Header Ads



ஜம்­இய்­யத்துல் உலமா, வெளியிட்டுள்ள முக்கிய பத்வா

உலகின் ஒரு பகு­தியில் நோன்பை ஆரம்­பித்த ஒருவர் இன்­னொரு பகு­தியில் இரு­பத்­தெட்­டாக அல்­லது முப்­பத்­தொன்­றாக பூர்த்­தி­செய்ய நேரிட்டால்… எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா பத்வா ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது.

அ.இ.ஜ.உ.வின் பத்வாக் குழு செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம்.இல்யாஸ், மேற்­பார்­வை­யாளர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம்.ஹாஷிம் சூரி, உலமா சபையின் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் (கபூரி) , தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி (முப்தி) ஆகியோர் ஒப்­ப­மிட்டு வெளி­யி­டப்­பட்­டுள்ள பத்­வாவில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

ஓர் இடத்தில் உள்ள மக்கள் அனை­வரும் நோன்பு நோற்­கும்­போது அவர்­க­ளுடன் சேர்ந்து ஒவ்­வொ­ரு­வரும் நோன்பு நோற்­பதும், அவர்கள் நோன்பை விட்டு பெருநாள் கொண்­டா­டும்­பொ­ழுது அவர்­க­ளுடன் சேர்ந்து பெருநாள் கொண்­டா­டு­வதும் அவ­சி­ய­மாகும் என்று முற்­கால மற்றும் சம­கால அறி­ஞர்கள் கூறி­யுள்­ளனர். இதற்கு பின்­னரும் ஹதீஸ் அடிப்­ப­டை­யாக உள்­ளது.

உங்­க­ளது நோன்பு நீங்கள் அனை­வரும் நோன்பு நோற்கும் பொழு­தாகும். நீங்கள் நோன்பை முடிப்­பது, நீங்கள் அனை­வரும் நோன்பை முடிக்கும் பொழு­தாகும். உங்­க­ளது ஈதுல் அழ்­ஹா­வு­டைய பெருநாள் நீங்கள் அனை­வரும் பெருநாள் கொண்­டாடும் நாளாகும் என நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி­ய­தாக அபூ ஹுரைரா றழி­யல்­லாஹு அன்ஹு அவர்கள் கூறு­கின்­றார்கள்.

நூல்கள்: ஸுனன் அல்– திர்­மிதி 697, ஸுனன் இப்னி மாஜஹ்–1660, அல்–­ஸுனன், அல்–­குப்ரா 8010, ஸுனன் அபீ தாவூத்–2324, ஸுனன் அல்–­த­ரா­கு-த்னி–2177.

பொது­வாகப் பிறை மாதங்கள் இரு­பத்­தொன்­பது அல்­லது முப்­பது நாட்­க­ளா­கவே இருக்கும் என அப்­துல்லாஹ் இப்னு உமர் றழி­யல்­லாஹு அன்ஹு அவர்கள் அறி­விக்­கின்­றார்கள்.

இறைத்­தூதர் ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லாம் அவர்கள், “மாதம் என்­பது இப்­ப­டியும் இப்­ப­டியும் இப்­ப­டியும் இருக்கும்” என்று (இரண்டு கைக­ளையும் மும்­முறை விரித்­துக்­காட்டி) முப்­பது நாட்கள் எனக்­கூ­றி­விட்டு பிறகு “மேலும் இப்­ப­டியும் இப்­ப­டியும் இப்­ப­டியும் இருக்­கலாம்” (என்று இரண்டு கைக­ளையும் மும்­முறை விரித்­துக்­காட்டி மூன்றாம் முறை பெரு­வி­ரலை மடக்­கி­ய­படி) – இரு­பத்­தொன்­பது நாட்­க­ளா­கவும் இருக்­கலாம் என்று கூறி­னார்கள். (நூல்கள் ஸஹீஹுல் புகாரி– 5302, ஸஹீஹு முஸ்லிம்–1080)

அதா­வது மாதம் என்­பது சில­வேளை முப்­பது நாட்­க­ளாக அல்­லது இரு­பத்­தொன்­பது நாட்­க­ளாக இருக்கும் என்று கூறி­னார்கள்.

