Header Ads



உமா குமாரசுவாமி, தென்கிழக்குப் பல்கலைக்கழக உயர் அதிகாரியாக நியமனம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு உயர் அதிகாரியொருவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இவ்வாறு உயர் அதிகாரியாக பேராசிரியர் உமா குமாரசுவாமி கடந்த திங்கள் (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் நிருவாக நடவடிக்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  இந்நிலையை பல்கலைக்கழக அதிகாரிகளினால் சீர் செய்ய முடியாமல் இருப்பதாகவும் இதற்காகவேண்டியே உயர் அதிகாரியொருவரை நியமிக்க வேண்டி ஏற்பட்டதாகவும் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இது தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவித்துள்ளதாக சகோதார தேசிய ஊடகமொன்று அறிவித்துள்ளது.  

3 comments:

  1. Well done விஜயதாச ராஜபக்ச
    Also, we need full investigation & structural changes

    ReplyDelete
  2. பாவம் இந்த அம்மணி...!! பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று ஓடப்போகிறார். அதை விடப்பாவம் அந்த பல்கலைக்கழகத்தின் நிலை...!! பல குழுக்கள் இந்த பல்கலைக்கழத்தில் உண்டு. இவர்களுக்குள் போட்டியும் பொறாமையும் நிறைய உண்டு. தங்களது கடமை மறந்து பல்கலைக்கழகத்தின் நோக்கம் மறந்து, சண்டையும் சச்சரவும் படுவார்கள். அங்குள்ள பலரின் நடவடிக்கை வைக்கோல் பட்டறையில் படுத்த நாயின் சீலமாக இருக்கும். பேராசிரியை உமா குமாரசாமிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் அங்கு செல்லும் நோக்கம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete
  3. UMA KUMARA SAAMI IS GREAT RULLER SHE WILL TEACH THE RULES AND REGULATION FOR THE CRUFTED PEOPLE IN A SHORT TIME. THEY WILL LEAN SOON. MR. VIJAYATHASA PLEASE EXTEND THE PERIOD FOR UMA KUMARASAMI AT LEAST 6 MONTHS

    ReplyDelete

Powered by Blogger.