Header Ads



கொழும்பில் சீன, பிரஜையின் திமிர்

கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், அந்தக் கட்டளையை மீறி கொழும்பு - 07, ஏனர்ஸ்ட் டி சில்வா மாவத்தையில் சீன வர்த்தகர் ஒருவர் ஹோட்டல் ஒன்றை கட்டியுள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

கொழும்பு -07, ஏனர்ஸ்ட் டி சில்வா மாவத்தையை அண்மித்த பிரதேசங்களில் வியாபார நிலையங்கள் கட்டுவதற்கு அனுமதி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 

கட்டுமான பணிகள் காரணமாக ஏற்படுகின்ற அதிக சத்தம் மற்றும் தூசி எழும்புவது சம்பந்தமாக பல தடவைகள் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. 

நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கொழும்பு மாநகர சபை என்பவற்றுக்கு அறிவிக்காமல் இந்த கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

இந்த ஹோட்டல் வௌிநாட்டவர்களுக்காக மாத்திரமே திறக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

4 comments:

  1. என்னப்பா நடக்குது..வரும் காலங்களில் இலங்கையை தேடித்தான் எடுக்க வேணுமோ ??

    ReplyDelete
  2. அடுத்த கொழும்பு மாநகர சபை தேர்தலில் மொட்டு சின்னத்தில் சிற்சில அல்லது பற்பல சீனப்பிரஜை களும் போட்டியிட உள்ளதாக லங்காபுவத் தில் அறியக்கூடியதாக இருக்கிறது.

    ReplyDelete
  3. Sri Lanka is party sold out to China...

    ReplyDelete
  4. how can someone built a hotel in colombo 07 where even building a toilet is impossible without approval from CMC or UDA? who knows about CMC and UDA rules and regulations know what i am trying to say. if someone built a building ( which is impossible ) without approval means they are basically committing financial suicide. this is unbelievable. someone spreading this story out of hate or jealousy.

    ReplyDelete

Powered by Blogger.