இவ்­வா­தா­ரங்­களை அடிப்­ப­டை­யாக வைத்து மார்க்க அறி­ஞர்கள் பிறை மாதம் என்­பது இரு­பத்­தொன்­பது நாட்­களை விடக்­கு­றை­யாது எனும் விட­யத்தில் “இஜ்மா” கருத்­தொற்­று­மைப்­பட்­டுள்­ளனர். மேலும் இருப்­தொன்­ப­தா­வது தினம் மாலை பிறை தென்­ப­டா­விட்டால் அம்­மா­தத்தை முப்­ப­தாகப் பூர்த்­தி­செய்ய வேண்டும்.

“நீங்கள் அதை (பிறையைப்) பார்த்தால் நோன்பை ஆரம்­பித்­துக்­கொள்­ளுங்கள். மேலும் அதைப் பார்த்தால் நோன்பை முடித்­து­வி­டுங்கள். உங்­க­ளுக்கு அது மறைக்­கப்­பட்டால் ஷஃபான் மாதத்தை முப்­பது நாட்­க­ளாகப் பூர்த்­தி­செய்து கொள்­ளுங்கள்” என நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி­ய­தாக இப்னு உமர் றழி­யல்­லாஹு அன்­ஹுமா அவர்கள் அறி­விக்­கி­றார்கள். (நூல்: ஸஹீஹு-ல் புகாரி– 1907, ஸஹீஹு முஸ்லிம்–1081)

இவ்­வ­டிப்­ப­டையில் ஒருவர் எப்­ப­கு­தியில் இருக்­கின்­றாரோ அப்­ப­கு­தியில் உள்ள மக்கள் நோன்பை ஆரம்­பிக்­கும்­பொ­ழுது அவரும் நோன்பை ஆரம்­பிப்­பதும் அவர்கள் நோன்பை முடித்து பெருநாள் கொண்­டா­டும்­போது அவரும் அவர்­க­ளுடன் பெருநாள் கொண்­டா­டு­வதும் அவ­சி­ய­மாகும்.

மேலும் ஒருவர் ஒரு பகு­தியில் அப்­ப­குதி மக்­க­ளுடன் நோன்பை ஆரம்­பித்து பின்பு இன்னும் ஒரு பகு­திக்குச் சென்று அங்கு பெருநாள் வரை தங்­கி­யி­ருந்தால், அவர்கள் ரம­ழானை முடித்து பெரு­நாளை கொண்­டாடும் தினத்­தி­லேயே அவரும் பெரு­நாளை கொண்­டா­டுவார். இரு பகு­தி­க­ளிலும் ரமழான் வேறு­பட்ட தினங்­களில் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தாலும் சரியே!

அவ்­வாறு குறித்த நபர் ரம­ழானை முடிக்­கும்­போது முப்­ப­தொரு நாட்கள் நோன்பு நோற்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டாலும் அப்­ப­குதி மக்­க­ளுடன் அவர் அவ­ரது முப்­பத்­தொ­ரா­வது நோன்­பையும் நோற்று அவர்கள் பெருநாள் கொண்­டா­டும்­போது அவரும் பெருநாள் கொண்­டா­டுவார்.

அதே­போன்று அம்­மக்கள் பெருநாள் கொண்­டா­டும்­பொ­ழுது குறித்த நபர் இரு­பத்­தெட்டு நோன்பை முடித்­தி­ருந்தால் அம்­மக்­க­ளுடன் பெரு­நாளை கொண்­டா­டி­விட்டு பிறி­தொரு நாளில் ஒரு நோன்பை கழா செய்து கொள்வார். ஏனெனில் ஒரு மாதம் குறைந்­தது இரு­பத்­தொன்­பது நாட்­க­ளா­கவே இருக்கும் என்­பது மேற்­கூ­றிய ஆதா­ரங்­க­ளி­லி­ருந்து தெளி­வா­கின்­றது.

