Header Ads



ரஷ்­ய உலக கிண்ண கால்பந்தாட்டம்: இலங்கைக்கு பெருமை தேடித்தந்த மொஹமத் அயான்


ரஷ்­யாவில் நடை­பெற்­று­வரும் 21ஆவது உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் ரஷ்­யா­வுக்கும் சவூதி அரே­பி­யா­வுக்கும் இடையில் நடை­பெற்ற ஏ குழு­வுக்­கான ஆரம்பப் போட்டி தொடர்­பான முன்­னாய்வு செய்­தி­யையும் போட்டித் தொடர்­பான செய்­தியைத் தொகுத்து வழங்­கி­யதன் மூலம் அரிய இளம் கால்­பந்­தாட்ட வீரர் மொஹமத் அயான் சதாத் இலங்­கைக்கும் தனது பாடா­சாலை றோயல் கல்­லூ­ரிக்கும் பெருமை சேர்த்­துக் ­கொ­டுத்தார்.

அத்­துடன் அவர் பயிற்­சி­ பெறும் மென்­செஸ்டர் கால்­பந்­தாட்டப் பயிற்­சி­யை ­கற்றுக் கொடுத்தவர்க்கும் இந்த பெருமை சேரு­கின்­றது. பீபா உலகக் கிண்ணப் போட்­டி­க­ளுக்கு முன்­னோ­டி­யாக நடத்­தப்­பட்ட கெஸ்ப்ரோம் நட்­பு­ற­வுக்­கான கால்­பந்­தாட்ட நிகழ்ச்­சியில் கலந்­து­கொண்­டதன் பல­னா­கவே இந்த அரிய வாய்ப்பு அயான் சதாத்­துக்கு கிடைத்­தது.

இந்த நிகழ்ச்­சியில் கலந்­து­கொண்ட 211 நாடு­களைச் சேர்ந்த 12 வய­துக்­குட்­பட்ட சிறு­வர்கள் மத்­தியில் போட்டி தொடர்­பான முன்­னோட்டக் கட்­டு­ரை­யையும் போட்டி தொடர்­பான செய்தி தொகுப்­பையும் எழு­து­வ­தற்கு அயான் சதாத் தெரி­வா­னமை பெரு­மைக்­கு­ரிய விட­ய­மாகும். மொஸ்கோ, ஸ்பார்ட்டக் கால்­பந்­தாட்டப் பயிற்­சி­ய­கத்தில் அண்­மையில் நடை­பெற்ற கெஸ்ப்ரோம் நட்­பு­ற­வுக்­கான கால்­பந்­தாட்ட நிகழ்ச்­சியின் ஓர் அம்­ச­மான நட்­பு­றவு, சமத்­துவம், நேர்மை, சுகா­தாரம், சமா­தானம், அர்ப்­ப­ணிப்பு, வெற்றி, பாரம்­ப­ரியம், மதித்தல் ஆகிய ஒன்­பது பெறு­ம­தி­மிக்க பண்­பு­களை உள்­ள­டக்­கிய பாட­சாலை நிகழ்ச்சித் திட்­டத்­திலும் அயான் சதாத் உரை­யாற்­றினார்.

இவ்­வா­றான ஒரு வாய்ப்பு கிடைத்­த­தை­யிட்டு பெருமை அடை­வ­தாக அயான் சதாத் நாடு திரும்­பி­யதும் தெரி­வித்தார்.

இந்த நிகழ்ச்­சியில் கலந்­து­கொண்ட அயான் சதாத் உட்­பட பல­ருக்கு விரு­து­களும் டிப்­ளோமா சான்­றி­தழ்­களும் வழங்­கப்­பட்­டன.இதே­வேளை, கெஸ்ப்ரோம் நட்­பு­ற­வுக்­கான கால்­பந்­தாட்ட நிகழ்ச்­சியில் இலங்கை சார்­பாக மென்­செஸ்டர் கால்­பந்­தாட்டப் பயிற்­சி­ய­கத்தைச் சேர்ந்த மொஹமத் அயான் சதாத்தின் சகா­வான தினூக்க பண்­டார (நுகே­கொடை, புனித சூசை­யப்பர் கல்­லுரி) கோல் ­காப்­பா­ள­ராகத் தெரி­வாகி லயன் அணிக்­காக விளை­யா­டினார்.

இவர் மூன்று போட்­டி­களில் கோல்­காப்­பா­ள­ராக விளை­யாடி ஒரு கோலை மாத்­தி­ரமே விட்­டுக்­கொ­டுத்தார்.

இவர்கள் இரு­வரும் மற்­றைய நாடு­களின் சிறு­வர்­க­ளுடன் மொஸ்கோ லுஸ்­னிக்கி விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற உலகக் கிண்ண ஆரம்ப விழா வைப­வத்தில் கலந்­து­கொண்­ட­துடன் ரஷ்­யா­வுக்கும் சவூதி அரே­பி­யா­வுக்கும் இடை­யி­லான ஆரம்பப் போட்­டி­யையும் கண்டு களிக்கும் அரிய வாய்ப்பு கிட்­டி­யது.

நட்­பு­ற­வுக்­கான கால­்பந்­தாட்ட நிகழ்ச்­சிக்கு தங்­களைத் தெரிவு செய்த மென்­செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் ஸ்தாபத் தலைவர் ஒகஸ்டின் ஜோர்ஜ், பயிற்சியகத்தின் சர்வதேச விடயங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் மற்றும் ஆலோசகர் முஹீத் ஜீரான் ஆகியோருக்கு அயான் சதாத்தும் தினூக்க பண்டாரவும் நன்றிகளைத் தெரிவித்தனர்.
-Vidivelli


3 comments:

Powered by Blogger.