June 15, 2018

பிறை பார்த்து, குறைபட்டுக் கொள்வோம்...


 -கம்மல்துறை எம்மெல். ஷரான்-

பொறுமையின் மாதம்
ரமழான் ஆரம்பம் -
பொறுமை இழப்போம்
பிறை பார்த்து
குறைபட்டுக் கொள்வோம் !

அடடா ... ரமழான் முடிகிறது
மீண்டும்
பிறை பார்த்து    வரிந்து கட்டி
பிரிந்து செல்வோம் !

ஒரு பிறையா .....?
ஒன்பது பிறையா ....?
பிரிவதற்கா ??????

ஸலபிக்காரன் கண்ட பிறை
ஜமாத்காரனிடம் செல்லாது -
ஜமாத்காரன் கண்ட பிறை
ஜாமத்தில் கண்டது -
கேளி செய்து செய்தே
கேளிக்கூத்தாக்குவோம் இஸ்லாத்தை !

இன்று பெருநாளாம் -
கண்ட பிறைக்கு சண்டை போட்டு
காணாத குறைகளையும்
whatsAppல் ஏற்றி
குதூகளிப்போம் !

புத்தாடை உடுத்தி
நறுமணம் பூசி
நாறிப்போன வார்த்தைகள்
வீசிக் கொள்வோம் 

இப்படித்தான் ......
பொய்யும் புரட்டும்
குடியும் சூதும்
வட்டியும் குட்டியும் -
எனது வாழ்க்கை 

நான் நரகம் போனாலும்
பரவாயில்லை
நோன்பிலும் பெருநாளிலும் மட்டும்
அடுத்தவனும் சொர்க்கம் போக
ஆசைப்படுவோம்
ஏனெனில்
நானும் முஸ்லிம் நீயும் முஸ்லிம்
பெயருக்கு மட்டும் !!

      

0 கருத்துரைகள்:

Post a Comment