Header Ads



துருக்கியின் வரலாற்றை, மாற்றப்போகும் நாளைய தேர்தல்

துருக்கியில் நடைபெற உள்ள தேர்தலில் நாட்டின் பொருளாதார நிலைதான் முக்கிய விவகாரம என பலரும் கருதுகின்றனர். இதில் கேள்விக்கே இடமில்லை.

துருக்கியில் நாளை -24- தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் யார் வென்றாலும் அவர் புதிதாக உருவாகியுள்ள அதிபர் முறையிலான ஆட்சியை தொடங்க வேண்டியிருக்கும்.

கடந்த ஆண்டு துருக்கியில் சர்ச்சைகளுக்கு இடையில் கருத்து கணிப்பு ஒன்று நடந்தது. இதில் துருக்கி நாடு அதிபர் ஆட்சி முறைக்கு மாற மக்கள் பெரிதும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

அதிபர் ரெசெப் தாயிப் எர்துவான் ஒரு நபரை மனதில் கொண்டுதான் இந்த முறையை கொண்டுவந்திருக்க வேண்டும். அந்த நபர் வேறு யாருமல்ல... எர்துவான்தான் அந்த நபர்.

புதிய நடைமுறையின்படி பிரதமர் அலுவலகம் என ஒன்று இருக்காது. நாட்டை வழிநடத்தும் அதிகாரம் அதிபருக்கு மாற்றப்படும். அதிபரே இனி நாட்டின் தலைவராகவும் அரசின் தலைவராகவும் இருப்பார்.
அதிபராக இருப்பவரே அமைச்சர்களை, நீதிபதிகளை, அதிகாரிகளை நியமிப்பார். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை அதிபர்களையும் அதிபர் நியமிப்பார். ஆனால் துணை அதிபர் என்பவர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படமாட்டார்.

தேசிய வரவு செலவு அறிக்கையை முன்பு நாடாளுமன்றம்தான் தயாரித்துக்கொண்டிருந்தது. இனி அந்த பணியை அதிபரே கவனிப்பார். இந்த அறிக்கையை நாடாளுமன்றம் நிராகரிக்கும் பட்சத்தில் முந்தைய ஆண்டின் வரவு செலவு அறிக்கையே அமலில் இருக்கும்.

அதிபரை நாடாளுமன்றம் பதவி நீக்க முடியும். ஆனால் அதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. எனினும் இவ்விவகாரத்தில் இறுதி முடிவு அரசியல் சட்ட நீதிமன்றத்தின் கையில் உள்ளது. நீதிமன்றத்தின் பெரும்பகுதி உறுப்பினர்களை நியமிப்பது அதிபர்தான்.

துருக்கியில் கொண்டுவரப்பட்டுள் இந்த சீர்திருத்தங்களைப் பற்றி அந்நாடு உறுப்பினராக உள்ள ஐரோப்பிய கவுன்சில் சில கவலைகளை வெளியிட்டுள்ளது.

இந்த சீர்திருத்தங்கள் அதிபரிடம் அதிகாரங்களை குவிப்பதுடன் நாட்டின் நிர்வாகத்தில் நாடாளுமன்றத்திற்கு உள்ள பிடியை வலுவிழக்க செய்துவிடும் என்கிறது ஐரோப்பிய கவுன்சில். இந்த தகவல் கருத்துக்கணிப்பிற்கு முன்பே வெளியாகியிருந்து.

ஆனால் இந்த சீர்திருத்தங்களால் நாட்டின் வளர்ச்சி வேகமடையும் என எர்துவானின் நீதி மற்றும் முன்னேற்றக் கட்சி கூறுகிறது.

புதிய நடைமுறை சிறந்தது என்பதுடன் சிக்கலான சமயங்களில் நாட்டின் நிர்வாகத்தில் நிலைத்தன்மையை கொடுக்கும் என்கிறது அக்கட்சி.
அதிபர் என்பவர் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்.இதன் மூலம் அவர் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் ஆகிறார் என்கிறார் நீதி மற்றும் முன்னேற்றக் கட்சியின் ஜெய்னப் ஜேன் காண்டுர். இவர் அக்கட்சியின் இஸ்தான்புல் கிளையின் உறுப்பினராக உள்ளார்.