அவ்­வாறே ஒரு பகு­தியில் ரமழான் மாதத்­திற்­கான தலை பிறை தென்­பட்டு அல்­லது ஷஃபான் மாதத்தை முப்­ப­தாகப் பூர்த்­தி­செய்து ரமழான் மாதத்தின் நோன்பை ஆரம்­பித்­ததன் பின்னர் இரு­பத்­தெட்­டா­வது நாளில் தலை பிறை தென்­ப­டு­வ­தற்­கான  வாய்ப்பு இருந்து உறு­தி­யான சாட்­சிகள் மூலம் பிறை தென்­பட்ட விடயம் நிரூ­பிக்­கப்­பட்டால் இரு­பத்­தொன்­ப­தா­வது நாளில் பெருநாள் கொண்­டா­டி­விட்டு பிறி­தொரு நாளில் ஒரு நோன்பை கழா செய்­வதும் அவ­சி­ய­மாகும்.

இவ்­வா­றான ஒரு நிகழ்வு அலி றழி­யல்­லாஹு அன்ஹு அவர்­க­ளு­டைய காலத்தில் நடை­பெற்று அவர்கள் மக்­களை ஒரு நோன்பைக் கழா செய்­து­கொள்­ளு­மாறு ஏவி­னார்கள் என்ற விடயம் ஸுனன் அல்–­பை­ஹகி மற்றும் முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக் போன்ற கிரந்­தங்­களில் பதி­வா­கி­யுள்­ளன.

அவ்­வாறே சவூதி அரே­பி­யா­விலும் ஹிஜ்ரி 1404 ஆம் ஆண்டு மேக மூட்டம் கார­ண­மாக ஷஃபானை முப்­ப­தாகப் பூர்த்தி செய்து ரம­ழானை அந்­நாட்டு மக்கள் ஆரம்­பித்­தனர் என்­றாலும் இரு­பத்­தெட்­டா­வது தினம் பிறை தென்­பட்­ட­தாக நிரூ­பிக்­கப்­பட்­டதால் பிறி­தொரு நாளில் நோன்பைக் கழா செய்­வது அவ­சியம் என்று சவூதி அரே­பி­யாவின் ஆய்­வுக்கும் பத்­வா­வுக்­கு­மான நிரந்­தர அமைப்பு பத்வா வழங்­கி­யது.

எனவே, ரம­ழா­னு­டைய மாதம் ஏனைய பிறை மாதங்­களை போன்று இரு­பத்­தொன்­பது அல்­லது –முப்­பது நாட்­க­ளா­கவே இருக்கும். அவ்­வாறு இரு­பத்­தெட்­டா­வது தினம் ஷவ்வால் பிறை தென்­பட்­டது நிரூ­பிக்­கப்­பட்டால் பெருநாள் கொண்­டாடி விட்டு இன்னும் ஒரு நாளில் ஒரு நோன்பைக் கழா செய்து கொள்­வது அவ­சி­ய­மாகும்.

மேற்­கூ­றப்­பட்ட விட­யங்கள் பற்றிய தெளிவுகள் அனைத்தும் பல இஸ்லாமிய சட்ட நூல்களில் பதிவாகியுள்ளன. குறிப்பாக ஷாபிஈ மத்ஹபின், மின்ஹாஜுத் தாலிபீன் மற்றும் அதனுடைய விரிவுரை  நூல்கள், இமாம் மாலிக் றஹிமஹுல்லாஹ் மற்றும் ஹனபி மத்ஹபுடைய ரத்துல் முஹ்தார் மற்றும் ஹனபி மத்ஹபின் தற்கால பத்வா நூல்களான “அஹ்சனுல் பதாவா”, “பதாவா றஹீமிய்யா” போன்ற நூற்களின் ஆசிரியர்கள், ஜோர்தான் நாட்டு உத்தியோகபூர்வ பத்வா நிலையம் சமீபகால அறிஞர்களான அஷ்ஷெய்க் இப்னு பாஸ் மற்றும் அஷ்–ஷெய்க் இப்னு உஸைமீன் போன்ற இன்னும் பலர் இக்கருத்தை கூறியுள்ளனர்.
-Vidivelli

