June 19, 2018

"வினைத்திறனான பிறைக்குழுவை, அமைப்பதற்கான சில ஆலோசனைகள்"

-சப்ராஸ் புஹாரி-

இன்­றி­ருக்கும் பிறைக்­கு­ழுவின் மீது மக்கள் நம்­பிக்­கை­யி­ழந்து வரும் நிலையில் தீர்­வாக பிறைக்­கு­ழுவில் மாற்­றங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என பர­வ­லாகப் பேசப்­ப­டு­கின்­றன.

இந்­நி­லையில் அக்­குழு எவ்­வாறு அமைய வேண்டும் என்­ப­தற்­கான ஓர் ஆலோ­ச­னையை இங்கு முன்­வைக்க விரும்­பு­கிறேன்.

 முதலில் பிறை பற்­றிய தீர்­மா­னத்தை மேற்­கொள்ள வேண்­டி­ய­வர்கள் யார் என்ற கேள்­விக்கு விடை காண­வேண்டும்.

இந்தக் கேள்­விக்கு பதில் தேட­வேண்­டு­மானால் நாம் பிறை பற்­றிய சில அடிப்­ப­டை­களைப் புரிந்­து­கொள்ள வேண்டும். பிறை சம்­பந்­த­மான முடிவு எடுப்­ப­தற்கு இரண்டு வித­மான நிப­ணர்கள் தேவைப்­ப­டு­கி­றார்கள். முத­லா­வது, நாம் பின்­பற்­று­வது தேசியப் பிறையா, பிராந்­தியப் பிறையா, சர்­வ­தேசப் பிறையா அல்­லது பிறையைக் கணிப்­பதா என்ற கேள்­விக்கு விடை தர­வேண்­டிய மார்க்க அறி­ஞர்கள், இக்­கேள்­விக்கு விடை கண்டு விட்டால் அடுத்த கேள்வி ஒவ்­வொரு மாதமும் பிறை பற்­றிய முடிவை எடுக்க வேண்­டி­ய­வர்கள் யார்? என்­பது.

அப்­ப­ணியைத் தற்­பொ­ழுது பிறைக்­குழு செய்து வரு­கி­றது. தற்­பொ­ழுது உள்ள பிறைக்­குழு பொருத்­த­மா­னது தானா அல்­லது அதில் மாற்றம் நிகழ வேண்­டுமா என்­பது பற்­றியே சில கருத்­துக்­களை முன்­வைக்க விரும்­பு­கிறேன். 

இங்கு நான் தற்­போது இருப்­ப­வர்­களின் மீதுள்ள நம்­ப­கத்­தன்மை பற்றி பேச முனை­ய­வில்லை. மாறாக அவர்­களின் தகைமை பற்­றியே பேச விழை­கிறேன்.

பிறை என்­பது வானியல் என்ற இயற்கை விஞ்­ஞானப் பிரிவைச் சார்ந்த ஒரு விடயம். பிறைக்­கு­ழுவின் பொறுப்பு குறித்த தினத்தில் பிறை தென்­ப­டு­வ­தற்கு சாத்­தி­யங்கள் உள்­ள­னவா, பிறை தென்­பட்­டதை உறு­திப்­ப­டுத்தல் போன்­ற­னவே. பிறை தென்­பட்­டதா இல்­லையா என்ற கேள்­விக்கு விடை கிடைத்து விட்டால் மாதத்தின் ஆரம்­பத்தைத் தீர்­மா­னிப்­பது எப்­படி என்­பது அனைத்து முஸ்­லிம்­க­ளுக்கும் தெரிந்த விடயம். பிறை குறித்த தினத்தில் தெரி­யுமா இல்­லையா? தென்­பட்­ட­தாகச் சொல்­லப்­ப­டு­வது நம்­ப­க­மா­னதா இல்­லையா? என்ற தீர்­மானம் எடுப்­ப­தற்குத் தேவை­யான அறிவு வானியல் பற்­றிய அறிவே.

வானியல் சம்­பந்­த­மாக ஆழ்ந்த அறி­வில்­லா­த­வர்­க­ளிடம் பிறை பற்­றிய தீர்­மா­னத்தை எடுக்கும் பொறுப்பைக் கொடுப்­பதோ அல்­லது அவர்­களை இக்­கு­ழுவில் உள்­ள­டக்­கு­வ­திலோ எந்த அர்த்­தமும் இல்லை.

