June 25, 2018

எர்துகானின் வெற்றி - இஸ்லாமிய உலகம், என்ன சொல்கிறது தெரியுமா..?


துருக்கியில் இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரஜப் தய்யிப் அர்துகானும், அவருடைய ஏ.கே.பி கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து இஸ்லாமிய உலகின் பல புத்திஜீவிகள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இங்கு சிலவற்றை தருகிறேன்.

'அர்துகான் மீது அவர்கள் எல்லா குற்றச் சாட்டுக்களையும் முன்வைத்தனர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவருக்கெதிராக கூட்டணி அமைத்தனர். பல வகையிலும் ஏசிப் பேசினர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலிருந்தும் அவருக்கெதிராக பலரையும் தூண்டினர். அவரை வீழ்த்த பல மில்லியன்களை செலவு செய்தனர். ஆனால் மக்கள் 'ஆம், அர்துகானே எமக்கு வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.'
– கலாநிதி அப்துல் ஹமீது பிலாலி

துருக்கியில் இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் அர்துகானும், அவருடைய கட்சியும் வெற்றிபெற்றிருக்கும் இத்தருணத்தில், துருக்கிய மக்களுக்கும் இஸ்லாமிய உம்மத்துக்கும் உலகத்திலுள்ள அனைத்து சுதந்திர புருஷர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அரபு லிக்யூட் தலைமைகள், எதிர்;புரட்சியாளர்கள், இஸ்லாமிய நாகரீகம் ஒன்று வளர்வதை எல்லா வகையிலும் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட சர்வதே நயவஞ்சக சக்திகளுக்கு அபசரணய்.
- கலாநிதி முஹம்மத் முஃதார் ஷன்கீதி

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்ற பெற்றிருக்கும் துருக்கிய தலைவர் அர்துகானுக்கும் ஏ.கே.பி கட்சிக்கும் வாழ்த்துக்கள். அவர்கள் மூலம் துருக்கிக்கும் இஸ்லாமிய உம்மத்துக்கும் நன்மை நிகழும் காலமெல்லாம் அல்லாஹ் அவர்களை பலப்படுத்தட்டும், அவர்களுக்கு உதவட்டும் என நாம் பிரார்த்திக்கிறோம்.
- அல்லாமா ஷெய்க் யூசுஃப் அல்-கர்ளாவி - சர்வதே முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் தலைவர்.
தேர்தல் முடிவுகளின் சுருக்கம் துருக்கிய மக்கள் சிரிய அகதிகளை துரத்தியடிக்க அனுமதிக்க வில்லை.
- கலாநிதி இஸ்மாயீல் யாஷா

ரஜய் தய்யிப் அர்துகான் நவீன துருக்கியை உருவாக்கி, உலகின் முதல் 20 முன்னணி நாடுகளுக்குள் அதனை கொண்டுவந்திருந்தும் கூட அரைவாசி துருக்கிய மக்களின் வாக்குகளையே பெற்றுள்ளார். மறுபுறத்தில் ஒரு மில்லியன் சிரியர்களை கொன்றழித்து, சிரியாவை நாசம் செய்து, அதன் அரைவாசி மக்களை அகதிகளாக்கிய பஷ்ஷார் அல்-அஸத் 99.99 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
- கலாநிதி பைஸல் காஸிம்

இன்றைய தேர்தலுடன் துருக்கி 2023 ஆம் ஆண்டுக்கு தயாராகின்றது. லொஸான் உடன்படிக்கை நிறைவுக்கு வரப் போகிறது. பெரும் பயணம் ஒன்றுக்கு துருக்கி தயாராகின்றது. இதுவே மேற்குலகையும், பிராந்தியத்திலுள்ள சர்வாதிகார ஆட்சியாளர்களையும் அச்சத்திற்குள்ளாக்கியிருக்கிறது.
- கலாநிதி ஆதில் சுலைமான், தலைவர், பாதுகாப்பு மற்றும் சிவில் உறவுகள் கற்கைகளுக்கான மூலோபாய உரையாடல் மன்றத்தின்.

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றிக்காக எனதும் நஹ்ழா கட்சியினதும் வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். துருக்கிய ஜனாதிபதி அர்துகானுக்கம் ஏ.கே.பி. கட்சி-க்கும் அவர்களோடு இணைந்த கூட்டணிக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- பேரறிஞர் ராஷித் அல்-கன்னூஷி

துருக்கிய மக்களுக்கு வாழத்துக்கள். இரு வருடங்களுக்கு முன்பு அவர்கள் சதிப் புரட்சியாளர்களை வென்றனர். இன்று சதிகாரர்களுக்கு எதிரான அமோக வெற்றியைப் பெற்றுள்ளனர். அனைத்து துருக்கியர்களுக்கும் உலகின் அனைத்து புறங்களிலுமுள்ள அவர்களின் நேசர்களுக்கும் வாழ்த்துக்கள்.
- அஹ்மத் மன்ஸுர்- பிரபல ஊடகவியலாளர்.

நல்ல உள்ளமும் நல்லது செய்ய வேண்டும் என விரும்பும் உள்ளமும் மார்க்கத்தின் மீதான அன்பும் கொண்டவர்கள்தான் அர்துகானின் வெற்றியினால் மகிழ்வுறுவர். உள்ளத்தில் நயவஞ்சகத்தை மறைத்து வைத்திருக்கும் கறுப்பு உள்ளத்தினர் அர்துகானின் வெற்றியை வெறுப்பர்.
- சட்டத்தரணி நாஸிருத் தவ்லா- பாதுகாப்பு ஆலோசகர், முன்னாள் குவைத் சட்டசபை உறுப்பினர்.

-Mohamed Basir-

1 கருத்துரைகள்:

Post a Comment