June 10, 2018

பல்கலைக்கழகத்தில் பாலியல் இஞ்சம், அசிங்கமான அறிக்கையை ஹன்சார்ட்டிலிருந்து நீக்க வேண்டும்

உயர்கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக உள்ள ஒருவர் நாட்டின் உயரிய சபையில் அறிவீனமாக பெண்களை இழிவுபடுத்தியிருப்பது சரித்திரத்தில் இதுவே முதற் தடவையாகும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பரீட்சைகளில் சித்தியடைய செய்வதற்காக சில பேராசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் இலஞ்சம் பெறுவதாக உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நாடாளுமன்றில் வைத்து தெரிவித்திருந்தார்.

குறித்த விடயத்திற்கு கண்டம் தெரிவிக்கும் வகையில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், விஜயதாஸ ராஜபக்ஷவின் அறிவீனமானதும், அடிப்படையற்றதுமான கருத்து தென் கிழக்குப் பல்கலைக்கழக கல்விச் சமூகத்திற்கு மட்டுமல்ல இந்த நாட்டின் ஒட்டுமொத்த பெண் குலத்திற்குமே இழுக்காகும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மறைந்த பெருந் தலைவரும், சிந்தனைச் சிற்பியுமான அஷ்ரப் அவர்களின் தூரநோக்கு சிந்தனையில் உருவானதாகும்.

உண்மையில் அது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பிராந்தியத்தில் அமைந்திருந்தாலும் அங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமயங்களைப் பின்பற்றும் சகல இன மாணவர்களும் கல்வி கற்கிறார்கள்.

அதேபோல அனைத்து இன, சமூக, மதங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்களும் அங்கு கற்பிக்கிறார்கள். ஆகவே, இனவெறுப்பு வாதியான விஜேதாஸ ராஜபக்ஷவின் கருத்து இந்த நாட்டின் அனைத்து சமூகங்களையும் இழித்துரைப்பதாகவே உள்ளது.

பொறுப்புவாய்ந்த ஒரு அந்தஸ்தில் உள்ள இந்த அரசியல்வாதி பொறுப்புணர்ச்சியற்ற விதத்தில் இழிவாக சிந்திப்பது இந்த நாட்டுக்குப் பொருத்தமானதல்ல. மேலும், நல்லாட்சி அரசினால் இவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களும் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

உயர்கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக உள்ள ஒருத்தர் நாட்டின் உயரிய சபையில் அறிவீனமாக பெண்களை இழிவுபடுத்தியிருப்பது சரித்திரத்தில் இதுவே முதற் தடவையாகும்.

எனவே, நாட்டின் சரித்திரமாகப் பதிவாகியுள்ள இந்த அமைச்சரின் அசிங்கமான அறிக்கையை ஹன்சார்ட்டிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் குறித்த அமைச்சரின் கூற்றுக்கு இந்த நாட்டிலுள்ள பெண்கள் உட்பட சகவாழ்வையும், கண்ணியத்தையும் விரும்பும் அனைவரும் உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

6 கருத்துரைகள்:

may be he is wrong.. do you deny that mafia story.. even you were corrupt.

may be he is wrong.. do you deny that mafia story.. even you were corrupt.

One side Rajitha has spoken for muslims and he may be correct.Much muslim girls student face sexual tortures and they are forced for sleep by bloody mother fucker and cheap lecurers as rajither spoke. We should punish them by death warrant, bloody mother fuckers.

விஜதாச ராஜபக்ச ஒரு இனத்துவேசி என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கான சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக UGC chairman இடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான விடயங்கள் கடந்த காலத்திலும் UGC யால் விசாரிக்கப்படும் உள்ளதாக அறிகிறோம். ஆக தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசார் சமூகம், இதை அந்த நிர்வாக கட்டமைப்புக்குள் தீர்த்துக் கொள்ளாமல் இதை குழுக்களாக பிரிந்து அநாகரிகமான முறையில் ஒருவரை ஒருவர் பலி தீர்ப்பதட்கும், மான பங்கப்படுத்துவதட்கும் கச்சை கட்டிக்கொண்டு அலைகிறார்கள், UGC இக்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் புகார் அளிப்பதும், சிறு விடயங்களையும் பலி தீர்க்கும் நோக்கோடு ( சில கல்விசார் நபர்கள் மிகவும் கேவலமாகவும், அநாகரீகமாகவும், இட்டு கட்டுபவர்களாகவும், ஊழல் உள்ளவர்களாகவும் நடந்து கொள்கிறார்கள்) பெரிது படுத்தும் நிலையே அங்குள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். அதட்கான அழுத்தமும், களை எடுப்புக்களும், நாகரீக முறையற்று நடப்பவர்கள், ஒழுக்க விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அதே நேரம் அங்குள்ளவர்களுக்கு நாகரீகம், சிறந்த பண்புகள் பற்றி கவுன்சிலிங்கும் செய்யவேண்டும். நிறைய விடயங்கள் அந்த பல்கலைக்கழகத்துக்குள் திருத்த வேண்டி உள்ளது. அதை விட்டு விட்டு அரசியல் இலாபம் கருதி இப்படி மக்கள் மத்தியில் அறிக்கை விடுவது ஒரு நேர்மையான அரசியலாக இருக்காது என்பது எமது பணிவான கருத்தாகும்.

It is a bad reflection on University Community.

It is a bad reflection on University Community

Post a comment