உண்­மையில் வானி­யலை முறை­யாகக் கற்­காத இஸ்­லா­மிய அறி­ஞர்­களும் இக்­கு­ழு­வுக்குப் பொருத்­த­மற்­ற­வர்கள் தான். காரணம், நான் ஏற்­க­னவே குறிப்­பிட்­டது போல் இது விஞ்­ஞா­னத்தின் அடிப்­ப­டையில் முடிவு எடுக்கப் பட­வேண்­டிய விடயம்.

இலங்கை ஒரு இஸ்­லா­மிய நாடாக இருந்­தி­ருந்தால் பிறை பற்­றிய முடிவை அறி­விக்கும் பொறுப்பு இலங்கை வானிலை ஆய்வு மையத்­திற்கே வழங்­கப்­பட்­டி­ருக்­க­வேண்டும். அல்­லது ஐக்­கிய அமெ­ரிக்கா இஸ்­லா­மிய நாடாக இருந்தால் இப்­பொ­றுப்பு NASA வுக்கு வழங்கப் பட்­டி­ருக்­க­வேண்டும்.

இலங்­கையில் பிறைக்­குழு எவ்­வாறு அமைய வேண்டும்? சட்ட ஆலோ­ச­னை­க­ளுக்கு சட்­டத்­த­ர­ணி­களை நாடு­கிறோம், சுகா­தாரப் பிரச்­சி­னை­க­ளுக்கு வைத்­தி­யர்­க­ளிடம் தீர்வு கேட்­கிறோம், தொழி­நுட்ப ஆலோ­ச­னை­க­ளுக்கு பொறி­யி­ய­லா­ளர்­களை நாடு­கிறோம். அதே போல் வான­வியல் சார்ந்த பிரச்­சி­னைக்கு தீர்வை வான­வியல் நிபு­ணர்­க­ளி­டமே பெற­வேண்டும். 

எமக்கு இலங்கை வானிலை அவ­தான நிலை­யத்தில் முழு­மை­யாகத் தங்­கி­யி­ருக்க முடி­யாத நிலையில் நாம் எமது சமூ­கத்­தி­லுள்ள வானி­யலை முறைப்­படி கற்ற துறைசார் நிபு­ணர்­களைக் கொண்ட ஒரு குழு அமைக்­கப்­பட வேண்டும், அக்­கு­ழுவில் வானி­யலைப் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் கற்­பிக்கும் விரி­வு­ரை­யா­ளர்கள், வானியல் சார்ந்த ஆய்­வு­களில் ஈடு­பட்­டி­ருக்கும் விஞ்­ஞா­னிகள், வானி­ய­லுடன் சம்­பந்­த­மான உதா­ர­ண­மாக, வானிலை ஆய்வு மையம் போன்ற நிறு­வ­னங்­களில் வேலை செய்யும் நிபு­ணர்கள் போன்­ற­வர்­களை உள்­ள­டக்­கி­ய­தாக இருக்­க­வேண்டும். இவர்­களின் பொறுப்பு பிறை தென்­பட வாய்ப்­புகள் உள்­ளதா இல்­லையா தென்­பட்­ட­தாகச் சொல்லப் படும் தகவல் நம்­ப­க­மா­னதா இல்­லையா போன்ற தீர்­மா­னங்­களை எடுப்­பதும் எத்­தி­னத்தில் குறிந்த மாதம் ஆரம்­ப­மாகும் என்ற முடிவை அறி­வித்­த­லுமே.

இம்­மு­டிவை அறி­விப்­ப­தற்கு மார்க்க அறி­ஞர்கள் போன்ற வேறு துறை சார்ந்­த­வர்கள் அவ­சி­ய­மில்லை. பிக்ஹு சார்ந்த பிரச்­சி­னைகள் வரும்­போது உதா­ர­ண­மாக, இரு­பத்து எட்டு நாட்­களில் அடுத்த மாதத்­திற்­கான தலைப்­பிறை தென்­பட்டால் என்ன செய்­வது போன்ற பிரச்­சி­னை­க­ளுக்கு மார்க்கத் தீர்ப்பை வழங்கும் பொறுப்பு ஜம்­இய்­யத்துல் உல­மா­வுக்கு வழங்­கலாம். ஆனால் இவ்­வா­றான பிரச்­சி­னைகள் அடிக்­கடி ஏற்­ப­டு­வ­தில்லை என்ற வகையில் அவர்கள் பிறைக்­கு­ழுவில் உள்­ள­டக்­கப்­பட வேண்­டி­ய­தில்லை.

