Header Ads

"முஸ்லிம் அரசியல்வாதிகள், வரலாற்றுத் துரோகத்தை செய்யக் கூடாது"

-AA. Mohamed Anzir-

புதிய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணத் தேர்தலை நடத்துவது தொடர்பில், முக்கிய விவாதமொன்று எதிர்வரும் 6 ஆம் திகதி. வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

புதிய தேர்தல் முறையின் கீழ், மாகாணத் தேர்தல் நடத்தப்பட்டால்  முஸ்லிம் பிரதிநிதித்துவம்,  பாதியாக குறையும் ஆபத்து ஏற்படுவது, தவிர்க்க முடியாத பரிதாபம் ஏற்படும்

6 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த பாராளுமன்ற விவாதத்தின் முடிவில், எத்தகைய முறையில் தேர்தல் நடத்தப்படும் என்ற விபரம் பகிரங்கமாகும்.

இந்நிலையில் 21 முஸ்லிம் அரசியல்வாதிகளும் குறித்த விவாதத்தில் பங்கேற்று, முஸ்லிம்களுக்கு ஏற்படவுள்ள அநீதி குறித்து உரத்துக் குரல் கொடுக்க வேண்டும். 

சிலவேளை பாராளுமன்ற விவாதத்தை அடுத்து, வாக்களிப்பு நடத்தப்பட்டால் அந்த வாக்களிப்பை தோற்கடிக்க,  முஸ்லிம் அரசியல்வாதிகள் முயல வேண்டும்.

தமது கட்சி மற்றும் ஆட்சியாளர்களை திருப்த்திபடுத்த, முஸ்லிம் அரசியல்வாதிகள் புதிய மாகாணத் தேர்தல் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தால். அது சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்...!

5 comments:

  1. விகிதாசார பிரதிநிதித்துவம் என்பது ஒரு ஏமாற்று தேர்தல் முறை. இதை 100% முற்றாக இல்லாதொழிக்க வேண்டும். புதிய 50-50 முறை கூட ஜனநாயகமற்றது.

    உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளான அமேரிக்க, இந்தியாவில் இப்படியான ஏமாற்று தேர்தல்கள் இல்லை. இலங்கைக்கு ஜனநாயகத்தை அறிமுகப்படுத்திய UK யிலும் இது இல்லை.

    ReplyDelete
  2. Masha allah they are very unity.we beleive them.they will do right things in the future.insha allah

    ReplyDelete
  3. நடந்து முடிந்த மாநகர சபை தேர்தலில் கேட்டுத்தின்ட ரனில் விக்ரம சிங்க, இம்முறை யோசித்துதான் காலை வைப்பார் இருந்தாலும் எமது பாராளுமன்ற சகோதரத்துவம் களுக்கு ஞாபகம் ஊட்டியதற்காக நண்றி.

