Header Ads



பிறை கொண்­டு­வந்த சர்ச்சை, ஜம்­இய்யா தனது கட­மையை முடித்­து­விடக் கூடாது.

தாரிக் ஸம்ஊன் (இர்பானி)

பெருநாள் முடிந்­து­விட்­டது.பெருநாள் பிறை கொண்­டு­வந்த சர்ச்சை மட்டும் இனி முடி­யாது தொட­ரப்­போ­கி­றது. எப்­ப­டியோ வரு­டாந்தம் இல்­லா­விட்­டாலும் இரண்டு மூன்று வரு­டங்­க­ளுக்கு ஒரு தட­வை­யேனும் இந்த சர்ச்சை எழாமல் இருந்­த­தில்லை.

எப்­ப­டியோ இஜ்­திஹாத் எனும் முறை­யி­யலை சார்ந்த இந்தப் பிறை சர்ச்சை,சமூ­கத்தை பல­வ­கையில் உட்­கூ­றாகப் பிள­வு­ப­டுத்­தி­யுள்­ளது. இஜ்­திஹாத் வகைப்­பட்ட எந்த ஒன்றும் சந்­தே­கத்­துக்­கி­ட­மின்றி நிரூ­பிக்­கப்­பட முடி­யா­தது. பிறை சர்ச்­சையில் ஒவ்­வொரு சாரா­ருக்கும் ஒவ்­வொரு நியாயம் உண்டு.ஒவ்­வொரு நிலைப்­பாட்டைக் கொண்­டோ­ருக்கும் அல்­லாஹ்வே கூலி வழங்­கட்டும் என பிரார்த்­திப்­போ­மாக!

இஜ்­திஹாத் வகைப்­பட்ட விட­யங்­களில் இஸ்­லாத்தின் நிலைப்­பாடு மிகத்­தெ­ளி­வா­னது. "தீர்ப்பு சொல்லும் ஒருவர் ஆய்­வு­செய்து அதில் சரி­யான நிலைப்­பாட்டை அடைந்தால் அவ­ருக்கு இரண்டு கூலிகள். அவர் ஆய்­வு­செய்து தவ­றி­ழைத்­து­விட்டால் அவ­ருக்கு ஒரு கூலியும் கிடைக்கும் என்ற ஸஹீஹுல் புகா­ரியில் பதி­வா­கி­யுள்ள இந்த ஹதீஸ், இஜ்­திஹாத் வகைப்­பட்ட நிலைப்­பாட்டின் இஸ்­லாத்தின் பார்­வையை மிகத்­தெ­ளி­வாக முன்­வைக்­கி­றது. இப்­ப­டி­யான ஆய்­வுக்கும் பல்­வேறு நிலைப்­பா­டு­க­ளுக்கும் இடம்­பா­டான விட­ய­மொன்றில் ஒரு நிலைப்­பாடே சந்­தே­கத்­திற்­கி­ட­மின்றி மிகச்­ச­ரி­யா­னது என்று எவரும் உரிமை கோர முடி­யாது.

ஷவ்வால் பிறை தொடர்­பான  சர்ச்­சைக்கு வகை சொல்ல வேண்­டிய அ.இ.ஜ.உ க்கு இனி ஒரு கடமை இருக்­கி­றது.பிறை தொடர்பில் எழுந்த சர்ச்­சையைத் தொடர்ந்து ஒரு பெரிய உரை­யாடல் சமூ­கத்தில் நடந்து வரு­கின்­றது.கவ­னத்­திற்­கொள்­ளத்­தக்க ஆய்­வு­களும் முன்­மொ­ழி­வு­களும் பல தரப்­பாலும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதனை மிக இல­குவில் ஜம்­இய்யா கடந்­து­செல்ல முடி­யாது.முஸ்லிம் சமூ­கத்தின் பெரும்­பான்­மையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சிவில் அமைப்பு என்ற வகையில் சமூ­கத்தின் விமர்­ச­னங்கள், அபி­லா­சைகள், ஆலோ­ச­னை­களை உள்­வாங்கும் பொறுப்பு ஜம்­இய்­யா­வுக்கு உள்­ளது.

