Header Ads



யாழ்ப்பாணத்தில் சாதிவெறி - இயந்திரம் மூலம் தேர் இழுப்பு - சாதிகுறைந்த மக்கள் அதிருப்தி


யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவ திருவிழா தொடர்பில் இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவம் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் குறித்த ஆலயத்தில் இன்று -07- காலை ஆயிரக்கணக்காண பக்தர்கள் புடை சூழ்ந்திருந்த போதும் அந்தப் பகுதியில் முதலாவது சமூக வர்க்கத்தினர் என தம்மை தாமே அடையாளப்படுத்திய சிலர் குறித்த தேரின் வடத்தை பிடித்து இழுக்கும் உரிமை ஏனைய பக்தர்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த தேரை இழுக்கும் சக்தி அந்த நபர்களிடம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அவர்கள் jcb இயந்திரம் மூலம் தேர்வடம் பிடித்து இழுத்துள்ளமை பொரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் வரணி சிமில் அம்மன் ஆலயத்தின் பல வருட இதிகாசங்களை கொண்ட பூர்வீக சிறப்பை இழிவுபடுத்தியுள்ளதாக அந்தப்பகுதி அடியவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

7 comments:

  1. இஸ்லாத்தில் மட்டுமே வர்க்கப் பிரிவு மிகமிகக் குறைவு.

    ReplyDelete
  2. சச்சிதானாந்தனிடம் மாடு நிற்கிறதே.

    ReplyDelete
  3. ivarhal ahathi muhaamil eppadi vaalnthaarhal?

    ReplyDelete
  4. இஸ்லாத்துக்கும் ஹிந்துவுக்கும் இதிலே சம்பந்தம் இல்லை. ஹிந்து மதத்திலே எங்குமே குறிப்பிடவில்லை சாதியை பற்றி. சில அடிவருடிகள் செயலை ஒட்டுமொத்த இந்துக்களின் செயலக காட்ட முயட்சி செய்ய வேண்டாம். வன்னி மாவட்டத்திலே இப்பொழுது சாதி பேதி அறவே இல்லை. அதட்கான காரணம் நாமெல்லோரும் அறிவோம். யாழ்ப்பாணத்திலும் சாதிகளை ஒழிக்கும் காலம் வெகு சீக்கிரம் வரும். இதனை நாங்கள் பார்த்து கொள்ளுகின்றோம். வேறு மதத்தவர்களின் முதலை கண்ணீர் வேண்டாம் எங்களுக்கு.

    ReplyDelete
  5. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்

    ReplyDelete
  6. Anusath Chandrabal:
    இஸ்லாத்திற்கும் ஹிந்துவிற்கும் இதில் எப்படி சம்மந்தம் இருக்கென்றால் நீர் சிந்திப்பதில்தான் உள்ளது. எப்படியெனில் நீர் உலகில் உள்ள பிரதான மதங்களைப் பின்பற்றும் மக்களின் நடைமுறை வாழ்க்கையை சற்று சிந்தித்துப்பாரும்.
    உலகில் வாழும் மக்களில் இஸ்லாமிய மக்களிடையேதான் வர்க்கப்பரிவு இல்லை என்று கருதும் அளவிற்கு மிகமிகக்குறைவாகவே வர்க்கப்பரிவு காணப்படுகிறது. ஏனைய மக்களிடையே வர்க்கப்பரிவு உள்ளது. அதிலும் ஹிந்துக்களிடையேதான் மிக மிக அதிகமாக வர்க்கப்பரிவு காணப்படுகிறது. இந்தியாதான் இதற்கு முதலிடம் வகிக்கின்றது. தலித்துக்கள் முஸ்லிம்களோ, கிறிஸ்தவர்களோ அல்லர். அவர்களும் இந்துக்களே! ஆனால் அவர்களுக்கு உயர் சாதிக்கார இந்துக்களால் நடக்கும் கொடுமைகளைப்பற்றி நான் சொல்லித்தான் உமக்கு விளங்கவேண்டியதில்லை.
    தலித்துக்களுக்கு மட்டுமல்ல, நீர் சொன்னது போல யாழ்ப்பாணத்திலும் வெகு சீக்கிரமாக இது இல்லாமல் போக வேண்டுமென்றால் ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது. அதுதான் உண்மையான ஒரே இறைவனை ஏற்றுக் கொள்வதாகும். உம்மிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீர் ஒரே இறைவனை ஏற்றுக் கொள்ள உமக்கு இன்னும் விருப்பம் வரவில்லையா?

    ReplyDelete

Powered by Blogger.