Header Ads



எம்மிடம் இருப்பதும், இல்லாததும்...!!

எம்மிடம் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் குறையறிவுடன் காணப்படுகிறோம்.

எம்மிடம் வைத்தியசாலைகள் அதிகமாக உள்ளன. ஆனால் நோயாளிகள் இன்னும் மிகையாக உள்ளனர்.

எம்மிடம் அதிகளவில் விவசாயம் பண்ணப்படுகிறது. ஆனால் பசித்திருப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம்.
எம்மிடம் கம்பனிகள் நிறைய உள்ளன. ஆனால் வேலையற்றோர் நிறைந்து வழிகின்றனர்.

எம்மிடம் நிறைய திருமணங்கள் இடம்பெறுகின்றன. ஆனால் விவாகரத்துக்கள் மிக அதிகம் நிகழ்கின்றது.

எம்மிடம் அதிகமான பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால் அறிவீனமே எம்மீது ஆதிக்கம் செலுத்துகிறது.

எம்மிடம் நீதிமன்றங்கள் நிறைந்துள்ளன. ஆனால் நீதியை வெகு சொற்பமாகவே காணமுடிகிறது.

எம்மிடம் நிறைய அரசுகள் உள்ளன. ஆனால் சேவைகள் மிகக் குறைவாக காணப்படுகிறது.

எம்மிடம் நிறைய கவிதைகள் உள்ளன. எனினும் மொழித்திறன் மிக அரிது.

எம்மிடம் தலையணைகள் நிறைந்துள்ளன. ஆனால் தூக்கம் மிகக் குறைவு.

எம்மிடம் நிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் ஆரோக்கியம் மருந்துக்கும் கிடையாது.

எம்மிடம் நிறைய வாசிகசாலைகள் உள்ளன. ஆனால் வாசிப்புக் கலாச்சாரம் காசிக்கும் இல்லை.

எம்மிடம் நகைச்சுவைகள் நிறைந்துள்ளன. ஆனால் சிரிப்பு மிகக் குறைவு.

எம்மிடம் குர்ஆன் பிரதிகள் தாராளமாய் உள்ளன. ஆனால் மார்க்கம் மிகவும் சொற்பமாகவே உள்ளது.

எம்மிடம் மஸ்ஜிதுகள் நிரம்பி வழிகின்றன. ஆனால் ஈமான் மிகவும் குறைவு.

எம்மிடத்தில் உபதேசங்கள் அதிகமாய் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

எம்மிடத்தில் நிறைய மரணங்கள் நிகழ்கின்றன. ஆனால் படிப்பினைகள் குறைவாக பெறப்படுகின்றன.

எம்மிடம் நிறைய குடும்பங்கள் இருக்கின்றன. ஆனால், உறவுகளை சேர்த்து நடப்பது குறைவாக உள்ளது.

எம்மிடம் நிறைய குழந்தைகள் உள்ளனர். ஆனால் பயிற்றுவிப்பு மிகவும் குறைவு.

எம்மிடம் நிறைய பூங்காக்கள் உள்ளன. ஆனால் பொழுதுபோக்குகள் மிகக் குறைவு.

எம்மிடம் செய்திகள் நிறைந்துள்ளன. ஆனால் தகவல்கள் மிகக் குறைவு.

எம்மிடத்தில் காதல் கடிதங்கள் நிறையப் புலங்குகின்றன. ஆனால் காதல் மிக அரிது.

எம்மிடம் நிறைய மூடிகள் உள்ளன. ஆனால் கதகதப்பு வெகு சொற்பம்.

எம்மிடம் நிறைய கடிகாரங்கள் உள்ளன. ஆனால் நேரம் பற்றிய கவனம் மிகக் குறைவு.

A W M Basir + அத்ஹம் ஷர்காவி

1 comment:

  1. It is somewhat true but all Muslim poltiican such as kings; princes and rulers in Muslim countries destroyed them all..do not name public blame ruthless dictators.

    ReplyDelete

Powered by Blogger.