Header Ads



ஒரு தராவீஹ்யில் முழுக்குர்ஆனையும் ஓதிய, அல்ஹாபில் ஏ. முஹம்மது சாபீர்


(ஜே.எம்.ஹாபீஸ்)

மிகவும் பழமைவாய்ந்த அரபுக் கல்லூரிகளிலொன்றான  கன்னத்தொட்ட – அந் நூரிய்யா அரபுக் கல்லூரியின் கிதாப் பிரிவின் நான்காம் தர வகுப்பில் கல்வி கற்று வரும் மடவளை பஸாரைச் சேர்ந்த  மாணவன் அல் ஹாபில் ஏ.முஹம்மது சாபீர் கடந்த திங்கட் கிழமையன்று இரவு இஷா தொழுகையையடுத்து, அங்கு இடம் பெற்ற தராவீஹ்  தொழுகையில் சிறப்பான முறையில் முழுக் குர்ஆனையும் ஓதி தாழுகையை நடாத்தியுள்ளார். இது  மேற்படி அரபிக் கலாசாலை வரலாற்றில் இது வரை நடாந்திராத ஒரு முயற்சி எனத் தெரிவித்த ஊர் பிரமுகர்கள் அவரை வாழ்த்தி பாராட்டுத் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு சிறப்பான முறையில் முழுக் குர்ஆனையும் ஓதி தொழுகை நடாத்திய மாணவனுக்கு கலாசாலை அதிபர் மௌலவி எச்.டீ.அப்துல் கனி (இஹ்ஸானி) , பிரதி அதிபர்  மௌலவி எஸ்.எல் அஷ்கர் கான் (அத்ஹி)  மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள், உலமாக்கள், மாணவர்கள்  ஆகியோர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து மாணவனின் நல் வாழ்விற்காகப் பிராத்தனையும் செய்தனர்.  அவருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களையும் மேலே காணலாம்.  

இவர்  கண்டி லேக்ஹவுஸ் கிளையின் ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த எம்.ஏ. அமீனுல்லாவின் முதல்வராவார். 



3 comments:

  1. மாஷா அல்லாஹ், ரமதான் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Masha Allah You are great. you are always close to Allah.

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லாஹ் இவ்வாறு ஒவ்வொரு விட்டிலும் உருவாக வேண்டும்
    தீனுடைய அந்தஸ்து ஒரு காலமும் எங்களை
    விட்டுப் பிரியாது ஆனால் உலகத்தினுடைய
    அந்தஸ்து உலகத்தில் மட்டும் தான் மறுமையில் இல்லை
    உதாரணம் உலகில் doctor மறுமையில் no doctor ஆனால் உலகில் hafil மறுமையிலும் hafil

    ReplyDelete

Powered by Blogger.