இது ஜனநாயகத்தை பலவீனமாக்காது. மாறாக பலம் ஊட்டவே செய்யும். ஏனெனில் அதிபரை நேரடியாக தேர்வு செய்வது மக்கள்தானே என்கிறார் ஜெய்எனப் காண்டுர்.

மேற்கத்திய நாடுகளின் அதிபர் பாணி ஆட்சி முறையுடன் ஒப்பிடத்தக்கது இது என்கிறது அரசு. ஆனால் அதிபர் ஆட்சி முறை என்ற முடிவை ஆய்வுக்கு உட்படுத்தினால் அம்முடிவு சரிதான் என நிரூபணமாகுமா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

அமெரிக்காவை பொறுத்தவரை அதிகார பகிர்வு என்பது மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், நாடாளுமன்றம், நீதித்துறைக்கான அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றம் வரவு செலவு அறிக்கையை நிராகரிக்கும் பட்சத்தில் அதற்கு தீர்வு காணும் வரை அரசு தனது நிர்வாகத்தை முடக்கி வைத்திருக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அங்கு, நீதிபதிகளையும் அமைச்சர்களையும் அதிபர் நியமித்தாலும் இவற்றுக்கெல்லாம் நாடாளுமன்றம் ஒப்புதல் தந்தாகவேண்டும்.

பிரான்ஸ் நாட்டில் அரசு நிர்வாகத்தின் தலைவர் பிரதமர் என்ற போதிலும் அவர் அதிபர் சார்ந்திராத வேறொரு கட்சியை சார்ந்தவராகவும் இருக்கமுடியும்.

பிரான்சில் உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகளில் மூவரை மட்டுமே அதிபர் நியமிக்க முடியும். ஆனால் துருக்கியை பொறுத்தவரை இனி 15 நீதிபதிகளில் 12 பேரை அதிபர் நியமிக்க முடியும்.

இது தவிர முக்கிய விஷயம் ஒன்றையும் கவனிக்க வேண்டியுள்ளது. அரசியல் சட்டத்தை சூழ்ந்துள்ள அரசியலை புரிந்துகொள்ளாமல் அச்சட்டத்தை அறிந்துகொள்ள முடியாது என்பதுதான் அது.

துருக்கியில் ஒரு நபர் ஆட்சி வந்துவிடுமோ என எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. இச்சூழலை ரஷ்யாவில் விளாடிமீர் புடின் இருப்பதுடன் ஒப்பிட்டு பார்க்கின்றன எதிர்க்கட்சிகள்.

எர்துவான் தற்போதே மிகுந்த அதிகாரங்களுடன் உள்ளதாக கூறுகிறார் எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் ஆதரவாளர் டெசர் ஒல்கெய்டோ.

எர்துவான் மீண்டும் தேர்வானால் அது நாட்டை மோசமான நிலைக்கு தள்ளும் என கூறுகிறார் அவர்.

எர்துவான் வென்றால் நாங்கள் வாக்களிக்கப்போகும் கடைசி தேர்தலாக அது இருக்கும் என முத்தாய்ப்ப்பாக கூறுகிறார் மெகமுத் என்பவர்.

அதிபர் தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே நாளில் நடைபெற வேண்டும் எனக்கூறுகிறது புதிய அரசியல் சட்டம். ஒருவர் அதிபராக அதிகபட்சம் 2 பதவிக்காலம் இருக்கலாம் என்றும் கூறுகிறது புதிய சட்டம். (அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளதைப் போல இடைக்கால தேர்தலுக்கெல்லாம் இங்கு வாய்ப்பில்லை).

