Header Ads



கொலைக்கார கோத்தபாய என்றுமே, நாட்டின் ஜனாதிபதியாக வர முடியாது - மேர்வின் சில்வா

ராஜபக்சவினர் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதை எவரும் மறுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

டி.ஏ.ராஜபக்ச, டி.என்.ராஜபக்சவினர் எவரிடமும் பணத்தை பெற்றிருக்க மாட்டார்கள். ஆனால் தற்போதுள்ள ராஜபக்சவினர் பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்று எண்ணினாலும் அல்லது கூறினாலும் அது உண்மையல்ல.

ராஜபக்சவினர் பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றால், கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்கும். பணத்தை கையாளும் பொறுப்பு பசில் ராஜபக்சவிடம் இருந்தது. பசில் ராஜபக்ச கொமிஸ் பெற்றுக்கொள்வர் என்பது முழு உலகத்திற்கும் தெரியும்.

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை புகழ்பெற்ற பத்திரிகை, ராஜபக்சவினர் குற்றமற்றவர்கள் என்றால், அமெரிக்காவின் தூதரகம் இலங்கையில் இருக்கின்றது. அதன் ஊடாக அந்த பத்திரிகைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.

அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சீன அரசாங்கம் கூறவேண்டும். அதனை விடுத்து, நாடாளுமன்றத்தில் இருப்பவர்களும், என்னை போன்றவர்களும் மகிந்த ராஜபக்ச பணத்தை பெற்றார் எனக் கூறினால், அவர்கள் விரோதம் காரணமாக கூறுகின்றனர் என்பார்கள்.

பணத்தை பெறவில்லை என்று கூறினால், மகிந்த ராஜபக்சவை காப்பாற்றுவதற்காக கூறுகின்றனர் என்பார்கள். இந்த குற்றச்சாட்டுக்கான சிறந்த பதில் மகிந்த ராஜபக்சவிடமே இருக்கின்றது.

அடுத்த பதில் சீன அரசாங்கத்திடம் இருக்கின்றது. அடுத்தது நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதையே செய்ய வேண்டும். இவற்றை செய்யவில்லை என்றால் பணத்தை பெற்றுக்கொண்டனர் என்றே அர்த்தம்.

அதில் எந்த மாற்றமும் இல்லை. அதனை அவர் மறுக்கவும் முடியாது. உண்மையை கூறவும் தரையில் அமரவும் எவருடைய அனுமதியும் தேவையில்லை. நான் நக்சலைட் என்ற குற்றச்சாட்டில் சிறைக்கு சென்றவன். அரசியலில் ஈடுபட்டு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை இழந்தவன்.

அவன்கார்ட் பற்றி எனக்கு விபரங்கள் தெரியும், அந்த நிறுவனத்தின் மூலம் பல பில்லியன் பணம் கொள்ளையிடப்பட்டது. கடற்படை வர வேண்டிய பணம், கோத்தபாய ராஜபக்ச தலைமையில், திருட்டு வழியில் வெளியில் சென்றது.

இவற்றை கூற நான் அச்சப்பட மாட்டேன். இதுவரை அது பற்றி விசாரணைகள் நடக்கவில்லை. அதேவேளை நாட்டில் ராஜபக்ச ஒருவர் மீண்டும் ஜனாதிபதியாக வர மாட்டார். கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறி சிலர் அவருக்கு ஆசை தூண்டி விட்டுள்ளனர்.

இதனால், அவர் தற்போது ஜனாதிபதி என்ற நினைப்பில் நடக்கின்றார். ஜனாதிபதியாகவே மூச்சு விடுகின்றார். ஜனாதிபதி என்ற எண்ணத்திலேயே சிரிக்கின்றார்.

சாப்பிடுவதும் ஜனாதிபதியை போல். வீட்டிலும் ஜனாதிபதி என்ற நினைப்பிலேயே வாழ்கின்றார் என்றே நான் நினைக்கின்றேன். உறங்குவதும் அப்படியாகவே இருக்கும். அப்படி எதுவும் நடக்க போவதில்லை. கோத்தபாய என்றுமே நாட்டின் ஜனாதிபதியாக வர முடியாது.

நாட்டில் போர் நடக்கும் போது தனது இராணுவத்தையும், இராணுவத்தில் இருந்தவர்களையும் கைவிட்டு, அமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற கோழைக்கு நாடு ஒன்றை ஆட்சி செயய் முடியுமா?.

கோ என்றால் செல் என்று அர்த்தம். தா என்ற நீ. கோத்தாபய அல்ல கோத்தா(பய)ம் என்றுதான் அர்த்தம். அச்சமுள்ள ஒருவர் சென்று விடுவாரே அன்றி வரவும் மாட்டார். உள்ளே நுழையவும் மாட்டார். இதனைதான் என்னால் கூறமுடியும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது இரண்டு சகோதரர்கள் செய்த நடவடிக்கைகளை கண்டுக்கொள்ளவில்லை. அவர்கள் தவறுகளை செய்தனர். எந்த நீதிமன்றத்திலும் கூற நான் தயாராக இருக்கின்றேன்.

நான் அருகில் இருக்கும் போதே ஒருவரை சுட்டுக்கொல்லுமாறு கோத்தபாய கூறினார். அநுராதபுரத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஆமாம், பிரச்சினையில்லை அவரை சுட்டுக்கொல்லுங்கள் என்று கோத்தபாய கூறினார்.

இன்னும் என்ன கூறவேண்டியுள்ளது. அச்சம் காரணமாக இவற்றை கூற எவரும் முன்வர மாட்டார்கள். நான் உருணையை சேர்ந்த சிங்கள பௌத்தன் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.