பிறைக்­கு­ழு­வுக்கு உறுப்­பி­னர்­களைத் தெரிவு செய்தல் மற்றும் பிறைக்­கு­ழுவின் முடி­வு­களை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்தல் போன்றவற்றை முஸ்லிம் கலாசாரத் திணைக்களம் பொறுப்பேற்பது பொருத்தமாக அமையும். எதிர்வரும் காலங்களில் பிறையைத் தீர்மானிக்கும் அதிகாரம் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழேயே கொண்டுவரப்படும் என அமைச்சர் ஹலீம் குறிப்பிட்டுள்ளமையும் வரவேற்கத்தக்கது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலும் ஜம்மியத்துல் உலமாவும் இல்லாத பிறைக்குழு என்பதை ஜீரணிப்பது பலருக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால் நிதானமாகவும் ஆழமாகவும் சிந்தித்துப் பார்த்தால் இக்கருத்தின் நியாயம் புரியும்.

9 கருத்துரைகள்:

வேலையில்லாத நாய் பூனையை பிடித்து சிரைத்துக் கொண்டிருக்குமாம் என்பதை போல் சில வேலையற்றவர்கட்டு இன்னமும் இந்த பிறை விடயம் தீனி போட்டு கொண்டிருகின்றது போல் தெரியிறது. நாட்டில் எவ்வெளவோ பிரச்சினைகள் சமூகச் சீர்கேடுகள் இடம் பெறுகின்றன அவற்றைப் பற்றி பேசுவதற்கு சிந்திப்பதற்கு எவருக்கும் நேரம் கிடைப்படுல்லை. பெருநாள் முடிந்து நான்டு நாட்கள் கடந்து விட்டன இன்னும் பிறையை தூக்கிப்பிடித்துக் கொண்டிருப்பதற்கு வெட்கமில்லையா?

நல்ல ஒரு விஞ்ஞான கட்டுரை...அவ்வளவுதான் வானியலை படிக்காவிட்டால் உலமாக்கள் தரமற்றவர்கள் என்றால் அந்த வானியியல் கல்வி தேவையா? என்று நாம் முடிவெடுக்க கடமை பட்டுள்ளோம். மார்க்கத்தில் குறைவு நிலை ஒன்றை அல்லாஹ்வின் தூதர் விட்டு விட்டு சென்றுவிட்டார்கள் எல்லா உலமாக்களும் இந்த கோஸை முடிக்கவும்.

Don't fool the people in Sri Lanka
More than 1000 years our forefathers
Fallow the salalfis.
Now you trying to get help from NASA .
be quite! 98%of Muslims in Sri Lanka
Following grand mosque only.

ஆக மொத்தத்தில் “ Think out of box” என்பது போல், மார்க்க அறிவு இல்லாதவர்களிடம் மார்க்கத்தின் முடிவுகளை தீர்மானிப்பதற்கு அனுமதி வழங்க முனைகின்றோம். அல்லாஹ்தான் இனி முஸ்லிம்களைப் பாதுகாக்க வேண்டும். முஸ்லிம் சமய கலாசார அமைச்சு அவர்களின் கடமையை செய்யும் லட்ஷணத்தை ஹஜ் விஷயத்திலும் ஈச்சம் பழத்திலும் பார்த்தோமே. இனி பிறையைத் தீர்மானிப்பதும் அவர்களிடமா? ஒருவனுக்கு எழுந்து நிற்பதற்கே பலமில்லையாம் ஆனால் ஏழு பொண்டாட்டி தேவையாம் என்பதுபோலுள்ளது. பிறைக்குழுவில் பிரச்சினைகள் இருப்பது என்னமோ உண்மைதான், அதனை நெறிப்படுத்தி நேர்படுத்தாமல், மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொழுத்தும் கதையாய், தங்களின் சுய லாபத்திற்காய் சில கயவர்கள் அவர்களது நிகழ்சி நிரலில் வேலைசெய்கின்றனர் என்பதே உண்மை.

