Header Ads



ஒலுவில் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற, ஒரு மாணவியின் வேதனை


ஏ தோச !!!
சகிக்க முடியவில்லையா உனக்கு ???
சங்கையான மாதத்தில் சங்கையான இடத்தில்
சங்கையான பதவியை வகித்து கொண்டு சட்டம் படித்த நீ
சாக்கடை பேச்சொன்றை பேசி இருக்கிறாயே. 
உன் மடமையின் உச்சம் உந்தன் சாக்கடை பேச்சில் புரிகிறது.
உன் சட்டமும் நீதியும் இதைத்தான் சொல்கிறதா ???
அல்லது உன் புத்தசாசனம் இதைத்தான் போதித்ததா உனக்கு ???

ஏ தோச !!!
சகிக்க முடியவில்லையா உனக்கு ???
முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சூறையாடினீர்கள்,
போதாதற்கு கல்வியிலும் கல்வி பயிலும் மாணவியர் மானத்திலும் சூறையாட நினைக்கிறீரோ ???
ஏன் நாங்கள் அரசியல் அனாதைகளாக நிற்பதனாலோ ???
அல்லது
எங்கள் அரசியல் தலைமைகள், ஆண்மக்கள் இல்லை என்பதனாலா ?
பேசுவார்கள் எம் தலைமைகள், அவர்கள் பதவிகளுக்கு மாத்திரமே.
அல்லது எதிர்வரும் தேர்தல் மேடைகளில் மாத்திரமே. 

ஏ தோச !!!
சகிக்க முடியவில்லையா உனக்கு ???
நீ இனவாதம் கக்க எம் மாணவிகளின் மானமா உனக்கு பகடைக்காயாய் கிடைத்தது.  
நீ பேசியது முஸ்லிம் மாணவிகளை மட்டும் அல்ல மொத்த மாணவிகளையும் சுட்டி  நிற்கிறது.
மாணவர்களின் ஒற்றுமையில் என்ன நடந்தது என்பதை இந்திய தமிழ் நாட்டில் இருந்து கற்றுக்கொள்,
நீ உன் அரசியல் வாழ்வுக்கு சாவுமணி அடித்து கொண்டாய்.

ஏ தோச !!!
சகிக்க முடியவில்லையா உனக்கு ???
உந்தன் நச்சுக்கருத்து மூலம் எதனை சாதிக்க நினைக்கிறாய்  ???
சீண்டிப்பார்க்கிறாயா எம் சமூகத்தை ???
தீய்ந்து விடுவாய் ஈற்றில் !!!

பெண்மையை போற்றியவளாய், காத்தமண்ணில் இருந்து,  மொத்த மாணவிகள் சார்பாகவும்.  

1 comment:

  1. அந்த தோசைக்கு !
    பச்சை மிளகாயையும் சேர்த்திருந்தால் இன்னும் உறைப்பாக பட்டிருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.