Header Ads



அரசாங்கம் வேண்டுமென்றே, ஞானசாரரை சிறையில் அடைத்துள்ளது - மகிந்த வேதனை


நாட்டில் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் இதற்கு அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொலிஸார் ஊடாக இவற்றை அடக்க வேண்டும் எனவும் பொலிஸ் மா அதிபர் தியானத்தில் இருப்பதாகவும் பாதாள உலகக்குழுக்களை அடக்கும் நடவடிக்கைகளை புறந்தள்ளி விட்டு, அரசாங்கம் தன்னை விரட்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனுராதபுரம் ஸ்ரீமஹா போதி மற்றும் ருவான்வெலி சே அருகில் இன்று நடைபெற்ற வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மகிந்த ராஜபக்ச, அரசாங்கம் வேண்டும் என்றே ஞானசார தேரரை சிறையில் அடைத்துள்ளது எனவும், இது சம்பந்தமாக மெதகொட தேரர் கூறியது உண்மையானது எனவும் கூறியுள்ளார்.

2 comments:

  1. இவரை தான் ஹொரவப்பொத்தானை முஸ்லிம்கள் இப்தர் நிகழ்வில் அழைத்திருந்தனர். அங்கே போய் வந்த அதே நாளிலே இவாறு இனவாதமாக பேசியுள்ளார். எனவே நன்றாக சிந்தித்து கோத்தாவுக்கு வாக்களியுங்கள்.

    ReplyDelete
  2. இவன் இருப்பது தனித்துவேசம் பிடித்த முஸ்லிம்களை இந்த நாட்டிலிருந்து இல்லாமல் செய்யவேண்டும் என்ற வடித்தெடுக்கப்பட்ட காபிர்களுடன் தான் இவன் இருக்கின்றான். இதனை இந்த நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் இப்பொழுதாவது நன்றாக விளங்கிக் கொள்ளவேண்டும் என பணிவாக வேண்டிக் கொள்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.