June 20, 2018

பிறை சர்ச்சையை தீர்ப்பதற்கு, யாரையும் நீக்க வேண்டியதில்லை - ரிஸ்வி முப்தி அதிரடி


பல தசாப்த கால­மாக கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலும், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையும் பிறையைத் தீர்­மா­னிக்கும் விட­யத்தில் செயற்­பட்டு வந்­துள்­ளது. பிறை விவ­காரம் தொடர்பில் தற்­போது ஏற்­பட்­டுள்ள சர்ச்­சை­யான சூழலில் எத்­த­ரப்­பையும் இதி­லி­ருந்து நீக்­காமல் 2006 ஆம் ஆண்டு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை வெளி­யிட்­டுள்ள 5 அம்­சங்கள் அடங்­கிய பிறை தொடர்­பான பிர­க­டனம் மேம்­ப­டுத்­தப்­பட்டு அமுல் நடத்­தப்­ப­ட­வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்தார்.

பிறையைத் தீர்­மா­னிக்கும் விட­யத்தில் எழுந்­துள்ள கருத்து முரண்­பா­டுகள் தொடர்பில் வின­விய போதே உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில்; "அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கடந்த காலங்­களில் பிறையை தீர்­மா­னிக்கும் விட­யத்தில் பிரச்­சி­னைகள் ஏற்­பட்­ட­போது அதனைத் தீர்ப்­ப­தற்கு உலமா சபை பிறை தொடர்­பான நிலைப்­பாட்­டினை ஷரீஆ கண்­ணோட்­டத்தில் ஆராய்ந்து 5 அம்ச பிர­க­டனம் ஒன்­றினை வெளி­யிட்­டது.

இக்­கால கட்­டத்தில் பிறை தொடர்­பான தீர்­மா­னங்­களை மேற்­கொள்­வ­தற்கு உலமா சபையின் பிர­க­ட­னத்தில் தேவை­யான பொருத்­த­மான சீர்த்­தி­ருத்­தங்­களை மேற்­கொண்டு தேவை­யான அம்­சங்­களைச் சேர்த்து அதனை வலு­வாக்­க­வேண்டும்.

இத்­திட்டம் அனைத்து மக்­க­ளி­னதும் உள்­ளத்தை வெற்றி கொள்ளும் வகை­யிலும் ஏற்­றுக்­கொள்ளும் வகை­யிலும் அமை­ய­வேண்டும்.

உலமா சபையின் பிர­க­டனம் பின்­வ­ரு­மாறு அமைந்­துள்­ளது. உள்­நாட்டில் வெற்றுக் கண்­க­ளுக்கு பிறை தென்­ப­டு­வதை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டே இஸ்­லா­மிய மாதம் தொடர்­பான அனைத்து முடி­வு­களும் பெறப்­படும். தலைப்­பி­றையை பூமி­யி­லி­ருந்து வெற்றுக் கண்­களால் பார்க்­க­வேண்டும்.

மேலும் ஒரு நாளில் பிறை வெற்றுக் கண்­ணுக்குப் புலப்­ப­டு­வது சாத்­தி­ய­மற்­றது என நம்­ப­க­மான முஸ்லிம் வானியல் அறி­ஞர்கள் உறு­தி­செய்­யு­மி­டத்து வானியல் அவ­தா­னத்தின் அடிப்­ப­டை­யி­லான அந்­நி­லைப்­பாடு ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­வ­தோடு அவ்­வ­டிப்­ப­டையில் அன்­றைய தினம் பிறை காண­மு­டி­யாத நாளாகக் கொள்­ளப்­படும்.

தலைப்­பி­றையை தான் கண்­ட­தாக ஒரு முஸ்­லி­மு­டைய அறி­வித்தல் விஞ்­ஞா­னத்தின் எதிர்­வு­கூ­ற­லுக்கு முரண்­பா­டாக அமைந்தால் அவ் அறி­வித்தல் ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. ஆயினும் விஞ்­ஞா­னத்தின் எதிர்­வு­கூறல் இருந்­த­போதும் எவ­ராலும் வெற்றுக் கண்­களால் காணப்­ப­ட­வில்­லை­யாயின் அவ்­வாறு அது கரு­தப்­பட்டு நடப்பு மாதம் 30 நாட்­க­ளாக பூர­ணப்­ப­டுத்­தப்­படும்.

