Header Ads



சுடரொளி ஆசிரியரின், உள்ளத்திலிருந்து...!

-Sivarajah Ramasamy-

உண்மை கசக்கும்

மஸ்தானை இந்து விவகார பிரதியமைச்சரா ஆக்கினதுக்கு பொங்கிய ( நான் உட்பட)அனைவரிடமும் கேட்க விரும்புவது.......

* ஏற்கனவே இந்து விவகாரத்துக்கு பொறுப்பாக இருந்த - இருக்கும் இந்துக்கள் என்னத்த செய்து கிழித்தார்கள்?

* விலங்குகள் பலியிடல்கள் இன்னும் நடக்கிறது தானே?

* ஜே சி பியில் தேர் இழுக்கும் நிலைமையை தானே இன்னமும் வைத்திருக்கிறீர்கள்?

* அய்யப்பன் பக்தர்களின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் எப்போது நிறைவேறும் ?

* போரினால் பாதிக்கப்பட்ட கோவில்கள் எல்லாமே புனரமைக்கப்பட்டனவா ? மூன்று வேளை பூஜை கூட நடக்காத எத்தனையோ கோவில்கள் உள்ளனவே ?
இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்...

நீங்களெல்லாம் படித்தது தேவாரம் இடித்தது சிவன் கோவில்...

மஸ்தான் ஒரு முஸ்லிம் அது மட்டும் தான் வித்தியாசம்...

மற்றபடி அவர் இந்துக்களை விட இந்து விவகார அமைச்சை திறமையாக நிர்வகித்தால்....?

கோவிலுக்குள் சென்று மஸ்தான் அமைச்சை நடத்தப் போவதில்லை... இந்து ஒருவர் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டாலும் அவரும் கோயில் கோயிலாக சென்று பார்க்கப் போவதுமில்லை..

போங்கடா ... போய் வேலையப் பாருங்க...

6 comments:

  1. இப் புனித நாளில் பாவத்திற்கு துணை போககூடாது என்று பிரதி அமைச்சர் மஸ்தான் அவர்களை பாதுகாத்த அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.

    ReplyDelete
  2. சகோதரர் சிவராஜா ராமசாமி உங்களது கருத்து உண்மையானது . இந்த நாட்டிலே பல்லின மக்கள் வாழ்கின்றனர். இனங்களுக்கு மத்தில் தேசிய ஒற்றுமையயை நிலை நாட்டுவதற்காக வேண்டி 12 .6. 2018,அன்றைய ராஜாங்க பிரதி அமைச்சர்கள் நியமனத்தின் போது தேசிய அரசாங்கத்தினால் பௌத்த மதத்தை சேர்த்த கௌரவ ரஞ்சித் அலுவிஹார சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார இராஜாங்க அமைச்சராகவும் இஸ்லாம் மத்தத்ததை சேர்த்த அல் ஹாஜ் மஸ்தான் அவர்கள் வடக்கு அபிவிருத்தி மீள்குடியேற்றம் மற்றும் இந்து விவகார பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்கள் . அது மாத்திரம் அல்ல அண்மையில். தனது பதவியை இராஜினாமா செய்த பௌத்த மதத்தை சேர்த்த கௌரவ துலீப் விஜசேகர ( பா .உ ) அவர்கள் (2015 ராஜாங்க அமைச்சர்கள் நியமனத்தின் போது ) தபால் , தபால் சேவைகள் மற்றும் முஸ்லீம் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டு கடமையாற்றினார். அப்போது முஸ்லிம்கள் அவரது நியமனத்துக்கு எவ்விதத்திலும் எதிர்ப்பையும் வெளியிடாமல் தேசிய ஒற்றுமைக்கு வழிசமைத்தார்கள் . தற்போது கௌரவ ரஞ்சித் அலுவிஹார ( பா . உ ) அவர்களுக்கு எதிராக கிறிஸ்தவ மக்கள் போர் கொடி தூக்கவில்லை மாறாக தமிழ் , முஸ்லீம் உறவை விரும்பாத காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் இனக்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முகமாக அல் ஹாஜ் மஸ்தான் அவர்களது நியமனத்துக்கு எதிராக போர் செய்கிறார்கள் இதனால் இரு சமூகத்துக்கும் மத்தில் காணப்படும் பரஸ்பரம் ,ஒற்றுமை ,சமைத்தும் சீர்குலைவும் ஒளியே வேறொன்றும் ஏற்படப்போவதில்லை. மாறாக இக்காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் தங்களது கனவினை நினைவாக்க முனைகிறார்கள் என்பதே யதார்த்தமாகும். உண்மையில் இவர்கள் நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பதோடு மீண்டுமொரு இனமுறு கலை ஏற்படுத்துகிறார்கள். எனவே சிந்தித்து செயல்பட்டால் சமூகம் சீர்பெறும்.

