Header Ads



அரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

இஸ்லாம் மக்களின் புனித மாதமாக கருதப்படுகின்ற ரமழான் மாதம் இடம்பெற்று வருகின்றது.

ரமழான் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் மக்கள் பாரிய செலவில் அலங்கரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது வழமையாகும்.

அதற்கமைய குட்டி அரபு நாடு போன்று காத்தான்குடி நகரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பின்தங்கிய நிலையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட நகரம் இன்று பார்ப்பவர்களை ரசிக்கும்படி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடிக்கு சென்று வருபவர்கள் குட்டி அரபு நாட்டுக்கு சென்று வந்த உணர்வு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

சிங்களவரிடையே பிரபல்யமான சகோதர ஊடகமொன்று இந்தப் படங்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


4 comments:

  1. Hello! press (Jaffna Muslim) please kindly we requesting to you do not publish this kind of Photo it is creating communal problem when budhist peoples are seen this picture.

    ReplyDelete
  2. Why should we hide and what for after it has been published already.
    A covered generation seems to be involving.

    ReplyDelete
  3. இது பூமியின் மேல்புற தோற்றப் பாடு. கீழ்புற நிலைமையோ வருந்தத்தக்கதாக அமைந்துள்ளதாகவே அறியக்கிடைக்கிறது.

    ஒழுங்கான கழிவு நீர் முகாமைத்துவமின்மையால் நிலக்கீழ் நீர் முற்றாக மாசடைந்துள்ளதாக அறியக் கிடைக்கிறது
    இது விடயாமாக நாட்டுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணத்தை கத்தான்குடிவாழ் மக்கள் வழங்கினால்….

    ReplyDelete
  4. நிலத்துக்குமேல் காற்றுக்கும் நிலத்துக்குகீழ் நீருக்கும் இன மத எல்லைகள் இல்லை. காத்தன்குடி நீரில் மலம் கலந்தால் ஆரயம்பதி நீரும் அசுத்தமாகும் காரைதீவு நீரில் மலம் கலந்தால் கல்முனைகுடி நீரும் அசுத்தமாகும். இக்கருத்தை கால்நூற்றாண்டுகளுக்கு முன்னம் சரி நிகரில் எழுதினேன். குடி நீர் வளங்குதல் திடக்கழிவு அகற்றுதல் போன்றவற்றில் மாவட்ட அடிப்படையில் ஒருங்கிணைந்த திட்டங்கள் மட்டுமே கிழக்கில் வெற்றி பெறும்.மாவட்ட ரீதியாக ஒருங்கிணைந்த திட்டங்கள் மூலமே கிழக்கை பாதுகாக்க முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.