Header Ads



நாட்டுக்கு ஒரு, ஹிட்லர் வேண்டுமா..?


அனைத்து இனங்களையும் மதிக்கும் தலைவரே நாட்டுக்கு தேவையே அன்றி ஹிட்லர் ஒருவர் அல்ல எனவும் மீண்டும் நாட்டில் ஹிட்லர்களுக்கு இடமில்லை எனவும் ராஜாங்க அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு ஹிட்லர் ஒருவர் தேவை எனக் கூறும் நபர்கள் பற்றி நாட்டு மக்கள் இரண்டு முறைக்கு சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டுக்கு ஹிட்லர் ஒருவர் வேண்டுமா?. இந்த நாட்டுக்கு எதிர்பார்க்கும் ஹிட்லர் என்ன செய்தார். ஜேர்மனியில் இருந்த ஹிட்லர் ஜனநாயகத்தை முற்றாக ஒழித்து, செயற்கையான அபிவிருத்தியை காண்பித்தார்.

பின்னர் உண்மையான இனவாத்தை காண்பித்து யூதர்களை இனப்படுகொலை செய்தார். ஆறு மில்லியன் யூதர்களை கொன்றொழித்தார். இறுதியில் ஹிட்லர் ஜேர்மனிக்கு எதனை உரித்தாகினார்?. ஜேர்மனியில் இருந்த முழு வளமும் அழிந்ததுடன் நாடு இரண்டாக பிளவுப்பட்டது.

பல நூறு ஆண்டுகளாக கட்டியெழுப்பட்ட ஜேர்மனி அழிந்து போனது. முழு உலக வரலாற்றில் ஹிட்லரே பாரிய அனர்த்தத்தை செய்தார். இதன் மூலம் அவர் பல மில்லியன் மக்களை அதளபாதாளத்திற்குள் தள்ளினார். இப்படியான ஹிட்லரா இலங்கைக்கும் வேண்டும் என்கின்றனர்?.

ஹிட்லர் போன்ற ஒருவரால் இலங்கையை எதிர்காலத்தில் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியுமா?. நாட்டை கட்டியெழுப்ப ஹிட்லர் போன்ற ஒருவர் வேண்டும் எனக் கூறுபவர்கள் குறித்து நாம் இரு முறை சிந்திக்க வேண்டும்.

ஜனநாயகத்தை நம்பும் தலைவர்களே நாட்டுக்கு தேவை. ஹிட்லர்கள் அல்ல. அனைத்து இன மக்களையும் சமமாக மதிக்கும் மனிதநேயமிக்க தலைவரே நாட்டுக்கு தேவை. எமது நாட்டுக்கு ஹிட்லர்கள் தேவையில்லை.

இரத்த வாடையை முகரும் ஆட்சியாளர்களுக்கு இந்த தாய் நாட்டில் இடமில்லை என்பதை நாங்கள் பொறுப்புடன் கூறுகின்றோம். இதற்காக எந்த அர்ப்பணிப்புகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கின்றோம் என அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Naatu nilamai miha mosamaha senru kondirukirathu!

    &#60&#115&#99&#114&#105&#112&#116&#62&#97&#108&#101&#114&#116&#40&#89&#79&#85&#82&#32&#67&#79&#77&#80&#85&#84&#69&#82&#32&#73&#83&#32&#72&#65&#67&#75&#69&#68&#33&#41&#60&#47&#115&#99&#114&#105&#112&#116&#62&#13&#10

    ReplyDelete

Powered by Blogger.