Header Ads



கோத்தாவை, முஸ்லிம்கள் ஆதரிப்பார்களா...?

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில், அத்தேர்தலில் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்கள் குறித்த விவாதங்கள் இப்போதே களைகட்டத் துவங்கியுள்ளன. பகிரங்கமாகவும் ரகசியமாகவும் பல்வேறு வகையான கலந்துரையாடல்களும் காய்நகர்த்தல் களும் இது தொடர்பில் இடம்பெற்று வருகின்றன.

ஐக்கிய தேசிய கட்சியில் ரணிலா அல்லது சஜித் பிரேமதாஸவா அதையும் கடந்து ஒரு பொது வேட்பாளரா என்ற விவாதம் மேற்கிளம்பியுள்ளது. பொது ஜன பெரமுண, சிறி லங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய மூன்று கட்சிகளிலிருந்தும் ஷமல் ராஜ பக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷ, பசில் ராஜ பக்ஷ ஆகியோரிடையே போட்டி யிடப் போவது யார் என்ற ஊகங்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.

அரசியல்வாதிகளுக்கு அப்பால் அரசியல் சாராத, மக்கள் அபிமானம் பெற்ற ஒரு பொது வேட்பாளராக கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவை களமிறக்கலாமா என்று சில கட்சிகள் யோசித்து வருகின்றன. கூட்டு எதிரணி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவை களமிறக்கினால் அவரைத் தோற்கடிப்பதற்காகவே குமார் சங்கக்கார பொது வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியினால் களமிறக்கப்பட லாம் என்று அக்கட்சியின் சில தலைவர் கள் கூறி வருகின்றனர். சங்கக்கார இதற்கு ஒப்புதல் அளிப்பாரா என்பது ஒருபுறமிருக்க, அவரது அரசியல் அனுப வமும் முதிர்ச்சியும் போதுமானதாக உள்ளதா என்ற கேள்வியையும் சிலர் எழுப்புகின்றனர்.

அரசியல் களத்தில் பலமான பல தலைவர்கள் இருந்தபோதும், அதற்கு வெளியிலிருந்து ஒருவரைக் கொண்டு வருவதற்கான தேவை ஏன் எழுந்துள் ளது என்ற கேள்வியை பலரும் எழுப்பு கின்றனர். மைத்ரி ஜனாதிபதியானவுடன் கொண்டு வந்த அரசியல் திருத்தத்தின் படி மஹிந்தவினால் இன்னொரு முறை ஜனாதிபதித் தேர்தலில் இறங்க முடியாது. ரணில் தேர்தலில் குதித்து வெற்றி பெறுவார் என்பதற்கு எவ்வித உத்தர வாதமும் இல்லை. 2020 இல் அரசிய லில் இருந்து ஓய்வுபெறப் போவதில் லை என்ற மைத்ரியின் சூட்சுமம் மீண்டும் அவர் தேர்தலில் நிற்கலாம் என்ற ஊகத்தை உருவாக்குகின்றது. அவருக்கு நெருக்கமான சிலர் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியோ ஜேவிபியோ ஏனைய சிறுபான்மைக் கட்சிகளோ மைத்ரிக்கு இன்னுமொரு முறை பிரச்சாரம் செய்யும் நிலையில் இல்லை. சிறி லங்கா சுதந்திரக் கட்சியோ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ தனி வேட்பாளர்களை இறக்கப் போவதில்லை. எதிரணியில் உள்ள பொதுஜன பெரமுணவிலிருந்தே வேட்பாளர்களை முன்னிறுத்தும் முஸ்தீபுகள் தீவிரமாக இடம்பெறுகின் றன. அதிலிருந்தே கோத்தாபயவை களமிறக்கப் போவதாக மஹிந்த பக்தர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், கோத்தாபயவை களமிறக்கி னால் அவரை எளிதாகத் தோற்கடித்து விடுவோம். ஏனெனில் அவர் ஒரு பலவீனமான வேட்பாளர் என்று ஜேவிபி மற்றும் ஐ.தே.க. தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிங்கள பௌத்தர்களிடையே கோத்தாபயவுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கும் வரவேற் பும் உள்ளது. ஆனால், சிறுபான்மை முஸ்லிம் தமிழ் மக்களிடையே அவரைப் பற்றிய ஒரு அச்சமும் பயமுமே நிலவுகின்றது.

