Header Ads



பிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்

ரமழான் 28  அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது தொடர்பில் பிறைக் குழு கூடி தீர்­மானம் எடுக்கும் என்றும் உலமா சபை மற்றும் பெரிய பள்­ளி­வாசல் தரப்­புகள் தெரி­விக்­கின்­றன.

இலங்­கையில் பிறை தொடர்­பான தீர்­மா­னங்­களை வெளியி­டு­வ­தற்­கான அதி­கா­ரத்தைக் கொண்­டுள்ள கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலும் இது விட­யத்தில் அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­யுள்­ளது. இதற்­க­மைய பிறை 29 இல் அதா­வது எதிர்­வரும் 15 ஆம் திக­தியே பிறை பார்க்­கப்­பட வேண்டும் என  பிறைக் குழுத் தலைவர் மௌலவி ஜே.அப்துல் ஹமீத் பஹ்ஜி விடுத்­துள்ள செய்­தியில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. உலமா சபையும் கூட பிறை பார்ப்­ப­தற்­கான நாள் 15 ஆம் திகதி என்றே தெரி­வித்­துள்­ளது.

எனினும் ரமழான் 28 இலும் பிறை தென்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளதால், அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது தொடர்பில் பிறைக் குழு கூடி தீர்­மானம் எடுக்கும் என்றும் உலமா சபை மற்றும் பெரிய பள்­ளி­வாசல் தரப்­புகள் தெரி­விக்­கின்­றன.



அதேவேளை ஆதாரமான அடிப்படையில் பிறை காண்பது நிரூபிக்கப்பட்டால் வியாழக்கிழமை நிரூபிக்கப்பட்டால் வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி பெருநாள் என்பதுவே கொழும்பு பெரிய பள்ளிவாசலினதும் நிலைப்பாடு என பிறைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, எனவே தயவுசெய்து சமூகத்தை குழப்பும் எந்த காரியத்திலும் ஈடுபட வேண்டாமென அகில இலங்கை ஐம்மியத்துல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் இதுகுறித்து மேலுத் தெரிவித்ததாவது;

பிறை விவகாரத்தில் எந்த முரண்பாடுகளும் இல்லை. எமது தெளிவான விளக்கம் யாதெனில் வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை கண்டால் வெள்ளிக்கிழமை பெருநாள் என்பதும் அதன்பின்னர் ஒருநாளில் நோன்கை கழாச் செய்து கொள்ளுங்கள் என்பதுமாகும் என்றார்.

மேலும் 14 ஆம் திகதி பிறை காணப்பட்டால் அதுபற்றிய மார்கத் தெளிவை  ஐம்மியத்துல் உலமா அறிவிக்குமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.



6 comments:

  1. பிரச்னை வரமுன்பு அல்லது இல்லாத ஒரு பிரச்னைக்கு பத்வா கொடுத்து பிரச்னையைத் துவங்கி வைத்தது யார் என்பதையும் அறிந்து கொள்ள சமூகம் ஆவலோடு இருக்கின்றது. தயவு செய்து அதைக் கூறுவீர்களா? பொதுமக்களிடம் எந்தப் பிரச்னையும் இல்லை. டாக்டர் இருக்கும் நோய்க்குத்தான் மருந்து செய்வார். எதிர்பார்த்து இருக்கும் நோய்க்கு மருந்து செய்வதில்லை.உலமாக்கள் இல்லாத பிரச்னைகளைத் தோற்றுவித்து அவற்றுக்கு பரிகாரம் சொல்கின்றார்கள் .இந்த மனப்பாங்கு இலங்கையில் மட்டும்தான் இருப்பது துரதிருஷ்டம்.

    ReplyDelete
  2. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

    'உங்களுக்குத் தலைவராக நியமிக்கப் படுபவர் கருப்பு நிறமுடைய (நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள்.  அவர்சொல்வதைக் கேட்டு நடங்கள்.'

    அறிவிப்பவர் அனஸ் (ரலி)
    (ஸஹீஹ் புகாரி # 693)
    www.tamililquran.com/hadhees

    ReplyDelete
  3. அல்லாஹ் போதுமானவன்

    ReplyDelete
  4. உலகில் மிக அதிகமாக சோதிக்கப்பட்டவர்கள் நபிமார்கள். நமது நபியைக்கூட சொல்லக்கூடாத வார்த்தைகளிலெல்லாம் தூற்றினர். இப்பொழுதும் தூற்றிக் கொண்டும் இருக்கின்றனர். இதனால்தான் நபிமார்களுக்கு மிக உயர்ந்த கூலியை அல்லாஹ் மறுமையில் வழங்குவான். அல்லாஹ்வின் திருப்தியை நாடினால் நீங்கள் சிறந்த பொறுமையை அல்லாஹ்விற்காக பொறுத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  5. ஏன் மக்களை பிறை பாக்க தூன்டிநீர்கள். அதை நீங்கள் பார்திருக்கலாமே.அது மாத்திரமல்ல பிறைபார்பவர்கள் எத்தக்கொள்கை உடையவர் இருக்க வேண்டும் எனும் நிபந்தனை இடவில்லையே முதல் வெமல்லி 28 பிறை காரும் சாத்தியம் உனக்கு என்று கூறினார் அடுத்த வெள்ளி.நான் பாகிஸ்தானுடன் பேசினேன். There is no any chance to moonsighting in Sri Lanka. என்றார். முன்னுக்கு பின் முரணாக பேசி மக்களை குழப்ப வேண்டாம்.ஏனென்றால் நானும் என்னைப்போன்ர பலர் பிறை விஷயத்தில் அரச அங்கீகாரம் அளிக்கப்பட்டவர்களைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் முடிவில் இருக்கின்றோம்

    ReplyDelete
  6. தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுவதை தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள் , தலைவன் ஷாரியத்திற்கு கட்டுப்படாவிட்டால் , அவனை ஒதுக்கவேண்டும் -- இஸ்லாத்துக்காக தலைமைத்துவமே யன்றி , தலைவனுக்காக வும் ; இயக்கத்துக்காகவும் ,இஸ்லாமில்லை , மேலான நபியோடு இன்றிய சமூகத்தை கூறு போடும் இயக்க வெறிபிடித்த முதலாளித்துவ ஆலிம்களோடு போயிடுவது பாவம் ரிஸ்வி முஃதிக்கு வக்காலத்து வாங்கும் தப்லீக் , உண்மையை உணராது

    ReplyDelete

Powered by Blogger.