'My comments', appears jobless, this is a very informative article and Shafraz has made some valid and valuable points. If you think this is a n old issue, why did you waste your time commenting about it. It appears, you are shameless guy without having the courage to reveal your TRUE NAME.


>> பிறை என்­பது வானியல் என்ற இயற்கை விஞ்­ஞானப் பிரிவைச் சார்ந்த ஒரு விடயம். பிறைக்­கு­ழுவின் பொறுப்பு குறித்த தினத்தில் பிறை தென்­ப­டு­வ­தற்கு சாத்­தி­யங்கள் உள்­ள­னவா, பிறை தென்­பட்­டதை உறு­திப்­ப­டுத்தல் போன்­ற­னவே. பிறை தென்­பட்­டதா இல்­லையா என்ற கேள்­விக்கு விடை கிடைத்து விட்டால் மாதத்தின் ஆரம்­பத்தைத் தீர்­மா­னிப்­பது எப்­படி என்­பது அனைத்து முஸ்­லிம்­க­ளுக்கும் தெரிந்த விடயம். பிறை குறித்த தினத்தில் தெரி­யுமா இல்­லையா? தென்­பட்­ட­தாகச் சொல்­லப்­ப­டு­வது நம்­ப­க­மா­னதா இல்­லையா? என்ற தீர்­மானம் எடுப்­ப­தற்குத் தேவை­யான அறிவு வானியல் பற்­றிய அறிவே.

வானியல் சம்­பந்­த­மாக ஆழ்ந்த அறி­வில்­லா­த­வர்­க­ளிடம் பிறை பற்­றிய தீர்­மா­னத்தை எடுக்கும் பொறுப்பைக் கொடுப்­பதோ அல்­லது அவர்­களை இக்­கு­ழுவில் உள்­ள­டக்­கு­வ­திலோ எந்த அர்த்­தமும் இல்லை.

உண்­மையில் வானி­யலை முறை­யாகக் கற்­காத இஸ்­லா­மிய அறி­ஞர்­களும் இக்­கு­ழு­வுக்குப் பொருத்­த­மற்­ற­வர்கள் தான். காரணம், நான் ஏற்­க­னவே குறிப்­பிட்­டது போல் இது விஞ்­ஞா­னத்தின் அடிப்­ப­டையில் முடிவு எடுக்கப் பட­வேண்­டிய விடயம்.

இலங்கை ஒரு இஸ்­லா­மிய நாடாக இருந்­தி­ருந்தால் பிறை பற்­றிய முடிவை அறி­விக்கும் பொறுப்பு இலங்கை வானிலை ஆய்வு மையத்­திற்கே வழங்­கப்­பட்­டி­ருக்­க­வேண்டும். அல்­லது ஐக்­கிய அமெ­ரிக்கா இஸ்­லா­மிய நாடாக இருந்தால் இப்­பொ­றுப்பு NASA வுக்கு வழங்கப் பட்­டி­ருக்­க­வேண்டும்.<<

இது தான் இன்றைய பிரச்சினை : முக நூல் முல்லாக்களின் தீர்ப்பு, முதலில் இஸ்லாத்தை ஓரளவாவது கற்று அதன் பின்னர் இவ்வாறான விஷயத்தில் மூக்கை நுழைப்பதே நல்லது. உங்களது சொந்தக்கருத்தை இஸ்லாமியக்கருத்தாக பதிவு செய்ய உமக்கு என்ன அருகதை இருக்கின்றது? உமது சொந்தக்கருத்தை தெரிவிக்க இஸ்லாம் மார்க்கமென்ன உங்கள் வீட்டுச் சொத்தா?
மார்க்கம் என்பது உங்கள் அறிவு தீர்மானிக்கக்கூடிய ஒன்றாக இருந்தால், மஸஹு செய்கின்ற விஷயத்தில் மேல் பகுதியை விட கீழ் பகுதியையே மஸ்ஹு செய்வது ஏற்றமானதாக இருக்கும் என்று கூறிய அலி ரலியல்லாஹு அவர்கள் ஆனால் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மேல் பகுதியையே மஸ் ஹு செய்யக்கண்டேன் என்று சொன்னார்கள். எனவே உங்கள் புத்தி சொல்லுகின்றவற்றைக் கொண்டு மார்க்கத்தில் மாற்றம் கொண்டுவந்தால் கிரீஸ்த்தவர்களிடம் இருப்பது போல் பழைய ஏற்பாடு புதிய எற்பாடு என்று பல்வேறு எற்பாடுகளும் சட்டங்களும் நலிந்து விடும்.