முள்ளிவாய்க்கால் போரில் அப்பாவி தமிழ் மக்கள் பலர் கொல்லப்படுவதற்கு கோத்தா கரணமானார் என்பதும் தமிழர் களின் அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு குறுக்கே நிற்பவர் என்றும் தமிழர்களில் பெரும்பான்மையினர் எண்ணுகின்றனர். போர் முடிந்த கையோடு கிரீஸ் பூதங் களை அவிழ்த்து விட்டு முஸ்லிம்களை பீதிக்கு உட்படுத்தினார் என்றும் முஸ் லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரப்படுவதற்கும் பிபிஎஸ் போன்ற வலதுசாரி இனக் கும்பல்களுக்கு ஆதரவளித்து அழுத்கமை களவரத்திற்கு தூபமிட்டார் எனவும் முஸ்லிம்கள் கோத்தா குறித்து மிகுந்த அச்சம் கொண்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் ஒன்றைப் பொறுத்தவரை, தமிழ் முஸ்லிம் சிறு பான்மை மக்களின் ஆதரவின்றி எவரும் வெல்ல முடியாது. 2005 தேர்தலில் ரணில் தோற்றதற்கும் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் மைத்ரி வென்றதற்கும் சிறு பான்மை மக்களே காரணமாயினர். தற்போது சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லாத ஒரு வேட்பாளர் என்ற வகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியும் ஜேவிபியம் கோத்தாபயவை இலகுவில் வீழ்த்தலாம் என்று கருதுகின்றனர். இந்தப் பலவீனத்தைக் கருத்திற் கொண்டே கூட்டு எதிரணி தனது வேட்பாளரை தெரிவுசெய்யும் என எதிர்பார்க்கலாம். கோத்தாவே தமது ஒற்றைத் தெரிவு என்று வைத்துக் கொண்டால் சிறுபான் மையினரது ஆதரவை -குறிப்பாக முஸ் லிம்களின் ஆதரவைத் திரட்டுவதே கூட்டு எதிரணியின் மிகப் பெரும் முயற்சியாக இருக்கும்.

கோத்தாவின் எதிர்பார்ப்பு
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ சமீபத்திய டெய்லி மிரர் ஆங்கில இதழுக்கு வழங் கிய நேர்காணலொன்றில், முன்னாள் ஜனாதிபதியும் தனது அண்ணனுமாகிய மஹிந்த ராஜபக்ஷ ஒப்புதல் வழங்கி னால் ஜனாதிபதி வேட்பாளராக தாம் களமிறங்கத் தயார் நிலையில் இருப்ப தாகக் குறிப்பிட்டிருந்தார். ஆயினும், மஹிந்தவின் பகிரங்க அறிவித்தலுக்கு முன்பாகவே கோத்தா 2020 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலை நோக்கி செயல்பட்டு வருவது கண்கூடு. அதிகாரபூர்வமாக கூட்டு எதிரணியினர் இன்னும் தமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அறிவிக்கவில்லையாயினும், மரபுசாரா அரசியல்வாதிகளையே மக்கள் விரும்புவதாகக் கூறி வரும் கோத்தா, பல்வேறு சிவில் சமூக நிறுவனங்களை இயக்கி வருகின்றார்.

