Header Ads



தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின், நற்பெயருக்கு களங்கம் - தவம்

விஜயதாச ராஜபக்ஷவின் தென்கிழக்குப் பல்கலைக் கழகம் தொடர்பான பேச்சு கண்டிக்கத்தக்கது.

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சில சிரேஷ்ட விரிவுரையாளர்கள் சிறந்த பெறுபேறுகளை வழங்க பெண் மாணவிகளிடம் பாலியல் இலஞ்சம் பெறுவதாக உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் நேற்று பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். 

இவ்வாறான புகார்கள் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து மட்டுமே இதுவரையிலும் எழுந்துள்ளதைப் போன்று அவர் பேசியுள்ளமை உள்நோக்கம் கொண்டதாகும். 

இது நமது தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விடயமாகும். இது கண்டிக்கப்பட வேண்டும்.

இதேநேரம் முன்னாள் உபவேந்தரும் தற்போதைய எம்.பியுமான டாக்டர். இஸ்மாயில் மீது - அவருடைய கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அவர்களினால் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் - நேற்று விஜயதாச ராஜபக்ஷ அவர்களால் கூறப்பட்ட நிதி நிருவாக ஊழல் மோசடிகள் தொடர்பில் - தனிநபர் என்ற அடிப்படையில் அவர் அவற்றிற்கு பதில் கூறட்டுமென விட்டு விடுவோம். 

ஆனால்,தென்கிழக்குப் பல்கலைக் கழகம் என்பது ஒரு நிறுவனம். அதன் கற்றல், கற்பித்தல் சார்பில் கண்மூடித்தனமாக பொறுப்பற்று இவ்வாறு அமைச்சர் நடந்துகொள்ள முடியாது. இதனை படித்தவர்களும், புத்திஜீவிகளும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.
A.L.Thawam

1 comment:

  1. You politicians have no moral right to speak for this whereas you have all kept your eyes closed so far very wel knowing that the VC was a misappropriating and created a mafia with people.

    ReplyDelete

Powered by Blogger.