வானியல் கணிப்­பீ­டு­களை நம்­ப­க­மான முஸ்லிம் வானியல் அறி­ஞர்கள் உறுதி செய்­தல்­வேண்டும். பிறை பார்த்தல் தொடர்­பான சாட்­சியம் சொல்வோர் முஸ்­லிம்­க­ளா­கவும் நம்­ப­க­மா­ன­வர்­க­ளா­கவும் இருக்க வேண்டும் என்­பது போலவே வானியல்  கணிப்­பீ­டு­களை உறுதி செய்யும் வானியல் அறி­ஞர்­களும் முஸ்­லிம்­க­ளா­கவும் நம்­ப­க­மா­ன­வர்­க­ளா­கவும் இருக்க வேண்டும்.

பிறை வெற்றுக் கண்­க­ளுக்குத் தென்­ப­டு­வது அசாத்­தி­ய­மா­னது என முடிவு செய்­யப்­பட்ட நாளில் ஒரு­வரோ அல்­லது பலரோ பிறை கண்­ட­தாகத் கரு­தினால் அவரோ அல்­லது அவர்­களோ தலை­மைத்­து­வத்­திற்குக் கட்­டுப்­படல் என்ற வகை­யிலும் முஸ்லிம் சமூ­கத்தின் இணைந்து செல்லல் என்ற வகை­யிலும் குறித்த நாளில் நோன்பு நோற்­ப­தற்கோ, பெருநாள் கொண்­டா­டு­வ­தற்கோ, பிறரைத் தூண்­டவோ பிர­க­ட­னப்­ப­டுத்­தவோ கூடாது.

இலங்­கையில் பிறை தொடர்­பான தீர்­மானம் எடுக்கும் அதி­கா­ர­மு­டைய சபை­யாக அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா, கொழும்பு பெரிய பள்­ளிவால், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஆகியன இணைந்த அமைப்பு உள்ளது. இவ்வமைப்பு பிறையை உறுதிப்படுத்தாத நிலையில் தனிப்பட்ட முறையில் ஒருவரோ அல்லது சிலரோ தாம் பிறை கண்டதாக நம்பினால் அவர்களது நிலைபாடு இமாம்களின் கருத்துப்படி அவர்கள் தனிப்பட்ட முறையில் இரகசியமாக நோன்பு நோற்கலாம். பெருநாளையும் கொண்டாடலாம் என்பதே உலமா சபையின் 2006 ஆம் ஆண்டின் பிரகடனமாகும் என்றார்.

11 கருத்துரைகள்:

சில விஷயங்கள் காட்டியாக உள்ளது.

மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது... இந்த பிறை குழுவின் முடிவை ஏற்றுக் கொண்டு தலைமைத்துவ கட்டுப்பாடு எனும் பெயரில் மீண்டும் மீண்டும் ஹராமான காரியத்தை செய்ய முடியாது.. நபிகளாரின் காலத்தில் வானியல் அறிஞர்களின் கருத்துக்களை வைத்தா முடிவு செய்தார்கள்? தரிக்கா காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய பள்ளிவாசலின் முடிவை ஏற்றுக் கொண்டு எங்களால் பாவம் செய்ய முடியாது... பிறை குழுவின் முடிவை எதிர்பார்க்க அவர்களின் தேவையை நிறைவு செய்ய முடியாது..

தயவு செய்து இந்த நிபந்தனைகளுடன் பிறைபார்தால் பிரச்சினை முடியாது ஆகவே இந்தவிடயத்தில் வந்துள்ள நபிமொழிகளை காலத்தின் மாற்றத்திற்கேட்ப அதன் (பிக்ஹ்) விளக்கத்தை விளங்க முயற்சிக்கவும் தற்போது மக்களின் கைகளில் இருக்கும் தொலைதொடர்பு தொழிநுட்பத்தின் அகாரசத்தியை கவனத்தில் கொண்டு இதில் உள்ள சில நிபந்தனைகள மறுஆய்வு செய்து அவைகளை திருத்திகொண்டால் மீண்டும் இந்த பிரச்சினை நம் இலங்கை மக்களிடையே நிகழாதிருக்கலாம்

Naked eye only
The words of rasool is wisdom.
If you use modern technology;
You can see the Sands of the moon from the earth.
Don't think we are right!
Our rasool is correct!
First we all accept the five principles
That all jamaath accepted.
Majority of Muslims don't worry about
This!they understood who were the trouble creators!