>> இலங்கை ஒரு இஸ்­லா­மிய நாடாக இருந்­தி­ருந்தால் பிறை பற்­றிய முடிவை அறி­விக்கும் பொறுப்பு இலங்கை வானிலை ஆய்வு மையத்­திற்கே வழங்­கப்­பட்­டி­ருக்­க­வேண்டும். அல்­லது ஐக்­கிய அமெ­ரிக்கா இஸ்­லா­மிய நாடாக இருந்தால் இப்­பொ­றுப்பு NASA வுக்கு வழங்கப் பட்­டி­ருக்­க­வேண்டும்.<<

எந்த இஸ்லாமிய நாட்டில் வானிலை ஆய்வு மையத்திற்கு பிறையை அறிவிக்கும் அதிகாரம் கொடுக்கப் பட்டுள்ளதென்று கூறமுடியுமா? நீங்களாக ஒன்றைக் கற்பனை பண்ணி கதை அளக்க வேண்டாம். அரை வேட்காடுகளால்தான் சமுகத்தில் பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன.

கட்டுரையாளர் சொல்லி இருப்பதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன். எனது புரிதலின் படி பிறை விடையத்தைக் கையாள்வதற்கு உலமாக்களை விட வானியல் கற்றவர்கள் பொருத்தமானவர் என்கிறார். உலமாக்களை வானியல் கற்கச் சொல்வதாக எனக்குத் தோன்றவில்லை. கட்டுரையாளர் வித்தியாசமான கோணத்தில் தீர்வு காண முயற்சித்திருக்கிறார். அக்கருத்துடன் நான் உடன்பட்டாலும் அதற்கு உலமாசபையும் கொழும்பு பெரிய பள்ளியும் உடன் படுமா என்பது தான் பிரச்சனை.

வேலையில்லா நாய் அல்ல வேலையில்லா நாவிதன், நாவிதன் என்றால் முடி வெட்டுபவர்.

ம்டத்தனமான கருத்துக்களை பதிவிடும் பச்சைமடையரகளே இஸ்லாம் என்னடா உங்க வாப்பா உம்மா வீட்டு ்சொத்தா அல்லாஹ்வுக்கும் நபி ஸல் அவரகளுக்கும் புத்தி சொல்வதற்காடா புறப்பட்டு விட்டீர்கள் இஸ்லாத்தை இஸ்லாத்தை விளங்காத நாய்களே நபி ஸல் அவர்கள் சொல்லாத விடயங்களை சொல்கின்றீர்கள்.நபி ஸல் அவர்கள் காலத்தில் எத்தனை பேருடா விஞ்ஞானிகள்.கயவர்களே உங்கள் விரல்களை அல்லாஹ் சொத்தி ஆக்கி விடுவனாக உங்களைப் போன்றோர்களை புத்தி பேதலிக்க செய்து பைத்தியமாக்கி விடுவானாக.இஸ்லாத்தை இப்படி கூறு போட பார்க்கின்றீர்களே.நாலு எழுத்துக்களை படித்துவிட்டால் நினைத்த மாதிரி எழுதலாம் என்று நினைத்து விட்டீர்களா.அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கடா அயோக்கியர்களே.நாய்க்கு இரும்பு கடையில் என்ன வேலை அவரவர் வேலயை அவரவர்தான் செய்ய வேண்டும்.சமூகத்தில் குழப்பத்தை உண்டாக்குவது கொலை செய்வதை விட கொடூரமானது.நபி ஸல் அவர்களின் சுன்னத்துகளை கொலை செய்து கொண்டு இஸ்லாம் பேசும் கூட்டம் எகூதி களின் ஏஜன்டுகள் உங்களுக்கு அழுவும் நாசமும் காத்துக்கொண்டிருக்கு be careful.

Post a Comment