Header Ads



சிங்கள இனவாத பைத்தியங்களுக்கு, அரசாங்கம் அஞ்சுகிறது - விக்ரமபாகு

வடக்கிலும் தெற்கிலும் பலர் காணாமல் போயுள்ளனர் என்பதை சட்டமா அதிபர் திணைக்களம் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் காணாமல் போனவர்களுக்கு இதுவரை நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தவறியுள்ளதாக நவசமசமஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சிங்கள இனவாத பைத்தியங்கள் அதனை எதிர்ப்பதாகவும் அரசாங்கமும் சிங்கள இனவாத பைத்தியங்களுக்கு அஞ்சி அவர்களுக்கு ஏற்ற வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் குழுவின் கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சிங்கள இனவாத பைத்தியங்கள் காரணமாக காணாமல் போனவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது, அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் உட்பட நாட்டுக்கு முக்கியமான எதனையும் செய்ய முடியாமல் போயுள்ளது.

முதலாளித்துவ தலைவரான ரணில் விக்ரமசிங்க போன்ற வங்கி திருடர்களுக்காக ஏன் ஆதரவாக செயற்படுகிறீர்கள் என என்னிடம் பலர் கேட்கின்றனர். சிங்கள இனவாத பைத்தியங்களுக்கு எதிராக இருக்கும் எந்த வங்கி திருடனுடனும் இணைந்து போராட தயார். வங்கி திருட்டு என்பது சில்லறை விடயமல்ல. சிங்கள இனவாத பைத்தியத்தை விட பயங்கரமானது.

சிங்கள இனவாத அதிகார பைத்தியத்தை குணப்படுத்த சமூகத்தில் உரையாடல்களை ஏற்பத்த வேண்டும். அவ்வாறு செய்யாமல் நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவோ அரசியலமைப்பு சீர்த்திருங்களையோ மேற்கொள்ள முடியாது எனவும் விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.