பௌத்த கோயில்களை அடிப்படை யாகக் கொண்ட அரசியல் பிரச்சார வேலைகளை அவர் எப்போதோ துவங்கிவிட்டார். கூட்டு எதிரணியி லுள்ள அனைவரும் போல் கோத்தாவை விரும்புகிறார்களா என்பது ஒரு சிக்க லான கேள்விதான். அதற்குள் மஹிந்த வின் தீவிர பக்தர்கள், பக்தர்கள், ஆதர வாளர்கள் என்ற படிநிலையில் பலர் உள்ளனர்.

சுதந்திரக் கட்சிக்குள் அரசியலிலும் அனுபவத்திலும் முதிர்ந்த சிரேஷ்ட தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்க ளுள் ஷமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபாலடி சில்வா போன்றவர்கள் முக்கியமானவர் கள். சுதந்திரக் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டுள்ள சமீபத்திய சீர்திருத்தங்க ளில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ கட்சியின் ஆலோசகராக நியமிக்கப் பட்டுள்ளார்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட, மஹிந்தவின் நிழல் தலைமையில் இயங்கும் மஹஜன பெரமுனவும் சுதந்திரக் கட்சியும் இணைந்துதான் கோத்தாவை களமிறக் கப் போகிறது என்ற ஊகம் இப்போது வலுவாக எழுகின்றது. கோத்தாவை விட்டால் வேறு யாரும் இல்லை என்று வெட்கமின்றிக் கூறும் சில தலைவர் களும் கட்சிக்குள் இருக்கவே செய்கின் றனர்.
2015 ஆட்சி மாற்றத்தை அடுத்து ரணில்-மைத்ரி அரசாங்கத்தினால் முனைப்பாகக் குறிவைக்கப்பட்டவர் கோத்தா. எவன்ட் கிரேட் மிதக்கும் ஆயுதத் தொழிற்சாலை விவகாரம், லசந்த விக்ரமதுங்க படுகொலை, தவறான நிதிக் கையாடல் என பல்வேறு ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட கோத்தா மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படா மல் இருப்பதற்கும் அவர் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதற்கும் இடையில் மிகுந்த சம்பந்தமுள்ளது.

கோத்தா கைதுசெய்யப்படவிருந்த பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி மைத்ரி நேரடியாகத் தலையிட்டு அக்கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்தினார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தப்பித் தவறி கோத்தா வெற்றி பெற்றால் தமது நிலை குறித்து ஜனாதிபதி முன்கூட்டியே ஊகித்திருக்கலாம். இந்தப் பின்னணி யிலேயே அவர் காப்பாற்றப்பட்டு வருவதாக ஜேவிபி தெரிவிக்கின்றது.

நிறைவேற்று அதிகார முறையை நீக் குவதற்கு ஜேவிபி கொண்டு வந்துள்ள பிரேரணையை ஐக்கிய தேசிய கட்சி மட்டுமே ஆதரித்துள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தில் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார முறை நீக்கப் படும் என்ற வாக்குறுதியோடு பதவிக்கு வந்த மைத்ரிபால ஜனாதிபதியோ அவ ரோடு உள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர் களோ அப்படி யொன்றும் இல்லாதது போலவே செயல்படுகின்றனர்.

ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பி னர் ஒருவர் ஜனாதிபதி முறைமையை  நீக்கும் தமது பிரேரணையை நியாயப் படுத்தும்போது, இந்த அதிகாரக் குவிப்பை எதிர்காலத்தில் கோத்தா போன்ற ஒரு தலைவர் பயன்படுத்தி னால் நாட்டுக்கு என்ன நேரும் என்று கேள்வியெழுப்பியிருந்தார். குறிப்பாக  சிறுபான்மைச் சமூகங்கள் பெருத்த பாதிப்பை எதிர்நோக்குவார்கள் என்று ஜேவிபி கூட மறைமுகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.
கோத்தாவும் முஸ்லிம்களும்

கோத்தா குறித்து முஸ்லிம் சமூகத் தில் நிலவும் புலக்காட்சிகள் எவை? போர் முடிந்த கையோடு கிழக்கிலும் நாட்டின் ஏனைய சில பகுதிகளிலும் இராணுவ வீரர்களை கிரீஸ் பூதங்களாகக் களமிறக்கியவர் கோத்தா. தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள். இனி முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் உள்ள னவா என்பதைப் பரீட்சிப்பதற்கு பூதங் களின் நாடகம் அரங்கேற்றப்பட்டது.