9 comments:

  1. Suppose, if I go to MOON during Ramadhan, how I should start fast, end fast, and celebrate Eid. Your fathwa with eveidence please.

    ReplyDelete
  2. This is for M.Y.Shihabdeen, the above article gives the ruling along with the necessary evidence which is provided in details. please read the article till end. Thanks

    ReplyDelete
  3. உலமாக்கள் எமது வழிகாட்டிகள் அவர்களது வழிகாட்டலில் ஒன்று பட்டு ஐக்கிய படுவதே காலத்தின் தேவையாகும்

    ReplyDelete
  4. PTS: I raised my question having gone through the above article very well. So I don’t need to read it again. If you have the answer, why don’t you give it in detail for me and to others too.

    Have a doubt. Is PTS an official service of ACJU?

    ReplyDelete
  5. Br. Shihab please ask any practical question

    ReplyDelete
  6. Mr Fazil: Who says that my question is impractical? Anyone can travel to moon with US $ one million in this century. Are you still living in Jahiriya?

    ReplyDelete
  7. Bro Shihab, குதர்க்கமான விதண்டாவாதமான கேள்வி கேட்டு நேரத்தை வீணடிப்பதை விடுத்து அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். முதலில் நீங்கள் என்ன சந்திரமண்டலத்திற்குப் போகப்போகிறீரா? இல்லையே அப்படிருக்க ஏன் இந்த வீணான கேள்வி?

    நீங்கள் பயணத்தில் இருந்தால், அல்லது நோயயுற்றிருந்தால் பிரிதொருநாளில் நோன்பை நோற்றுக் கொள்ளுங்கள் என்பது இறை வசனம். எனவே சந்திரனில் நீங்கள் இருந்தால் பயணத்தில் இருக்கின்றீகள் எனவே பூமிக்கு திரும்பி வந்து அந்த நோன்பை நோற்றுக் கொள்ளலாம். இல்லை நான் நோன்பு பிடித்தே ஆகவேண்டும் என்றால்

    – பூமியின் சுற்று வட்டத்தைத் தாண்டி சந்திரமண்டலத்திற்குப் போகின்றவர்கள் –

    கிரீன்னிச் நேரத்தின் படியே செயற்படுவதால் அதனை அடிப்படையாகக் கொண்டு உங்கள் கருமங்களை ஆற்ற வேண்டும். எனவே நோன்பை தொடங்குவதும் துறப்பதும் கிரீன்னிச் நேரத்துக்கமைவாக அமையும். அல்லது இஸ்லாம் அருளப்பட்ட மக்காவின் நேரத்தை அடிப்படையாகக் கொண்டுநோன்பை தொடங்குவதும் துறப்பதும் அமையும். இதற்கு ஆதாரமாக தஜ்ஜாலின் வருகை தொடர்பான ஹதீது அமைகின்றது. அதனை ஆராயுங்கள்.

    ReplyDelete
  8. Prayers times are based on dawn and dust of sun. My question is start and end of month of Ramadan which is based on the movment of moon

    ReplyDelete
  9. Dear Sajan,
    You asked previously “ if I go to MOON during Ramadan” and we answered accordingly. Now you said how to starts Ramadan. You behaved like a child. Think probably what you want to ask than shoot your questions. However, you should follow the ground station where the people lives.

    ReplyDelete

Powered by Blogger.