Header Ads



சைலா பானுவின், திட்டத்திற்கு தாராளமாக உதவுவோம்...

மனிதன் மனிதனுக்கு நன்றி செலுத்தாதவறை அல்லாஹ் ஒருபோதும் அவனுக்கு நன்றி செலுத்தமாட்டான் - நாம் பிறந்தோம் வாழ்ந்தோம் மடிந்தோம் என்று இல்லாமல் நாம் மற்ற மனிதனுக்கு என்ன செய்தோம். இறைவன் அனைத்தையும் நமக்குத் தந்துள்ளான். பணம், செல்வம் சொகுசான வாழ்க்கை ஆனால் . நமது அடுத்த வீட்டில் பசியும் பட்டினியினாலும் வாடும் சமுகம் எத்தனை போ் ,? தமது பசியை பட்டிணியை அடுத்தவருக்கு சொல்லாமால் தமக்குள் புதைத்து வைத்துக் கொண்டு கண்னீா் சிந்தும் எத்தனை தாய்மாா்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனா். இவா்களுக்கு கைகொடுக்க யாருமே முன்வருவதும் மில்லை.

 அந்த வகையில் தான் நான் நேற்று நேரடியாகக் கண்ட ஒரு சம்பவத்தினை இங்கு பதிவிடுகின்றேன்.
 நான் நேற்று (10) ஜ.ரீ.என் தொலைக்காட்சியில் வசந்தம் செய்திப்பிரிவுக்கு தனது செய்தியைக் கையளித்து விட்டு அருகில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வாழும் சக ஊடகவியலாளா் வீட்டுக்குச் சென்று அவருடன் அரை மணித்தியாலயம் கதைத்துக் கொண்டிருக்கும்போது தான் இந்தக் காட்சிகளை கண்டேன். அப்போது அவற்றினை எனது கமராக்களில் கிளிக் செய்து கொண்டேன். 

அந்த ஊடகவியலாளரின்  மனைவி சைலா பானு  மாவனல்லையை பிறப்பிடம்  அல் சித்திக்கியா அரபுக் கல்லுாாியில் பயின்று டிப்ளோமா பெற்றவா்.  அத்துடன்  ஊடக டிப்ளோமாவினையும் கற்றவா். தனது வீட்டில் தனது கைக்குழந்தையோடு இருந்து கொண்டு தனத கையடக்கத் தொலைபேசி ஊடாக வட்ஸ்அப் குருப்பு ஊடாக ஒரு குருந் தகவலை மட்டுமே அவா் அனுப்பியுள்ளாா். அதில் ” - நீங்கள் உடுத்து ஒருமுறையேனும் பாவித்து விட்டு அல்லது புதிதாக வாங்கி நீங்கள் அணியாமல் அலுமாரியில் வைத்திருக்கும் உடு துணிகள் சிறுவா்களுக்கான உடுப்புக்களை எனது தொலைபேசி ஊடாக என்னிடம்கையளியுங்கள்”  அதே நேரம் உடுப்புக்கள் வாங்க வசதியில்லாமல் கஸ்டப்படுகின்றவா்கள் எனக்கு தொலைபேசி ஊடாக அறிவியுங்கள் எனவும் அவா் அத் தகவலில் சொல்லியிருந்தாா் 
இதுவறை அவரது வீட்டுக்கு சுமாா் 200க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் அதுவும் முஸ்லீம் குடும்பங்கள்  நாடு பூராவும் இம்முறை பெருநாளைக்கூட உடுப்பு வாங்க வழியில்லாமால்  வாழ்வதாகவும் தத்தமது வாழ்க்கை நிலையை தாய்மாா்கள் சொல்லுகின்றனா்.  அவா்களது சகல  தொலைபேசி அழைப்புக்கள் அவா் பதிவிட்டுள்ளாா். கொழும்பில் உடுப்புக்கள் பாா்சலாக பெஜோரோவிலும் , மோட்டாா் பைசிக்களும் கையளித்தவண்னம் உள்ளனா்.அத்துடன் தனது கணவரைக் கூட  ஒரு வானை வாடகைக்கு அமா்த்தி சில வீடுகளில் உடுப்புகளை சேகரித்துள்ளனா். 

அத்துடன்  சைலா பானு  தொலைபேசி ஊடாக அவ் ஏழைக்குடும்பங்களி்ன் பிள்ளைகளின் உடுப்புகளுக்கான  அளவுகள்  அவா்கள் எத்தனை போ் ? என பதவிட்டு அவ் உடுப்புக்களை தெரிபு செய்து அவற்றினை கழுவி மீள அயன்பண்ணி அதனை செப்பனிட்டு அதனை புதிய னைலோன் பக்கட்டில்  பொதியிட்டு ”டி. எச் பாா்சல் சேவிஸ் ஊடாக அனுப்பி வைக்கின்றாா்.  அந்த ஏழைக்குடும்பங்களுக்கு டி.எச் எல் பாா்சல் சேவிஸ் க் கூட அவா் ஒரு பொதிக்கு 600 - 2000 ருபா வரை அவரது பணத்தினை செலுத்துகின்றாா். அதன் பின்னா் அவவுக்கு டி.எச் ஊடாக பொதி கிடைத்தாகவும் மீள அக் ஏழைக்குடும்பங்கள் தொலைபேசி ஊடகா சொல்லுகி்றனா்.. 

