Header Ads



மஸ்த்தானின் நியமனம், தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்தும்

மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் இருப்பதில் பிரச்சினை இல்லையெனத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன்,  எனினும், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சில் இருந்து இந்து கலாசார அமைச்சை பிரித்தெடுத்து, அதை வேறு ஒரு பொருத்தமான அமைச்சுடன் இணைக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சில் இருந்து இந்து கலாசார  பிரதியமைச்சராக, காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமைக்கு தொடர்ச்சியாக எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் மனோ இந்த விடயம் தொடர்பில் பேஸ்புக்கில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்தப் பதிவில் "மீன்வள துறை அமைச்சர், மீனவராகவும், கல்வி அமைச்சர், கல்வி பேராசிரியராகவும்  இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இதே விதி மத விவகார அமைச்சுகளுக்கு பொருந்தாது.   இஸ்லாமிய மத விவகாரம், அமைச்சர் சுவாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், நான் அதை எதிர்த்து இருப்பேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "மதம் என்பது ஒரு உணர்வுபூர்வமான விடயம். இதில் அரசியல் விளையாட்டு கூடாது. அவ்வந்த மத விவகாரங்கள் அவ்வந்த மதத்தை சேர்ந்தவர்களிடம் இருப்பதே பொருத்தமானது.  குறிப்பிட்ட அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர், அந்த அமைச்சு கையாளும் மத ஸ்தலங்களுக்குள் செல்ல வேண்டும். மத தலைவர்களுடன் உரையாட வேண்டும். மத உணர்வுகளை, முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டும்." எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, "இன்று நிகழ்ந்திப்பது ஒரு குளறுபடி. எங்களை அவமானப்படுத்திக்கொள்ள இந்த அரசை நாம் உருவாக்க பங்களிக்கவில்லை.  இந்து கலாசார அமைச்சு இதுவரை, டி.எம்.சுவாமிநாதனிடம் இருந்தது போதும். அதை பிரித்து எடுத்து வேறு ஒரு பொருத்தமான் அமைச்சுடன் சேர்த்து விடுங்கள்.  காதர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருக்கட்டும்.

இல்லாவிட்டால், இதை தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்தும் செயற்பாடாகவே  நாம் கருதுவோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. Clearly a plot to increase the rift between Tamils and Muslims by the government. It will give them peace of mind when we argue and fight over what Muslim guy can do to uplift Hindu religion.

    In the past there were instances Buddhist ministers handles Muslims affair, However that does justify this. Best is this ministry to be given to a Hindu minister who can really do a good job. this is just as we Muslims doesn't want the Muslim affairs to be given to someone else for obvious reasons.

    ReplyDelete
  2. இந்து மத விவகார அமைச்சு அல்லது பிரதி அமைச்சு ஒரு இந்து மதத்தைச் சாந்தவரிடம் இருப்பதே சிறப்பு. அவரவர் மத விவகாரம் அவரவர் மதத்தினரால் தான் சரியாக உணரப்படும். மஸ்தான் அவர்கள் என்னதான் இந்து மத உணர்வுகளையும் தேவைகளையும் புரிந்து நிறைவேற்றினாலும் அவரால் இந்து மத கோவில்களுக்குள் செல்ல முடியுமா? அல்லது அவரது இஸ்லாம் மார்க்கம் தான் அனுமதி அளிக்குமா? எனவே இது விடயத்தில் மீள் பரிசீலனை செய்வதே அறிவுடைமை

    ReplyDelete
  3. ஜனாதிபதி my 3 இன்று கல்லில் பேண்ட பூனையின் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்.

    ReplyDelete

Powered by Blogger.