    ReplyDelete
  4. மக்கள் பிரதிநிதி என்பவர் குறிப்பிட்ட பிரிவு மக்களின் ஒர்பிரதிநிதியாக இருக்க
    வேண்டும். விகிதாசார பிரதிநிதித்துவத்தின்மூலம் ஒரு பிரதேசத்தின்மக்களின் பிரதிநிதியாக பலபேர் இருக்கின்றார்கள்இவர்கள் ஒருகட்டத்தில் எல்லோருக்கும் பொறுப்பாபக இருப்பதாக தங்களைகாட்டிக் கொண்டு பிறிதொருசந்தர்ப்பத்தில்தாங்கள் அதற்கு பொறுப்பற்வர்கள் என கைவிருத்து விடுவார்கள்.இவர்களின்
    செயல்பாடுகள் அப்பிரதேசத்தில் பிரதேசவாத்தையும் இனவாத்தையும் மதவாத்தையும் தோற்றுவித்து அடுத்த தேர்தலில் இவைகளை கொண்டு காய்நகர்த்தி எவ்வாறு மீண்டும்வெற்றி
    கொள்ளலாம் என்பதில் குறியாக உள்ளார்களே தவிர மக்களின் நலன் அவர்களின் ஒற்றுமை என்பதல்லாம் இரண்டாம் பட்சமாக உள்ளது. எனவே விகிதாசார பிரதிநிதித்துவத்தின் மூலம்
    கிடைக்கின்ற அநுகூலத்தைவிட பழைய தொகுதிமுறைமையின்கீழ் பெறுகின்ற அநுகூலங்கள்கூடுதலானவைகளாகும்
    தற்போது எமது நாடுபோகும்நிலையில்.
    இன விகிதாசார முறைமையின்கீழ் சிறுமான்மையினரின் பிரதிநிதித்துவத்தை மட்டும் கூட்டலாம்
    என எடுத்துக்கொண்டால் இதில் என்ன
    இலாபத்தை பெற்றோம் என கடந்த காலஅழிவுகள் நமக்கு சான்று படுத்துகிறது. முஸ்லிம் பாராளுமன்ற
    உறுப்பினர்கள் இருந்தும் எமது இன மத ரீதியான பிரச்சினைகள் தீர்கப்படுவதற்கு மாறாக அவைகள் இன்னும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நாட்டிலே குறிப்பாக
    வட கிழக்கிக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லீம்கள் இன மத கலாச்சார விடயங்களில் தனித்துவமாக செயல்பட்டாலும் அரசியல் ரீதியாக நாம் ஏனைய சமூகத்தாருடன் ஒன்றித்தே செயல்படவேண்டும்என்பது
    காலத்தின் தேவையாகும் இதற்கு தொகுதிமுறை தேர்தலே சிறந்ததாகும்.
    அத்தொகுதியினுடைய மக்கள் பிரதி நிதிகளை தெரிவுசெய்யும்போது இன மத மொழிரீதியாக பிரிந்து செயல்படாமல் பெருத்தமானவரை எல்லாமக்களும் சேர்ந்து தெரிவு செய்யக்கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும். இதனால் அத்தொகுதிக்னெ்று ஒரு தேசிய அரசியல் குழாம் அங்கு உருவாகி இருக்கும்.அக்குழு அங்கு ஏற்படும் நல்லது கெட்டதுகளை கவனித்துக்கொள்ளும். ஆனால் இன்று
    விகிதாசார தேர்தல் முறையை உருவாக்கி இனரீதியான கட்சிகளை தோற்றுவித்து அதன் பிரதிநிதித்துவத்தை கூட்டுவதிலே அரசியல் வாதிகள்கண்ணாய் உள்ளார்களே தவிர அதன்விளைவுகளை பற்றி சிந்திப்பதுமில்லை மக்களுக்கு அதுபற்றி சொல்வதுமில்லை. அரசியல்
    ரீதியாக நாம் பிரிந்து செயல்படாமல் தேசிய கட்சிகளோடு இணைந்து செயல்படுவதே எமது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்கு சிறந்த உபாயமாகும். இனரீதியான கட்சிகளும்
    விகிதாசார பிரதிநிதித்துவமும் எமது அரசியல்வாதிகளுக்கும் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் வாய்ப்பாய்
    இருக்குமே தவிர பொது மக்களுக்கு இல்லை என்பதை நாம் உணரவேண்டும்.ஏனைய மக்களோடு
    ஒற்றுமையாக செயல்படஇருக்கின்ற
    வாய்ப்பு அரசியல் ஒன்றுதான் அதிலும்
    நாம் பிரிந்து செயல்படுவது எம்மை நாம் அழிவுக்குள்ளாக்குவதாகும்.

    ReplyDelete
  5. மக்கள் பிரதிநிதி என்பவர் குறிப்பிட்ட பிரிவு மக்களின் ஒர்பிரதிநிதியாக இருக்க

Powered by Blogger.