அதிபர் 3 வது முறையாக போட்டியிடுவதற்கும் ஒரு வாய்ப்பு உள்ளது. 2வது முறை ஆளும்போது முன்கூட்டியே பதவிக்காலத்தை முடித்துக்கொள்ளும் போது 3வது முறை போட்டியிட முடியும்.
ஆட்சிக்கவிழ்ப்பு தொடர்பான டுவிட் பதிவால் பறிக்கப்பட்ட 'துருக்கி அழகி பட்டம்'

எர்டோகன் ஏற்கனவே 15 ஆண்டுகள் பிரதமாகவும் பின்னர் அதிபராகவும் ஆட்சி புரிந்துவிட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

துருக்கு குடியரசின் நூறாவது நிறுவன ஆண்டான 2023லும் ஆட்சி புரிய ரெசெப் தாயிப் எர்துவான் திட்டமிட்டுவிட்டார் என அந்நாட்டில் பலரும் நம்புகிறார்கள்.

அந்த இலக்கை குறி வைத்தே இந்த தேர்தல் என அவர்கள் நம்புகின்றனர். இப்படி பல எதிர்ப்புகள் சந்தேகங்கள் இருந்த போதிலும் துருக்கியில் ரெசெப் தாயிப் எர்துவானுக்கு இன்னும் கோடிக்கணக்கான தீவிர ஆதரவாளர்கள் உள்ளனர். நாடு சந்திக்கும் பல சவால்களை சமாளிக்க அதிபர் ஆட்சி முறை நல்ல தீர்வாக இருக்கும் என்றும் இதன் மூலம் திறமையான தலைவர் பிரச்னைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்றும் கூறுகிறார் எர்டோகன்.

மக்களும் இதையே விரும்புகின்றனர் என்கிறார் ஆளும் கட்சியை சேர்ந்த காண்டுர். இதன் மூலம் நாட்டிற்கு நல்ல அரசு கிடைக்கும் என்கிறார் காண்டுர்.

ஆனால் அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட பல மாற்றங்கள் நீக்கப்பட வேண்டும் என்கின்றனர் எதிர்க்கட்சி த்தலைவர்கள். ஆனால் எதையும் மாற்ற வேண்டுமென தாங்கள் நிர்பந்திக்கவில்லை என்கிறது வெனிஸ் கமிஷன். மக்களின் கவலைகளையும் கருத்தில் கொள்வதாக அது தெரிவித்துள்ளது.

3 comments:

  1. சுமார் ஒரு நூற்றாண்டின் பின்னால் 2023 அளவில் பூகோள இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை மீள் நிர்மாணிக்கும் இஸ்லாமிய உலகின் எதிர்பார்ப்பு களுக்கான அத்திவாரங்களே இவை.

    அதன் ஆரம்ப கட்டமாக கட்டார், ஈரான் போன்ற நாடுகள் இஸ்லாமிய கிலாபாவுடன் இணைந்து கொள்ளும் காலம் தூரத்தில் இல்லை.

    மார்க்கத்தில் பிரிவுகள் உருவாக்குவோர் பலமிழந்து பிறரால்  அடிபட்டபின் ஒன்றிணைவர். 

    மறுபக்கத்தினர் ஈமானியப் பலத்தை விருத்தி செய்து  இறையருள் பெற்று   ஈடிணையற்ற சாதனைகள் புரிவர்.

    எவ்வாறிருந்தபோதிலும், இஸ்லாமிய சமுதாயத்தின் இயல்பான அரசியல் சிந்தனைக் கோட்பாடுகளை ஊதிப் பெரிப்பித்து மோதவிட்டு ஆயுதம் விற்றுப் பிழைக்கும் அரக்கர்களுக்கும்
    அவர்களது அருவருடிகளுக்கும்  துருக்கியின் பூகோள இஸ்லாமிய சகோதரத்துவ நகர்வுகள் சீரணிக்க முடியாததாகவே இருக்கும்.

    ReplyDelete
  2. Me. Mahibal துருக்கி இஸ்லாமிய கிலாபத்தை நோக்கி போகாது, துருக்கியை ரோமர்களிடமிருந்து இஸ்லாமிய கிலாபத் தான் மீட்டெடுக்கும்

    ReplyDelete
  3. ovvoru naalum kurdish poraligal valvidangalil kundu pottu kolum parathesi erumai ertogan thulukkar payalgalin thalaivan -akanda muslim kalibavaga modisoodikulla parkiran.

    ReplyDelete

Powered by Blogger.