Header Ads



அரசியல் வாதிகளின்றி சாய்ந்தமருதில் நடந்த, தேசிய நிகழ்வு - மகிந்த தேசப்பிரியவும் பங்கேற்பு


தேசிய வாக்காளர் தினத்தையொட்டிய தேசிய  நிகழ்வு  இன்று ( 23 ) சாய்ந்தமருதில்  சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா தலைமையில்  இடம்பெற்றபோது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய   பிரதம அதிதியாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் கலாநிதி ரத்னஜீவ எச் ஹுக் , உதவி தேர்தல்கள் ஆணையாளர்களான எம்.எம்.முஹம்மட் , டீ.ரீ.ஐ.விக்ரமரெட்ன , சாய்ந்தமருது பிரதேச  செயலாளர் ஐ.எம்.ஹனீபா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் , பிரதேச செயலாளர்கள் , அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் , பிரதேச செயலக உத்தியோஸ்தர்கள் , சமூர்த்தி உத்தியோஸ்தர்கள் , வர்த்தக சங்க பிரதிநிதிகள் , பாடசாலை அதிபர்கள் , உலமாக்கள் , புத்திஜீவிகள் , கல்வியலாளர்கள் , மீனவர்கள் ,விவசாயிகள், பெண்கள் , இளைஞர்கள்  என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.

மாளிகைக்காட்டில் இருந்து ஆரம்பமான வரவேற்பு ஊர்வலம் சாய்ந்தமருது – கல்முனை பிரதான வீதியினூடாக சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் முன்றலை அடைந்தது.
பாண்ட் வாத்தியம் , கடற்படை மரியாதை , பொல்லடி போன்ற பலவிதமான நிகழ்வுகளுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படும் போது வீதியின் இருமருங்கிலும் நின்ற மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். எந்தவிதமாக அரசியில் வாதிகளும் அழைக்கப்படாத நிலையில் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்ற மேற்படி நிகழ்வு  சாய்ந்தமருது பிரதேச மக்களை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தும் நிகழ்வாக அமையப் பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

( எம்.ஐ.மொஹமட் அஸ்ஹர் , Sowmy)







3 comments:

  1. எந்த ஒரு அரசியல் வாதியும் பங்குபற்றாத நிகழ்வு என்றால் அதன் கருத்து என்ன???? ஜனநாயக விரோதிகள் என்று தானே அர்த்தம். தோடம்பழத்தில் கேட்டவர்கள் அரசியல் வாதிகள் இல்லையா?? ஊர் என்ற வெறியர்கள், இந்த பிரதேசத்தின் ஒற்றுமைக்கும், அரசியல், பொருளாதார வளர்ச்சிக்கும் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளார்கள். இது ஒரு ஆரோக்கியமான விடயம் அல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்த விடயம் மாற்றப்பட வேண்டும். திருத்தப்பட வேண்டும். சிந்தித்து செயட்படுவார்களா...??? சாய்ந்தமருது கல்விமான்களும், புத்தி ஜீவிகளும், நடுநிலை சிந்தனையாளர்களும்.

    ReplyDelete
  2. இதை எப்படி தேசிய நிகழ்வென்று கூறுவது? ஜனநாயகம் இல்லாத வாக்காளர் தினம் ஒரு கேலிக்கூத்தே!

    ReplyDelete

Powered by Blogger.