Header Ads



இனவாத வைரஸூக்கு, இன்னும் மருந்தை கண்டுபிடிக்கவில்லையா..?

உயிரியல் விஞ்ஞானத்தில் மனித உடலில் ஏற்படும் அனைத்து வைரஸ் நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இனவாதம் என்ற வைரஸ் நோயிக்கு மாத்திரமே மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

மத ரீதியிலும் இனவாத ரீதியிலும் சாதி ரீதியிலும் பிளவுப்படுத்த அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். அந்த அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ள தலைவிதி என்ன?

அவர்கள் பணத்திற்கு விற்பனை செய்யப்படும் வர்த்தக பொருளாக மாறியுள்ளனர். எம்மை பிளவுப்படுத்த முயற்சிக்கும் எமது சமூகத்தின் மனிதாபிமானத்தை பிரிக்க முயற்சிக்கும் வர்த்தக சமூகத்தின் விலை பொருளாக அரசியல்வாதிகள் மாறியுள்ளனர்.

அவர்கள் துர்நாற்றம் வீசுபவர்களாக மாறிவிட்டனர். உயிரியல் விஞ்ஞானத்தில் அனைத்து வைரஸ்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் நவீன விஞ்ஞானம் இனவாத வைரஸூக்கு இன்னும் மருந்தை கண்டுபிடிக்கவில்லை என சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. எல்லா வைரஸுக்கும் போலவே இந்த வைரஸுக்கும் மருந்து தயாராகவே உள்ளது, புனித குர்ஆனில்.  நீங்கள் முடிந்தால் அதனை முழுமையாகப் படித்து குர்ஆனிய வைத்தியர்களாகி நாட்டு மக்களை சுகப்படுத்துங்கள். 

    வரலாற்றை உற்றுப்பாருங்கள்:  அபூபக்கர், உமர், உதுமான், அலி மற்றும் உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரலி) போன்ற மாமனிதர்கள் எல்லாம்  எவ்வாறு இந்த மருத்துவத்தைப் பயன்படுத்தி இதே போன்ற நோய்களுக்கு வெற்றிகரமான வைத்தியம் செய்தார்கள் என்று.

    இன்னும் வாக்களிக்கப்பட்ட ஒருவர் வரவிருக்கிறார்.  அவர்தான் இமாம் மஹ்தி (அலை)  அவர்கள்.  அவரது ஆட்சி நம் நாட்டிலும் நடக்கும், ஆனால் அது அண்மைய காலத்தில் அல்ல.

    இப்போதைக்கு அந்தப் புனித குர்ஆனைச் சுமந்திருக்கும் நம்மில் அநேகமானோர் வைத்தியராக அன்றி நோயாளிகளாகவோ அல்லது பலகீனர்களாகவோ உள்ளோம்.

    ஆகவே,  நீங்கள் இந்த நாட்டின் மக்களுடைய தொடர்ச்சியான பிரச்சினைகளிலிருந்து நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக புனித குர்ஆனைக் கற்க ஆரம்பியுங்கள். 

    இலங்கையின் தற்கால ஏனைய அரசியல்வாதிகளைவிட இதற்கு  நீங்கள் அதிக தகுதியானவர்களும் பொறுத்தமானவர்களும்கூட.

    இது விடயமாக உங்களோடு பக்கபலமாக  இணைந்து உழைப்பதற்காக சுமார் 20 லட்சம் முஸ்லிம்கள் தயாராகவே உள்ளார்கள்!

    ReplyDelete

Powered by Blogger.