Header Ads



வெள்ளிக்கிழமைக்குள் ஞானசாரரை, சிறையிலிருந்து வெளியே எடுப்போம் - துமிந்த

ஞானசார தேரரை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் சிறையிலிருந்து வெளியே எடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமாகிய துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

ஞானசார தேரரின் சுக துக்கங்களை விசாரிப்பதற்கு இன்று (20) சிறைச்சாலைக்கு சென்றுவிட்டு திரும்பும் போது ஊடகங்களுக்கு அமைச்சர் கருத்துத் தெரிவித்தார். இதன்போது ஊடகவியலாளர் ஒருவர், தேரரின் விடுதலை குறித்து அரசாங்கத்தின் நடவடிக்கை என்னவென வினவியதற்கே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை எமக்கு சவாலுக்குட்படுத்த முடியாது. இருப்பினும், எதிர்வரும் வெள்ளிக்கிழமையாகும் போது தேரரை வெளியே எடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

ஞானசார தேரர் சிறையில் மகிழ்ச்சியாக உள்ளார். அவர் என்ன ஆடைய அணிந்திருந்தார் என்பதை அவர் வெளியே வந்தபின்னர் அறிவிப்பார் எனவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.  

7 comments:

  1. அது சரி உங்கட செல்லப்பிள்ளை அவரை உள்ளே இருந்தாளும் வெளியே இருந்தாளும் சந்தோசமாகத்தான் வைத்யினுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. துவேசத்தின் பல உருவங்கள் ஒவ்வொன்றாக வௌியாகின்றன.

    ReplyDelete
  3. சபாஷ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இந்த பொறம்போக்கு இனவாதியை தியாகியாக்க நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தும் இந்ந நல்லாட்சியின் உண்மை முகம் தற்போது தெரிகிறது... பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட இவனை பாதுகாப்பாக வைத்து அரசியல் நாடகம் நடத்தி ஒரு மணித்தியாலத்தில் பிணை வழங்கிய இந்த ஆட்சியை இனியும் நம்புவது வடிகட்டிய முட்டாள் தனம்... கூட்டு எதிர்கட்சி கூறுவது போல அலுத்கம சம்பவத்தை வைத்து அரசியல் செய்து ஆட்சி மாற்றம் செய்த இவர்கள் ஏன் இன்னும் ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்து விசாரணை செய்யவில்லை? அதற்கு ஏன் எமது பெயர் தாங்கி முஸ்லிம் தலைமைகள் அழுத்தம் கொடுக்கவில்லை?

    ReplyDelete
  4. அப்படியென்றால் சட்டம் நீதி தேவதையின் கைகளுக்குள் அல்ல அரசியல் வாதிகளில் சட்டைப் பைக்குள் சிக்குண்டு இருக்கின்றது என்பது புலனாகின்றது. இவர் எப்படி சொல்லலாம் இவர் வெள்ளிக்கிழமைக்குள் வெளியில் வருவார் என்று.

    ReplyDelete
  5. கடூளிய சிறை தண்டனை பெற்றவருக்கு இருகிழமைகள் இருக்க முடியவில்லை என்றால் சாதாரண சிறைக்தண்டனை பெற்று மாதக்கணக்கில் வருடக்கணக்கில் இருப்பவர்கள் மனிதர்கள் இல்லயோ? அப்போ கூட இருக்கும் மற்ற 17 மத குருக்களின் நிலை என்ன? நாட்டிலுள்ள நீதிமன்றங்களை மூடி விட்டு நீதிபதி வேலையை ஜனாதிபதி கையில் எடுத்துக் கொண்டு நீதிபதிகளையும் சட்டத்தரணிகளையும் விவசாயம் செய்ய, மாடு மேய்க்க அனுப்பினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  6. now everyone knows who is snake-charmer

    ReplyDelete

Powered by Blogger.