வானிலை ஆராய்ச்சி மையத்தின் பிறை அறிக்கையை தாராளமாக ஏற்றுக் கொள் கொள்ள முடியும்

இதில் இஸ்லாத்தில் தடையில்லை
பிறை கண்டதற்கு இஸ்லாம் கூறும் சாட்சிகள் அதை கொண்டு தகவலை உறுதி செய்வதற்க்கே

அதற்கான தகவலை வானிலை ஆராய்ச்சி மையம் நவீன முறையில் ஆதாரபூர்வமாக கொடுக்கும் பட்ச்சத்தில் அது ஆயிரம் பேர் கொண்ட சாட்சிகளுக்கு சமமாகும்


இஸ்லாம் யுக முடிவு நாட்களை தொடர்ந்து வரும் அறிவியலை போதிக்கும் மார்க்கமாகும் அது முன்னோர்களின் மூடத்தனங்களை கொண்டதல்ல...

நாட்டின் பல பகுதிகளில் பிறை கண்டும், வானியல் அவதான நிலையம் 14.06.2018 அன்று refer(https://www.moongiant.com/phase/6/14/2018) வெற்றுக்கண்ணுக்கு பிறை தெரிய வாய்ப்பிருக்கின்றது என கூறியும், 15.06.2018 அன்று இரண்டாவது பிறைதான் தென்பட்டது என்று தெரிந்தும், உங்கள் பிரகடனத்துக்கு அமைவாக அமைந்தும்.
1) ஏன் தவறை ஏற்றுக்கொள்ளவில்லை அல்லது விடவில்லையா?
2) ஏற்றுக்கொள்ளாததால் எதனை சாதித்தீர்கள்?
3) இயக்க வெறியா?
4) பெரிய பள்ளியின் கைபொம்மையா?
5) நீங்கள் கூறும் முஸ்லீம் வானியல் வல்லுனர்களிடம் நவீன தொழில்நுட்ப கருவிகள் இருக்கின்றனவா அல்லது இருந்தும் பயன்படுத்த தெரியாதா?
N.B: மறுமை நாள் நெருங்கும்போது தகுதியற்றவர்கள் தலைமைத்துவம் ஏற்பார்கள்(அமானிதம் பாதுகாக்கப்படமாட்டாது)

மீண்டுமா?
இப் பிரச்சினை முடியவே முடியாது.
நிறையவே தீர்வுகள் சொல்லப்பட்ட பின்பும் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்றால், இனி வரும் சகல பிரச்சினைகளுக்கும் உலமா சபை பொறுப்பேற்க வேண்டும்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ.கண்ணியத்துக்கும் கௌரவத்துக்கும் உரிய எங்கள் முப்தி அவர்களே நீங்கள் எல்லாம் ஒரு மூலையில் ஒதுங்கிக் கொண்டு நான்கு எழுத்து படித்த எங்கள் மேதாவிகளுக்கு அந்த இடத்தை கொடுத்து விடுங்கள் .உங்களை விட இனிமேல் அவர்கள் உங்களுக்கும் முஸ்லிம் உம்மத்துக்கும் எல்லாவற்றையும் வினைத்திறனோடு சொல்லியும் செய்தும் காட்டுவார்கள்

Even Allah can’t save our Muslim Community hereafter.

பிறை குழு ஒவ்வோரு மாவட்டத்திலும் இருக்க வேண்டும்.

@ NAZMI : உலகில் எங்கோ தெரியும் பிறையை இங்கு தெரிவதாய் கற்பனை செய்து கொண்டுள்ளீர். உண்மையில் நம் நாட்டு வானியல் திணைக்கள உத்தியோகபூர்வ அறிக்கையின் படி 14ம திகதி பிறை தென்படுவதற்கான சாத்தியக்கூறு 0.4% என்பதாகும். பார்க்க: https://www.timeanddate.com/moon/sri-lanka/colombo.
பிறை 7 பாகையில் 6:30 க்கும், 6 பாகையில் 6:34 க்கும் 5 பாகையில் 6:42 க்கும் 4 பாகையில் 6:46 க்கும் 3 பாகையில் 6:49 க்கும் 2 பாகையில் 6:55 க்கும் இருந்தது என்பதே உண்மை நிலை.
ஆயின் பிறை கண்டோம் என்று கூறியவர்களிடம் நிகழ்வை உறுதிப்படுத்த விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது
மேலும் முடிந்து போன சம்பவங்களை மீளவும் கிளறுவதால் என்ன பயன் ? தயவுசெய்து செய்து விட்டுவிடுங்களேன்.

Post a Comment