Header Ads



காவியுடை அணிந்து, பௌத்தத்தை அவமதித்த ஞானசாரர் - சாடுகிறார் தலதா

-எம்.ஆர்.எம்.வஸீம்-

நாட்டின் சட்டம் அனை­வ­ருக்கும் பொது­வா­னது. அதில் தமிழ், சிங்­களம், முஸ்லிம் என பேதம் இல்லை என நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார்.

பலாங்­கொடை பிர­தே­சத்தில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

நாட்டில் இருக்கும் சட்டம் அனை­வ­ருக்கும் பொது­வா­ன­தாகும்.   மதங்கள் அடிப்­ப­டையில் அதில் எந்த பேதமும் இல்லை. தமிழ், சிங்­களம், முஸ்லிம் என்றோ அந்த மதங்­க­ளைச்­சேர்ந்த மதத்­த­லை­வர்­க­ளுக்கு என்றோ சட்­டத்தில் எந்த விட்­டுக்­கொ­டுப்பும் இல்லை.   பல்­வேறு குற்­றங்­க­ளுக்­காக தண்­டனை விதிக்­கப்­பட்ட மதத்­த­லை­வர்கள் பலர் சிறைத்­தண்­ட­னையை அனு­ப­வித்து வரு­கின்­றனர்.

 கடந்த வாரங்­களில் நாட்டில் பெளத்த தேரர் ஒருவர் தொடர்­பாக பாரி­ய­ளவில் பேசப்­பட்டு வந்­தது. நானும் கொள்­கையை மதிக்கும் ஒரு பெளத்தர். எவ­ருக்கும் எத­னையும் பேசலாம். என்­றாலும் நாட்டின் சட்டம் அனை­வரும் ஒன்­றாகும். இது­வ­ரைக்கும் பல்வே று குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்ட 15 பெளத்த தேரர்கள் சிறையில் இருக்­கின்­றார்கள். அவர்கள் அனை­வரும் சிறைச்­சாலை ஆடை­யிலே இருக்­கின்­றனர். மேலும் 11 பேர் சந்­தே­கத்தின் பேரில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

அதே­போன்று கத்­தோ­லிக்க மதத்­த­லைவர் ஒருவர் சிறைச்­சாலை ஆடையில் இருக்­கின்றார். இரண்­டுபேர் சந்­தேக பட்­டி­யலில் இருக்­கின்­றனர். முஸ்லிம் மதத்­த­லைவர் ஒருவர் சிறைச்­சாலை ஆடையில் சிறையில் இருக்­கின்றார். இரண்­டுபேர் சந்­தேக நபர்­க­ளாக இருக்­கின்­றனர். இந்து குரு ஒருவர் சிறைச்­சாலை ஆடையில் இருப்­ப­துடன் மேலும் இரண்­டுபேர் சந்­தேக நபர்­க­ளாக இருக்­கின்­றனர்.

நாங்கள் அனைத்து மதங்­க­ளையும் மதித்து நடக்­கின்றோம். அத­னால்தான் குற்­றங்கள் நிரூ­பிக்­கப்­பட்டு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்டால் அவர்­களின் மத ஆடையை அகற்றி சிறைக்குள் செல்ல நேரி­டு­கின்­றது. நாட்டில் இருக்கும் சட்­டத்தை மதித்து வாழ­வேண்டும் என புத்­த­பெ­ருமான் போதித்­தி­ருக்­கின்றார். அதனால் தேரர்­களின் ஆசிர்­வாதம் எப்­போதும் எங்­க­ளுக்கு அவ­சி­ய­மாகும். அந்த ஆசிர்­வா­தத்தை எங்­க­ளுக்கு வழங்க முடி­வது, அவர்­களின் உள்­ளத்தில் வைராக்­கியம் குரோதம்  , சண்­டித்­தனம் இல்­லாமல் போனால் மாத்­தி­ர­மே­யாகும்.

நான் நீதி அமைச்சர் என்­ப­தற்­காக யாரையும் சிறை­யி­ல­டைக்க உத்­த­ர­வி­ட­மு­டி­யாது. இன்று நீதி­மன்­றங்கள் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­கின்­றன. நீதி­மன்­றத்­துக்குள் தொலை­பேசி அல­றினால் 7 நாட்­க­ளுக்கு சிறைத்­தண்­டனை அல்­லது தண்­டப்­பணம் விதிக்க நீதிவான் கட்­டுப்­பட்­டுள்ளார்.

அவ்­வா­றான நிலையில் நீதி­மன்ற அறை ஒன்­றுக்குள் பெரிய சமூகம் ஒன்றை அகெ­ள­ர­வப்­ப­டுத்­தும்­வ­கையில் காவி உடையை அணிந்துகொண்டு புத்த சாசனத்தை அவமதிக்கும்வகையில் நடந்துகொண்ட தேரர் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. அதற்கு என்னால் ஒன்றும் செய்யமுடியாது. ஏனெனில் நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாகும் என்றார்.

2 comments:

  1. Yes! your are correct madam....but.....others are ...

    ReplyDelete
  2. தண்டனை பெற்ற ஒருவர் சுதந்திரமாக சிறையிலிருந்து வெளியேறும் போது எப்படி நீதி மன்றங்கள் நீதித்துறை போன்றன சுயாதீனமாக இயங்க முடியும்?

    ReplyDelete

Powered by Blogger.