Header Ads



கோத்தாவுக்கு நெருக்கமானவர், ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதராகிறார்

கலாநிதி தயான் ஜயதிலகவை ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எவ்வித எதிர்ப்பையும் வெளியிடவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்ய தூதுவராக பணியாற்றிய கலாநிதி சமன் வீரசிங்கவின் பதவிக்காலம் முடிந்து பல மாதங்கள் கடந்துள்ள நிலையில் புதிய தூதுவர் இதுவரை நியமிக்கப்படவில்லை.

தயான் ஜயதிலக ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் நிரந்தர பிரதிநிதியாக செயற்பட்டிருந்ததோடு, அரசாங்கம் முன்னெடுத்துள்ள அரசியல் யாப்பு உருவாக்கப் பணிகளுக்கு எதிரான எளிய அமைப்பின் பிராதான செயற்பாட்டாளராகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. மைத்திரி கோத்தபாயவின் எடுபுடியாக மாறிவருகிறாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.