Header Ads



"ஜனாதிபதியை பணம் கொடுத்து, வாங்குவது இலகுவானது"

மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரவுள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தம் சட்டம் குறித்து சில தரப்பினர் தவறான கருத்துக்களை முன்வைத்து, நாடு பிளவுப்பட போகிறது என்ற எண்ணப்பாட்டை உருவாக்கி வருவதாக அந்த முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முயற்சிக்கும் தரப்பினர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வாங்கக் கூடிய ஒருவர் ஜனாதிபதியாக வரக் கூடும் இவர்கள் கூறுகின்றனர். ஆனால், அது சாத்தியமற்றது.

தற்போதுள்ள முறையின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை ஒரு நாடு பணம் கொடுத்து வாங்குவது இலகுவானது என்பது மகிந்த ராஜபக்சவுக்கு சீனா பணம் கொடுத்துள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவல் மூலம் உறுதியாகியுள்ளது.

இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.