Header Ads



இணையத்தளங்கள் சில, தடை செய்யப்படும் - ஜனாதிபதி எச்சரிக்கை

சமூ­கத்தில் பொய்­யான தக­வல்­களைப் பரப்பி மக்­களைத் தவ­றான பாதைக்கு இட்டுச் சென்று அழி­வுக்­குள்­ளாக்கும்சில இணையத்­த­ளங்­களைத் தடை செய்­யவுள்ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தும் இன­வா­தத்தைத் தூண்டும் தனி­ந­பர்­க­ளுக்கு களங்­கத்தை ஏற்­ப­டுத்தும் சமூக வலைத்­த­ளங்­களைக் கட்டுப்படுத்தும் படி, நான் சர்­வ­தேச கணினி சங்­கத்தின் பிர­தி­நி­தி­களை அழைத்து தெரி­வித்­தி­ருக்­கிறேன். யார் எதிர்த்­தாலும் பிரச்­சி­னை­யில்லை. வேறு நாடு­களைப் போன்று நாமும் இவ்­வா­றான வெப் தளங்­களைத் தடை செய்வோம் என்றும் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து தெரி­வித்­த­தா­வது,

நான் இவ்­வாறு தெரி­வித்­த­மைக்கு எதி­ராக எனக்கும் பல விமர்­ச­னங்கள் வெளி­யி­டப்­படும். பல்­வேறு விட­யங்­களை எழு­து­வார்கள். அதற்கு நான் பயப்­ப­டப்­போ­வ­தில்லை.

இதே­வேளை நல்ல விட­யங்­களை எழுதும், தெரி­விக்கும் இணையத்­த­ளங்­க­ளுக்கு எங்­களால் பிரச்­சினை எதுவும் இல்லை. சமூ­கத்­துக்கும் பிள்­ளை­க­ளுக்கும் நல்ல விட­யங்­களைத் தெரி­வித்து வழி­ந­டத்தும் இணையத்­த­ளங்­க­ளுக்கு எவ்­வித தடையுமில்லை.

சில இணையத்தளங்கள் வழக்குத் தீர்ப்புகளைக் கூட விமர்சித்து நீதிபதிகளுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளன என்றார்.

1 comment:

  1. What about Politicians who is talking lies ( Example: Not knowing 100days programme, Not given Heli to former President etc)

    ReplyDelete

Powered by Blogger.