ஷவ்வால் பிறை தொடர்பில் ஜம்­இய்­யாவின் நிலைப்­பாட்டை நியா­யப்­ப­டுத்­து­வ­தோடு ஜம்­இய்யா தனது கட­மையை முடித்­து­விடக் கூடாது. தனது இஜ்­திஹாத்  நிலைப்­பாட்டை நியா­யப்­ப­டுத்­து­வது எந்த வகை­யிலும் பிழை­யா­காது. ஆனால் குறித்த இஜ்­திஹாத் தொடர்பில் இயல்­பாக எழுந்­துள்ள புதிய உரை­யாடல், எதனை சொல்ல வரு­கின்­றது என்­ப­தையும் கவ­னத்­திற்­கொள்ள வேண்டும். இது ஜம்­இய்யா சரி­கண்ட இஜ்­திஹாத் நிலைப்­பாட்டை இன்னும் மிகச் சரி­யான நிலைப்­பாட்டை எடுக்கும் புதிய நியா­யங்­களை தேடு­வ­தற்­கான வழி­யாக அமை­யலாம்.

ஜம்­இய்யா இந்த விட­யத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்­ப­தற்கு இங்கு இன்­னு­மொரு விட­யமும் இருக்­கி­றது. இஜ்­திஹாத் அடிப்­ப­டையில்  சர்­வ­தேச பிறையை சரி­காணும் சாராரின் நிலைப்­பாடு ஜம்­இய்­யாவின் நிலைப்­பாட்­டுக்கு முர­ணா­வது இயல்­பா­னதே.ஆனால் அ.இ.ஜ.உ. பிறை முடி­வுக்கு கட்­டுப்­பட்டு வரும் சாராரும் இது போன்ற நிலை­களில் ஜம்­இய்­யாவின் நிலைப்­பாட்­டுக்கு வெளியில் வேறொரு இஜ்­தி­ஹாதை நோக்கி செல்­வதை அது பிழை­யான இஜ்­திஹாத் எனும் ஒற்றை வார்த்­தையால் மாத்­திரம் எதிர்­கொள்­ளக்­கூ­டாது.ஏனெனில், குறித்த உரை­யா­ட­லா­னது இது­வரை ஜம்­இய்­யாவின் தலை­மைக்கு கட்­டுப்­பட்டு வரும் சமூ­கத்­திற்குள் இடம்­பெற்று வரும் விடயம் என்­பதை மனங்­கொள்ள வேண்டும். அதனால் மாறு­பட்ட நிலைப்­பாட்டைக்  கொண்­டுள்ள உள்­நாட்டுப் பிறைக்­கா­ரர்­களில் அபிப்­பி­ரா­யங்கள் கண்­டிப்­பாகக் கவ­னத்தில் கொள்­ளப்­ப­டவே வேண்டும்.

சமூ­கத்தில் எழுந்­துள்ள இந்த உரை­யா­டலை வளர்த்­துக்­கொண்டு செல்­வதும் அதனை முறைப்­ப­டுத்தி தீர்­வுக்­காக ஆவன செய்­வதும் ஜம்­இய்யா  மீது தற்­போ­துள்ள மிகப்­பெ­ரிய பொறுப்­பாகும். இதற்­கா­கத் தனி­யான உப குழு­வொன்றை அமைப்­பதோ அல்­லது வேறு பொறி­மு­றை­யை கையாள்­வதோ அவ­சி­ய­மா­கி­றது.

இங்கு பிறை பார்த்தல், அது தொடர்­பாக ஏலவே அ.இ.ஜ.உ. பின்­பற்­றி­வரும் நிய­மங்கள், இதனை விடப் பின்­பற்ற முடி­யு­மான வேறு அணு­கு­மு­றைகள் தொடர்பில் எந்தக் கருத்­தையும் நாம் இங்கு முன்­வைக்க விரும்­ப­வில்லை. இது தொடர்பில் சமூக வலைத்­த­ளங்­களில் ஆழ­மான விவா­தங்கள் நடை­பெற்று வரு­கின்­றன. இந்­நி­லையில் இந்த உரை­யா­டலை,விமர்­ச­னங்­களை ஆக்­க­பூர்­வ­மான ஒன்­றாக மாற்றி பிறை தொடர்­பான இஜ்­தி­ஹாதை இன்னும் சிறப்­பாக மேற்­கொள்ள வழி­ய­மைக்க வேண்டும் என்­பதே எமது அபிப்­பி­ராயம்.

பிறை தொடர்­பான விடயம் மட்­டு­மன்றி, பல்­வேறு அபிப்பிராயங்களை கொண்டுள்ள எல்லா விடயங்கள் தொடர்பாகவும் இந்த நிலைப்பாடே ஆரோக்கியமானது. சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட முடியுமான இஜ்திஹாத் ஒன்றில்லை என்றாலும் மிகச் சரியான இஜ்திஹாத் முடிவொன்றைக் கண்டடைய முடியுமான முயற்சியொன்றை கைக்கொள்வது தவறில்லை. அதற்கான மாறுபட்ட உரையாடல்கள் இருப்பதும் தவறில்லை.

No comments

Powered by Blogger.