Header Ads



மாகாண சபை தேர்தலில், முஸ்லிம் தரப்பின் வலி­யு­றுத்தல்

மாகாண சபை தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­து­வ­தற்­கான முஸ்­தீ­புகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. புதிய கலப்பு தேர்தல் முறையில் தேர்தல் நடத்­து­வதா அல்­லது பழைய முறைப்­படி தேர்­தலை நடத்­து­வதா எனும் இழு­பறி நீடிக்­கின்ற நிலையில், எந்த முறையில் தேர்தல் நடத்­தப்­பட்­டாலும் முஸ்­லிம்­க­ளுக்கு நியா­ய­மான தீர்­வொன்றைத் தர­வேண்டும் என முஸ்லிம் தரப்பில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. கிழக்கு, வட­மத்­திய மற்றும் சப்­ர­க­முவ மாகா­ணங்­க­ளுக்­கான பத­விக்­காலம் நிறை­வ­டைந்து ஒரு வரு­டத்­திற்கும் மேலாக அச்­ச­பைகள் இயங்­கா­தி­ருக்­கின்­றன. அத்­துடன் எதிர்­வரும் செப்­டெம்பர் மாத­ம­ளவில் மத்­திய, வடமேல் மற்றும் வட மாகாண சபை­க­ளுக்­கான பத­விக்­காலம் நிறை­வ­டை­ய­வி­ருக்­கி­றது. இந்­நி­லையில் பத­விக்­காலம் நிறை­வ­டைந்த சபை­க­ளுக்­கான தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­து­மாறு தொடர்ந்தும் பல­த­ரப்­பி­ன­ராலும் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றன. குறிப்­பாக சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய, கலைந்த சபை­க­ளுக்­கான தேர்­தலை தாம­தப்­ப­டுத்­து­வது ஜன­நா­ய­கத்­திற்கு விரோ­த­மான செயற்­பாடு எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்­நி­லையில் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­து­வ­தற்கு அர­சாங்க தலை­மைகள் ஒத்­து­ழைக்க வேண்­டு­மெனக் குறிப்­பிட்டு தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வரால் கடந்த செவ்­வா­யன்று கடி­த­மொன்று அனுப்பி வைக்­கப்­பட்­டது.

அத்­தோடு கடந்த வாரம் சபா­நா­யகர் தலை­மையில் இடம்­பெற்ற கட்சித் தலை­வர்கள் கூட்­டத்­தின்­போதும் உட­ன­டி­யாகத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு கட்சித் தலை­மை­க­ளினால் வலி­யு­றுத்­தப்­பட்­டது. இதன்­போது, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன புதிய முறையில் மாகாண சபை தேர்­தலை நடத்­து­வ­தற்கே விரும்­பு­கிறார் என மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி மற்றும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­வினால் தெரி­விக்­கப்­பட்­டது. எனினும் அமைச்­சர்­க­ளான ஹக்கீம், மனோ கணேஷன் மற்றும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் ஆகியோர் புதிய முறையில் தேர்­தலை நடத்­து­வ­தற்கு கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டனர். பழைய முறையில் தேர்தல் நடத்­தப்­பட வேண்­டு­மென்றே வலி­யு­றுத்­தினர்.

இதற்­கி­டையில், கூட்டு எதி­ரணி எந்த முறை­யி­லா­வது தேர்­தலை நடத்­து­மாறு தெரி­வித்­துள்­ளது. அத்­துடன், ஐக்­கிய தேசியக் கட்சி பழைய விகி­தா­சார தேர்தல் முறை­யி­லா­வது உட­ன­டி­யாக செய­லி­ழந்து இருக்கும் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­மாறு கடந்த திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டின்­போது அறி­வித்­தது.

இவ்­வா­றா­ன­தொரு குழப்­ப­க­ர­மான நிலையில் நேற்­றைய தினம் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய பிர­தி­நி­திகள் உள்­ளிட்­டோ­ரு­ட­னான சந்­திப்­பொன்று நேற்­றைய தினம் இடம்­பெற்­றது. இதன்­போது உட­ன­டி­யாகத் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான பொது இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டது. அத்­துடன் இது­கு­றித்து எதிர்­வரும் சில தினங்­க­ளுக்குள் முக்­கிய கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெ­ற­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில், புதிய மாகாண சபை தேர்­த­லுக்­கான தொகுதி எல்லை நிர்­ணயம் முஸ்­லிம்­க­ளுக்குப் பாதகமானது என புத்திஜீவிகளால் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. எனவே, புதிய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தினால் முஸ்லிம்களுக்கு பாதகமானதாக அமையுமெனத் தெரிவிக்கப்பட்டு வருவதோடு முஸ்லிம்களுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுத்தந்துவிட்டு உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்தவேண்டும் என முஸ்லிம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-Vidivelli

No comments

Powered by Blogger.