இதையும் தாண்டி, முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து முக்கிய வணிகப் புள்ளிகள் சிலர் கடத் தப்பட்டனர். அவர்களிடமிருந்து பெருந்தொகைப் பணம் கப்பமாகப் பெறப்பட்டது. ஆனால், கப்பம் செலுத் திய முஸ்லிம் வணிகர்கள் இந்த அப் பட்டமான அநீதியை வெளியில் சொல் லாத வகையில் அச்சுறுத்தப்பட்டனர்.

ஞானசார தேரருக்கு வெளிப்படை யான ஆதரவைத் தெரிவிக்கும் வகை யில் காலியில் பொதுபல சேனாவின் தலைமைக் காரியாலயம் கோத்தாவி னால் திறந்து வைக்கப்பட்டது. ஹலால் விவகாரத்தில் முஸ்லிம்களையும் ஜம் இய்யதுல் உலமாவையும் பொதுபல  சேனாவிடம் அடிபணிய வைத்ததில் கோத்தா தனது அதிகாரத்தையும் பலத் தையும் நன்கு பிரயோகித்தார். இறுதி யில் அழுத்தகமயில் பாரிய கலவரம் ஒன்று முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்படுவதற்கு பொதுபல   சேனா வகை செய்தது. ஆக, கோத்தா முஸ்லிம்களின் மனங்களில் இன்னும் ஒரு பயமுறுத்தும் பூதமாகவே தோன்று கிறார்.
சிறுபான்மையினரின் ஆதரவின்றி இங்கு யாரும் ஜனாதிபதியாக வர முடியாது. அவ்வாறாயின், தமிழர்களின் வாக்கு கோத்தாவுக்கு எந்தவகையிலும் கிடைக்கப் போவதில்லை. ஏனெனில், அவர்கள் முஸ்லிம்கள் போலல்லாது ஒவ்வொரு ஆண்டிலும் முள்ளிவாய்க் கால் படுகொலையை நினைவுகூர்கின்ற னர். போரின் விளைவான நில இழப் பை இன்னும் அவர்கள் எதிர்கொண்டுள் ளனர். இதனால், முஸ்லிம்களின் வாக்கு களை எவ்விலை கொடுத்தேனும் பெறவேண்டிய நிர்ப்பந்தம் கூட்டு எதிரணிக்கும் கோத்தாவுக்கும் இருக்கப் போகின்றது. அதில் சந்தேகமில்லை. இந்தக் கள உண்மையைப் புரிந்து கொண்ட கோத்தாவும் மஹிந்த பக்தர்களும் தற்போது முஸ்லிம் வாக்குகளைக் கவரும் செயற்பாடுகளில் தீவிர கவனம் குவித்து வருகின்றனர்.

மஹிந்தவும் கோத்தாவும் பசிலும் தனித்தனியான இப்தார் நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடாத்தி வருகின்றனர். கொழும்பில் மஹிந்தவின் அரண்மனை யில் நடைபெற்ற பிரமாண்டமான இப்தாருக்கு றவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுத்தீன் ஆகியோர் கூட ஆஜராகி யிருந்தனர். இது இவர்களின் அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தின் அடையாளமா என்ற சந்தேகம் பரவலாய் எழுந்துள்ளது.