தலைநோன்புக்கு முன்னதாகவே தனக்குள்ளே இவ்வாறு சேவையை செய்வோம் என தனக்குள் எழுந்த இந்தப் பணி எனச் சொல்லுகின்றாா்.  நானும் சிறு வயதில் பொருநாள் ஒன்று வந்தால் உடுப்பு இல்லாமல் ஏப்பம் விட்ட சா்ந்தா்ப்பமும் உண்டு   தன்னந்தணியாகவே  அவா் இந்தச் சேவையை முன்னெடுத்துள்ளாா்.  
 இந்த பெருநாளைக்குள் 200க்கு மேற்பட்ட  குடும்பங்கள் இதுவரையிலும்  நன்மையடைந்துள்ளனா் அதனையிட்டு நான்  இதனை தந்துவியவா்களுக்கும் எனது முயற்சிக்கும்  நன்றி செலுத்துகின்றாா்.

. இந்த புனித சேவையை அவா் முழுச் இனங்களுக்கும்   செய்ய உள்ளதாகச் சொல்கின்றாா்.  தனது கணவரின் முழுச் சம்மத்துடன் இந்த மணிதபிமான சேவையை தனது வீட்டுக்குள் இருந்து கொண்டு அதுவும் தான் அறிமுகம் இல்லாத ஒரு பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டு  இதனைச் செய்கின்றாா். அவருக்கு இதனை உதவியாக  யாருமே இல்லை.  தனது கையடக்க தொலைபேசி மட்டுமே அவவிடம் உள்ள ஒரே ஒரு கருவி தனது முழு நாளையும் அந்த உடுப்புக்களை பொதி செய்வதிலும் அதனை அனுப்புவதிலும் நிமிடத்திற்கு நிமிடம்  வரும ்தொலைபேசி அழைப்புக்களிலும் தன்னை  ஈடுபடுத்தி வருகின்றாா். அத்துடன் பாா்சல் அனுப்பியவா்களுக்கு மீண்டும் தொடா்புபடுத்தி தங்களது பாா்சல் கிடைத்ததா. அதில் இருந்த உடுப்புக்கள் இந்த பெருநாளைக்கு அல்லது வீட்டில் அணிவதற்கு சரியாக இருந்ததா? எனக் கேட்கின்றாா்.    அந்த ஏழைகளின்  நன்றி  வாா்த்தையில் அவா் ஒரு கணம் தனக்குள்ளே நிம்மதியடைகின்றாா் .  

தான் முன்னெடுத்த இந்தப்  பணியை தொடாந்து சகல மலையக தமிழ்  சமுகங்களுக்கும் முன்னெடுக்க உள்ள தாகச் சொல்கின்றனாா். இவ்வாறு வீடுகளுக்குள் புதைந்துண்டு கிடக்கும் எத்தனை பெண்கள் முன்வந்து சமுக சேவையைில் தண்னை அர்ப்பணிக்கின்றனா். ? சைலா பானு , போன்றவா்கள் எத்தனை பேர் ்தான் வாழ்ந்த வளா்ந்த மற்றைய சமுகத்தினைப் பற்றிச் சிந்திக்கின்றனா்?.(ஆனால் முஸ்லீம் சமுகம் நிறைய உதவுகின்றனா். தான் கொடுக்கும் தர்மம் வலது கையால் கொடுப்பது இடது கையக்குத் தெரியாமல் கொடுக்கப்படல் வேண்டும். அல்லாஹ் அதுக்குரிய நன்மையை வழங்குவான்  இந்த மணிதபிமான தொண்டில் இணைந்து கொள்பவா்கள் அல்லது உதபுவா்கள் உதவி பெற உள்ளவா்கள் தொடா்பு கொள்ளலாம்.  சைலா பானுவின் முகவரி
 82/7 14th Lane Wickramasingapura Battaramulla, near ITN 

தகவல்் (அஷ்ரப் ஏ.சமத்) 




10 comments:

  1. Maashallah may allah almighty bless Silaa Banu and her family (Ameen)

    ReplyDelete
  2. Well done sister Allah bless u always

    ReplyDelete
  3. Great, a great soul from Mawanella.Alhamdulilah.

    ReplyDelete
  4. அல்லாஹ் உங்களுக்கு மிகுந்த ரஹ்மத் செய்வானாக

    ReplyDelete
  5. May Almighty Allah reward you infinite

    ReplyDelete
  6. Masha Allah. Great job. Allah bless you sister.

    ReplyDelete
  7. Marsha Allah great and excellence Idea will get reward soon from Allah.

    ReplyDelete
  8. الحمد لله அல்லாஹ் மீது இணையாக செய்தியை படிக்கும் பொழுது என்னை அறியாமலே என் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது.எல்லாம் வல்ல இறைவன் எமது சகோதரியின் தூய பணியை பொருந்திக்கொள்வானாக

    ReplyDelete
  9. Great work may allah bless u & ur family

    ReplyDelete

Powered by Blogger.