    ReplyDelete
  3. சகோதரர் சிவராஜா ராமசாமி உங்களது கருத்து உண்மையானது . இந்த நாட்டிலே பல்லின மக்கள் வாழ்கின்றனர். இனங்களுக்கு மத்தில் தேசிய ஒற்றுமையயை நிலை நாட்டுவதற்காக வேண்டி 12 .6. 2018,அன்றைய ராஜாங்க பிரதி அமைச்சர்கள் நியமனத்தின் போது தேசிய அரசாங்கத்தினால் பௌத்த மதத்தை சேர்த்த கௌரவ ரஞ்சித் அலுவிஹார சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார இராஜாங்க அமைச்சராகவும் இஸ்லாம் மத்தத்ததை சேர்த்த அல் ஹாஜ் மஸ்தான் அவர்கள் வடக்கு அபிவிருத்தி மீள்குடியேற்றம் மற்றும் இந்து விவகார பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்கள் . அது மாத்திரம் அல்ல அண்மையில். தனது பதவியை இராஜினாமா செய்த பௌத்த மதத்தை சேர்த்த கௌரவ துலீப் விஜசேகர ( பா .உ ) அவர்கள் (2015 ராஜாங்க அமைச்சர்கள் நியமனத்தின் போது ) தபால் , தபால் சேவைகள் மற்றும் முஸ்லீம் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டு கடமையாற்றினார். அப்போது முஸ்லிம்கள் அவரது நியமனத்துக்கு எவ்விதத்திலும் எதிர்ப்பையும் வெளியிடாமல் தேசிய ஒற்றுமைக்கு வழிசமைத்தார்கள் . தற்போது கௌரவ ரஞ்சித் அலுவிஹார ( பா . உ ) அவர்களுக்கு எதிராக கிறிஸ்தவ மக்கள் போர் கொடி தூக்கவில்லை மாறாக தமிழ் , முஸ்லீம் உறவை விரும்பாத காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் இனக்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முகமாக அல் ஹாஜ் மஸ்தான் அவர்களது நியமனத்துக்கு எதிராக போர் செய்கிறார்கள் இதனால் இரு சமூகத்துக்கும் மத்தில் காணப்படும் பரஸ்பரம் ,ஒற்றுமை ,சமைத்தும் சீர்குலைவும் ஒளியே வேறொன்றும் ஏற்படப்போவதில்லை. மாறாக இக்காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் தங்களது கனவினை நினைவாக்க முனைகிறார்கள் என்பதே யதார்த்தமாகும். உண்மையில் இவர்கள் நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பதோடு மீண்டுமொரு இனமுறு கலை ஏற்படுத்துகிறார்கள். எனவே சிந்தித்து செயல்பட்டால் சமூகம் சீர்பெறும்.

    ReplyDelete
  4. இது உ ண்மை. இந்துக்களை நிர்வகிப்பதட்கு பொருளாதார சிந்தனையும் வாழ்வாதாரத்த்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முஸ்லீம் அமைச்சரால் நன்மை பெற போவது இந்துக்களே. முஸ்லீம் அமைச்சர்கள் எவாறோ மத்தியிலிருந்து பணத்தை பெற்று மக்களுக்கு சேவகம் சேயும் வல்லமை கொண்டவர்கள் இந்த மஸ்தான் உட்பட. இவரை அந்த பதவிக்கு விட்டு பார்த்துருக்க வேண்டும். அதன் பிறகு தான் தமிழ் மக்கள் முடிவெடுத்திருக்க வேண்டும் ஒரு முஸ்லீம் அமைச்சரால் செய்பவற்றை கூட எங்கள் கிழடுகளுக்கு செய்ய துப்பில்லை என. இதை ஆரம்பித்தது தமிழ் தலைமைகளே ஏனெனில் அவர்களை விட ஒரு முஸ்லீம் அமைச்சர் அதிகமாக செய்தால் பிறகு நாறி விடும் என்ற பயத்தில்.

    ReplyDelete
  5. சகோதரர் சிவராஜா ராமசாமி உங்களது கருத்து உண்மையானது . இந்தநாட்டிலே பல்லின மக்கள் வாழ்கின்றனர் இனங்களுக்கு மத்தில் தேசிய ஒற்றுமையயை நிலை நாட்டுவதற்காக வேண்டி 12/16/2018 அன்றைய இராஜாங்க ,பிரதி அமைச்சர்கள் நியமனத்தின் போது தேசிய அரசாங்கத்தினால் பௌத்த மதத்தை சேர்த்த கௌரவ ரஞ்சித் அலுவிஹார சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார இராஜாங்க அமைச்சராகவும் இஸ்லாம் மத்தத்ததை சேர்த்த அல் ஹாஜ் மஸ்தான் அவர்கள் வடக்கு அபிவிருத்தி மீள்குடியேற்றம் மற்றும் இந்து விவகார பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்கள் . அது மாத்திரம் அல்ல அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்த பௌத்த மதத்தை சேர்த்த கௌரவ துலீப் விஜசேகர ( பா.உ ) அவர்கள் (2015 இராஜாங்க, அமைச்சர்கள் நியமனத்தின் போது) தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லீம் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டு கடமையாற்றினார். அப்போது முஸ்லிம்கள் அவரது நியமனத்துக்கு எவ்விதத்திலும் எதிர்ப்பையும் வெளியிடாமல் தேசிய ஒற்றுமைக்கு வழிசமைத்தார்கள் . தற்போது கௌரவ ரஞ்சித் அலுவிஹார ( பா.உ ) அவர்களுக்கு எதிராக கிறிஸ்தவ மக்கள் போர் கொடிதூக்க வில்லை மாறாக தமிழ் முஸ்லீம் உறவை விரும்பாத காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் அல் ஹாஜ் மஸ்தான் அவர்களது நியமனத்துக்கு எதிராக இனவாதத்தை தூண்டி தங்களது கனவினை நினைவாக்க முனைகிறார்கள் என்பதே உண்மை . நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் இக்காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களது ஆட்சின் போது மூவின கலாச்சார அமைச்சராக மறைந்த முன்னாள் பிரதமர் ரத்ன சிறி விக்ரமநாயகவும் அவ்வாறே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களது ஆட்சியில் முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரட்ன அவர்கள் பௌத்த மத மற்றும் ஏனைய மத விவகார அமைச்சராகவும் பொறுப்பேற்று பணியாற்றிய போது எங்கு ஒளித்து கொண்டு இருத்தர்கள் எங்கே சென்றது இவர்களது சமூகப்பற்று ? வேண்டாம் இன, மத வாதம் மனிததுவம் ஓங்கட்டும் .

    ReplyDelete

Powered by Blogger.