Header Ads



பிறை சொன்ன சேதி...


அறபி  (சுல்பிகார் நம்பாளி) 

ஷவ்வாலின்  பிறை 
வவ்வாலாய்  அலை  
பற்றிய  தலை 
கனல்கிறது  உலை  உலை  

விசைப்  பழம்
ஒரு  முழமாய்  ஒடுங்கி
காற்றுடன்  கக்க
வாந்திமுன்  வாலாட்டும் 

தலைப்பிறை  மூன்று  தா 
இறைவா
பெருநாள் 
இல்லை  பெருநாள்
இரண்டும்  விட்டதென்

துன்னு  கெட்டான்  துலுக்கன்
பழைய  பல்லவி 
ஒற்றுமை  ஏங்கிடும்  கிறுக்கன்
புதிய  ஓலம் 

எவரடா
எங்கனயட 
எப்போழடா
ஒடுங்கிப்போனது  குரல்
பிறையை  சிறையிலிட்டு 
பேசுவோமென 
அரங்கம்  அமர்ந்தது 

வாசத்தை  வீசிவிட்டு 
கைப்பந்தம்  தேடி
அலைந்தது  ஒற்றுமை

கனல்கள்  ஆடியது
சைத்தான்கள்  பாடியது 
விழிகள்  வறண்டு 
அழுதது  சாந்தி 

மந்திகள்  அறைந்தன
மத்தளம்  தாளம் 
அவலும்  கரும்பும் 
சேர்ந்தே  கிடைத்ததால் 

எங்கே  போயின  எம்மவர்  ஞானம்
பத்திரம்  பாத்திரம்  
கிடைத்த  இடுக்கில் 
ஓணான்கள்  குடிபுகும் 

அனுதாப  முகவரியில் 
ஆப்புக்கூட்டம் 
வாருங்கள் 
கூவத்தை  நிறைக்காமல் 
ஷம்  ஷம்  பருகுவோம் 

எளியவனின்  விண்ணப்பம் 
பத்வா
எழுத்துப்  பிழைத்து 
கத்னவாக்கதீர்


No comments

Powered by Blogger.