையில் இவ்­வா­றா­ன­தொரு சிக்­க­லான சூழ்­நி­லையில் நாம் எவ்­வா­றான நிலைப்­பாட்டை எடுக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா பத்வா ஒன்­றையும் வெளி­யிட்­டுள்­ளது.

 இதற்­க­மைய '' உலகின் ஒரு பகு­தியில் ரமழான் மாதத்­திற்­கான தலைப் பிறை தென்­பட்டு அல்­லது ஷஃபான் மாதத்தை முப்­ப­தாகப் பூர்த்­தி­செய்து ரமழான் மாதத்தின் நோன்பை ஆரம்­பித்­ததன் பின்னர் இரு­பத்­தெட்­டா­வது நாளில் தலைப் பிறை தென்­ப­டு­வ­தற்­கான  வாய்ப்பு இருந்து உறு­தி­யான சாட்­சிகள் மூலம் பிறை தென்­பட்ட விடயம் நிரூ­பிக்­கப்­பட்டால் இரு­பத்­தொன்­ப­தா­வது நாளில் பெருநாள் கொண்­டா­டி­விட்டு பிறி­தொரு நாளில் ஒரு நோன்பை கழா செய்­வதும் அவ­சி­ய­மாகும்'' என உலமா சபையின் பத்­வாவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மைய எதிர்­வரும் 14ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை மாலை நாட்டின் எந்தப் பகு­தி­யி­லா­வது புனித ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப் பிறை தென்­பட்டால் இலங்­கையில் எதிர்­வரும் 15 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை நோன்புப் பெருநாள் கொண்­டா­டப்­படும் என்றும் இவ்­வாறு புனித ரமழான் மாதத்­தினை 28 நாட்­க­ளாக பூர்த்தி செய்ய வேண்­டிய நிலை ஏற்­பட்டால் இந்த கழா நோன்­பினை எதிர்­வரும் 16ஆம் திகதி சனிக்­கி­ழமை (புனித ஷவ்வால் மாதத்தின் பிறை 2ஆம் நாள்) பிடிக்க வேண்டும் எனவும்  அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி தெரி­வித்­துள்ளார்.

இந்த பத்வா ஒரு­பு­ற­மி­ருக்க, இலங்­கையில் பிறை தொடர்­பான தீர்­மா­னங்­களை வெளியி­டு­வ­தற்­கான அதி­கா­ரத்தைக் கொண்­டுள்ள கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலும் இது விட­யத்தில் அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­யுள்­ளது. இதற்­க­மைய பிறை 29 இல் அதா­வது எதிர்­வரும் 15 ஆம் திக­தியே பிறை பார்க்­கப்­பட வேண்டும் என  பிறைக் குழுத் தலைவர் மௌலவி ஜே.அப்துல் ஹமீத் பஹ்ஜி விடுத்­துள்ள செய்­தியில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. உலமா சபையும் கூட பிறை பார்ப்­ப­தற்­கான நாள் 15 ஆம் திகதி என்றே தெரி­வித்­துள்­ளது.

எனினும் ரமழான் 28 இலும் பிறை தென்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளதால் அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது தொடர்பில் பிறைக் குழு கூடி தீர்­மானம் எடுக்கும் என்றும் உலமா சபை மற்றும் பெரிய பள்­ளி­வாசல் தரப்­புகள் தெரி­விக்­கின்­றன.

இப் பின்­ன­ணி­யில்தான் இம்­முறை பிறை 28 இல் பெரு­நாளா அல்­லது பிறை 29 இல் பெரு­நாளா அல்­லது பிறை 30 இல்தான் பெரு­நாளா என்ற பெரும் குழப்­பத்தில் இலங்கை முஸ்­லிம்கள் உள்­ளனர். எது எப்­ப­டி­யி­ருப்­பினும் வியா­ழக்­கி­ழமை மாலை அனை­வரும் பிறையைத் தேடப் போகி­றார்கள் என்­பது மாத்­திரம் இப்­போ­தைக்கு உண்மை. அவ்­வாறு பிறை தென்­பட்ட தக­வல்கள் நாட்டின் ஏதா­வ­தொரு பகு­தி­யி­லி­ருந்து கிடைக்கப் பெற்றால் அதனை பிறைக்­குழு எவ்­வாறு கையாளப் போகி­றது என்­பதே இங்­குள்ள சவா­லாகும்.

கடந்த 2013 இல் கிண்­ணி­யாவில் இதே­போன்­றுதான் பிறை கண்­டமை அப் பகுதி ஜம்­இய்­யதுல் உலமா கிளை­யினால் உறுதி செய்­யப்­பட்டும் கூட அதனை அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவோ பிறைக்­கு­ழுவோ ஏற்றுக் கொள்­ள­வில்லை. இதனால் முஸ்­லிம்கள் மத்­தியில் பெரும் குழப்ப நிலை தோன்­றி­யதை நாம் அறிவோம். அவ்­வா­றா­ன­தொரு கசப்­பான அனு­பவம் இம்­முறை ஏற்­பட்­டு­விடக் கூடாது. அதற்கு பிறையைத் தீர்மானிக்கும் சட்ட, சமூக அங்கீகாரம் கொண்ட தலைமைகள் இடமளிக்கவும் கூடாது.

இதுவிடயத்தில் சம்பந்தப்பட்ட மார்க்க தலைமைகள் தமது கடமையை சரிவரச் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
-Vidivelli

1 comment:

  1. அதாவது வியாழன் மாலை பிறை கண்டதாக யாராவது அறிவித்தால் அதை சட்ட அங்கீகாரம் கொண்ட தலைமைகள் ஏற்றுக் கொல்லக் கூடாதென்று இபபொழுதே சொல்லி வைக்கிரீர்கள்!

    ReplyDelete

Powered by Blogger.