Header Ads



ஞானசாரரை சிறையிலிருந்து மீட்க, தீவிர முயற்சி


வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இவ்வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஞானசார தேரரை அனைத்து குற்றங்களிலிருந்தும் குற்றமற்றரவராகக் கருதி அவரை விடுதலை செய்யுமாறு கடந்த 14ம் திகதி குறித்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டதாக பொதுபல சேனாவின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலந்த வித்தானகே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த மேன்முறையீடு எதிர்வரும் 21ம் திகதி வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இந்த நிலையில், குறித்த வழக்கை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை தேரரின் சட்டத்தரணிகள் மேற்கொண்டு வருவதாகவும் டிலந்த வித்தானகே தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. தர்ம்மம் ஒரு நாள் வெல்லும்.

    ReplyDelete
  2. இந்த நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் அரச சார்பு சார்பற்ற அனைத்தும் இயங்கும் அடிப்படை இனவாதம் தான் என்பதையும் சட்டம் என்பது இரு கோணங்களில் இயங்குகிறது என்பதையும் இந்த செயற்பாடுகள் தௌிவாகக் காட்டுகின்றன.

    ReplyDelete
  3. அநீதியின் மறு வடிவமே ஞான சாரை
    அகிலமே அறியும் அவரது கூத்துக்கள்

    அவர்  பற்றிய தீர்ப்பை மாற்றுவோரை
    அவதானிக்கும் சர்வதேசமே ஆர்வமாய்
    அதன் பின்  தலையிடுவர் நீதி  கேட்டு!

    அநீதியாளர்களை அடக்க முடியாத நம்
    அரச  தலைவர்கள்  இரு(ற)ந்தென்ன?

    ReplyDelete

Powered by Blogger.