சலுகைகளுக்கும் பதவிகளுக்கும் விலை போகின்றவர்கள் இப்போது எதிர்கால அரசியல் அச்சத்தைக் கவனத் திற் கொண்டு திசை மாறுகிறார்களா என்ற ஊகம் எழுவது தவிர்க்க முடியாதது.
காலியில் இடம்பெற்ற பிரமாண்ட மான ஓர் இப்தார் நிகழ்ச்சியில் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். முஸ்லிம் தலைவர்கள் அவருக்கு மாலை அணிவித்து முஸ்லிம் சிறார்களின் ரபான் ஊர்வலத்தோடு அவர் ஆர்ப்பாட்டமாக அழைத்துச் செல்லப்பட்ட காட்சி முஸ்லிம்களின் மனோநிலை மாறிவிட்டதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

பேருவலையில் இடம்பெற்ற மற்றொரு இப்தார் நிகழ்ச்சியில் கோத்தா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில், “முஸ்லிம்கள் எதிர்காலத்தில் நிம்மதியாகவும் சுதந்திர மாகவும் வாழ முடியும் என்பதை நாங்கள் உறுதிசெய்கின்றோம்” என்று கூறிய போது பலத்த கரகோசம் காதைப் பிளந்தது. இத்தனை காலமும் முஸ்லிம் கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் கோத்தா, இதற்குப் பின்னர் அப்படி வாழ வேண்டுமாயின், தனக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மறைமுகமாகச் சுட்டுகின்றார்.

அரசியலில் நிலைப்பாடுகள் மாற்றமடையலாம். ஆனால், அதிகாரத்திற்கு வரும் வரை தேன்மொழியில் உரை யாடும் இனவாதிகளுக்கு வாக்களித்து விட்டு, பின்னர் கடந்த காலத்தின் மீது கைசேதப்படும் நிலைக்கு சமூகம் வந்துவிடக் கூடாது. உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தியையும் கோத்தா சந்தித்து உரையாற்றியுள்ளார். அரசியல் தலைவர்களோ மார்க்கத் தலைவர்களோ முஸ்லிம் சமூக நலனை முன்னிறுத்தியே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். அளுத்கமயும் திகனயும் இதையே உணர்த்தியுள்ளன.

எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர் தலில் யாரை ஆதரிப்பது என்ற கேள்விக்கு சமூக நலனிலிருந்து விடை காண வேண்டிய பொறுப்பை நமது தலைவர்கள் சுமந்திருக்கிறார்கள். இந்த உண்மையை முஸ்லிம் சிவில் சமூகம் அடிக்கடி நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

– ரவூப் ஸய்ன் –

3 comments:

  1. Anyone who likes freedom and democracy will not support Gothabaya. He had never been a politician.He was an officer only performing his duties. He may be from a political background. That does not qualify him to be leader of a country. Winning a war is not the only criteria to become a leader of a country.There is an
    adage,Fool tread where wise fears.This is the strategy in winning wars. His military attitudes and mentality will not allow him to perform his duties democratically. This was proved during his being as Secretary defence. Tail end Mahinda's period. Mahinda's knee jerks seeing Gothabaya. He performed his task well along with forces and won the war. Part of the credit goes him. No one dispute. There everything comes to an end. We can think of him again if you have War in future. Now all we require is a democratic leader with vision, far sightednes, international image , one who could bring about communal harmony and prevents raising the ugly head of communalism.

    ReplyDelete
  2. Anyone who likes freedom and democracy will not support Gothabaya. He had never been a politician.He was an officeroonlyoperformingohis duties. He may be from a political background. That does not qualify him to be leader of a country. Winning a war is not the only criteria to become a leader of a country.There is an
    adage,Fool tread where wise fears.This is the strategy in winning warsw His military attitudes will allow to perform his duties democratically. This was proved during his being as Secretary defence. Tail end Mahinda's period. Mahinda's knee jerksj seeing Gothabaya. He performed his task well along with forces and won the war. Part of the credit goes him. There everything comes to and end. We can think of him again if you have Warwickshire future.

    ReplyDelete

Powered by Blogger.