Header Ads



முஸ்லிம்களோடு பழகிப் பார்த்தால்தான், அவர்களின் 'ஈகை' குணம் தெரியவரும் - டாக்டர் அனுரத்னா


ஒருமுறை மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த நேரம், ஒரு 25வயது பெண் கர்ப்பம் கலைந்து இரத்த போக்கோடு அவரது உடை அனைத்தும் இரத்தத்தில் தோய்ந்த நிலையில் வந்தார்.

அவரை பரிசோதித்துவிட்டு அவரை வார்டுக்குள் நான் அனுப்ப வேண்டும்.
உடனிருப்பவரை வரச்சொல்,

உடையை மாற்றுப்பா என சொல்லிகொண்டே கருவுற்று இருக்கும் அடுத்த பெண்ணை பரிசோதிக்க தொடங்கிவிட்டேன்.

நீண்ட நேரமாகியும் கர்ப்பம் கலைந்த பெண் துணி மாத்தாமல் இருக்க, நான் கோபத்தில் என்னம்மா செய்ற, சீக்கிரம் மாத்தும்மா துணியை என கத்தினேன்.

மேடம் நான் காதல் திருமணம் புரிந்துகொண்டவள், நானும் கணவரும் மட்டும் தான், அவரோ வேலைக்கு போய்விட்டார், 

நான் fancy பொருள் கடையில் வேலை பார்க்கிறேன், வேலை பார்த்த இடத்தில் இருந்து கரு கலைந்த உடன் அப்படியே இங்க வந்துட்டேன் என அழுதார்.

அவரை தேற்றுவதா, அவருக்கு எந்த உடையை கொடுப்பது, விடுதியில் மாணவிகளிடம் கேட்டு உடை வாங்குவோமா என சிந்தித்து கொண்டிருக்கும் போதே அடுத்த cases உடைய உறவினர்கள் என்னிடம் சண்டைக்கு வந்துட்டாங்க.

அந்த ஒரு case'ஐ மட்டுமே பார்க்குறிங்க, 

என் மகளை பார்,

என் மருமகளை பார்,

எங்க பிள்ளைங்க பிரசவ வலியில் இருப்பது தெரியலயா என சிலர் கத்தினார்கள்.

இவர்கள் கத்திக்கொண்டு இருக்கும் அதே நேரத்தில் முஸ்லிம் மதத்தை சார்ந்த பெண் ஒருவர், அமைதியாக அந்த கருக்கலைந்த பெண்ணிற்கு உடை மாற்றிக்கொண்டு இருந்தார்...

அவராக முன்வந்து இதை மனதார செய்தார்.

இந்து மதத்தை சார்ந்தோர் 30பேர் இருந்த இடத்தில்...

சக இந்து பெண்ணிற்கு உடை மாற்ற யாரும் முன்வரவில்லை.

அங்கிருந்த ஒரே முஸ்லிம் பெண்,

தன் மகளின் பிரசவத்திற்காக வந்தவர், யாரும் கேட்காமல் தானாக உதவ முன்வந்தார்,

காரணம் அவர் மற்ற உயிர்களை உயிர்களாக மட்டுமே பார்த்திருக்கார்.

அவரை மனமுவந்து பாராட்டினேன்...

அவர் மகளை மிகச்சிறப்பான முறையில் பிரசவம் பார்த்து அனுப்பி வைத்தேன்.

முஸ்லிம் மக்களோடு பழகிப்பார்த்தவர்களுக்கு தான் அவர்களின் ஈகை குணம் தெரியும்.

பழகிப்பாருங்கள்...

அவர்களின் வீடுகளுக்கு போய் பாருங்கள்,

அந்த பெண்கள் எவ்வளவு கனிவாக உபசரிக்கின்றனர் என தெரியும்.

இந்திய சுதந்திர போராட்டம் முதல் இன்றைய தூத்துக்குடி பிரச்சனை வரை நம்மோடு துணை நிற்பவர்கள் முஸ்லிம் சகோதரர்கள்.

அவர்களை வாழ்த்துவோம்..!

நாம் அனைவரும் இனத்தால் ஒன்றே.

நாம் அனைவரும் இணைந்தால் நன்றே!

-மருத்துவர்.அனுரத்னா

1 comment:

  1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 4:1)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.