June 11, 2018

ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலே, எமக்கு தேவை...!

ஷவ்வால் மாத பிறை விடயமாக இன்று அதிகமான மீடியாக்களில் பலர் எழுதியும் பேசியும் வருவதை பொதுமகன் என்ற வகை என்னால் கவனிக்க முடிந்தது.

நாம் அன்று முதல் இன்று வரை ஜம்இய்யாவின் வழிகாட்டலில் எமது செயற்படுகளை முன்னெடுக்கும் போது அதில் அல்லாஹ்வின் உதவியையும் பாதுகாப்பையும் கண்ணூடாக பார்த்துள்ளோம்.

முஸ்லிம்களுக்கு ஏதும் பிரச்சினை என்று வரும் போது இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்கும் கேடயமாக களத்தில் இருப்பது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவே.

உதாரணமாக சுனாமி அனர்த்தத்தால் அதிகமான இடங்களில் முஸ்லிம்கள் ஷஹீதானார்கள். அவர்களுடயை இறுதி கிறியைகளை செய்யும் விடயத்தில் சமூக சிந்தனை கொண்ட அதிகமானோர் களமிறங்கி செயற்பட்டனர்.

அதில் குறிப்பாக வானில் மின்னும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் சந்திரன் பிரகாசிப்பதை போல் உடலாலும், உள்ளத்தாலும், பொருளாதாரத்தாலும் தன்னால் முடியுமான அளவு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உதவிகளை செய்தது எவராலும் மறுக்க முடியாது. 

உறவுகளை இளந்து தத்தளித்து தவிர்க்கும் மனங்களுக்கு  ஆறுதல் கூறி அரவணைக்கும் தாயாகவே  ஜம்இய்யா செயற்பட்டது.

மூதூர் முஸ்லிம்கள் விடுதலை புலிகளினால்  தம் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டபோது அம்மக்களுக்கு தைரியத்தையும் அடைக்களத்தையும் வழங்கியதில் ஜம்இய்யத்துல் உலமாவுக்கு பாரிய பங்குண்டு.

இலங்கை நாட்டில் அண்மைக்காலத்தில் இருந்து இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும்  எதிராக  சந்கேங்களும்,இனவாதங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதை களைவதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாடாலாவிய ரீதியில் தமது மாவட்ட, பிரதேச கிளைகளுடாக பல நிகழ்ச்சித் திட்டங்களை செய்துவருகின்றது.

அதில் குறிப்பாக *'சமாஜ சங்வாத'* எனும் தலைப்பில் பெரும்பான்மை இனத்தவர்கலால் முன்வைக்கப்படும் முக்கியமான ஆறு சந்தேகங்களுக்கு சிறந்த முறையில் மனச்சாச்சி  ஏற்றுக் கொள்ளும் விதத்தில் ஏழதப்பட்ட புத்தகங்களை அம்மக்களுக்கு வழங்குவது பெரும் வரவேற்பையும் பெற்றுவருகின்றது. (முடியுமானவர்கள் அதைப் பெற்று வாசித்துப்பார்த்து, மாற்று மதத்தவர்களுக்கும் அன்பளிப்பு செய்யவும். *Acju 011-7490 490,*  
 *http://www.acju.lk/publications-ta*)
  
நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இறுதி நபித்துவத்தை தகர்க்கும்  நோக்கில் காதியானி அஹ்மதிய்யாஹ் ஜமாஅத்தினர்  எமது நாட்டடில் பல குழுப்படிகளை செய்து வருகின்றனர் என்பதை அவதானித்த ஜம்இய்யா *'இறுதி நபித்துவத்தை பாதுகாப்போம்'* எனும் தலைப்பில் மாநாடுகளை ஏற்பாடு செய்து எம்போன்ற பொதுமக்கள் அக்கொடிய கொள்கைக்கு இரையாகி விடாமல் பாதுகாத்து வருகின்றது.

இவ்வாறே நபி (ஸல்) அவர்களின் மனைவியர் விபச்சாரம் புரிந்வர்கள், ஸஹாபாக்கள் மதம் மாறிய இறை மறுப்பாளர்கள் எனும்  தீய கொள்கைகளைக் கொண்ட ஷீஆக்களின் வழிகேட்டுக்கு முஸ்லிம்கள் தலைசாய்க்க கூடாது என்பதற்காக *'மனாகிபுஸ் சஹாபா'* எனும் தலைப்பில் நிகழ்ச்சிகளை செய்து வறுகின்றது.

90 வருட காலமாக பல செயற்பாடுகளைச் செய்து இலங்கை முஸ்லிம்களின் மாத்திரமின்றி அதிகமான வெளிநாட்டில் வாழும் தமிழ் போசும் முஸ்களின் வரவேற்பையும், ஆசியையும் பெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் வழிகாட்டலே எமக்கு மேலாக அமையும்.

அவ்வகையில்  பிறை பார்த்தல் விடயத்தில் ஜம்இய்யா சிறந்த முறையில் குர்ஆன், சுன்னா அடிப்படையின் எமக்கு வழிகாட்டி வருகின்றது. *சில வாட்சப் வீரர்கள் எதை எழுதி பேசினாலும் தனது அமானிதத்தை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றும் ஒரு அமைப்பாகவே* நான் ஜம்இய்யாவை பார்க்கின்றேன்.

எனவே நான் பொது மக்களுடன் அதிகம் பழகுவதிலிருந்து விளங்கிக் கொண்ட விடயம் யாதெனில் *எல்லா சந்தர்ப்பத்திலும் நாம் எமது தலைமையகத்தின் வழிகாட்டலின் படியே நடப்போம்,* *எச்சந்தர்ப்பத்திலும் சமூக பிளவுக்கு காரணமாக எழுதி பேசுபவர்களின் சிந்தனைக்கு இலக்காக மாட்டோம் என்பதேயாகும்.*

எனவே நம் அனைவரையும் அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துவானாக!

ஆமீன்

அபூ ஹபீப்

6 கருத்துரைகள்:

Masha allah .very true.may allah guide us to be unity

Of course everybody should cooperate under jemmiyyah

உலமா சபையின் மீது நம்பிக்கை இழந்த மக்களை நம்பவைக்கும் கட்டுரை. தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வழிமுறை என்பதை செயலிலும் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும்

மா ஷா அல்லாஹ் மிகவும் ஆரோக்கியமான கருத்து

He licks without washing. Bullshit

Post a Comment