Header Ads



ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிராக கபீர்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது தொடர்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தொடர்ந்தும் அதற்காக குரல் கொடுக்க போவதாக அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இன்று -09- நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக்கட்சி கடந்த 2015 ஆம் ஆண்டு சோபித தேரர் முன்னிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக வாக்குறுதி வழங்கியது. அதற்கு அமைய மக்கள் வழங்கிய ஆணைக்காக ஐக்கிய தேசியக்கட்சி குரல் கொடுக்கும்.

முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டு வந்த போது சில அரசியல்வாதிகள் எதிர்த்தனர்.

அப்போது நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத கலவரங்கள் காரணமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி இருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சி கருதியது.

எனினும் தற்போது அப்படியான சூழ்நிலை இல்லை. இதனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க ஐக்கிய தேசியக்கட்சி தற்போது குரல் கொடுத்து வருகிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையால் தமது குடும்பத்தை வலுப்படுத்திக்கொண்டவர்கள், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் எனவும் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. பாரம் எந்தப் பக்கமோ அந்தப்பக்கம் எனது கட்சி. அவ்வளவுதான்.

    ReplyDelete

Powered by Blogger.