Header Ads



ரமழானில், மகளிருக்கு ஓர் ஈமானிய மடல்

-T.M.Mufaris Rashadi-

வழ­மை­யான மாதங்­களை விட உயர்­வான ஒரு மாத­மாக இதோ ரமழான் எங்­களை வந்­த­டைந்து மிக வேக­மாக எங்­களை விட்டும் கடந்து சென்று கொண்­டி­ருக்­கி­றது. அல்­குர்ஆன் இறங்­கப்­பட்ட இந்த அற்­புத மாதத்தின் ஒவ்­வொரு நிமி­டமும் பெறு­ம­தி­யா­னது. ஆனால் ஏனோ நாம்தான் அதன் பெறு­மதி உண­ராது செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கிறோம்.

'ரமழான் மாதம் எத்­த­கை­யது என்றால்  (இம்­மா­தத்தில் தான்) மனி­தர்­க­ளுக்கு நேர்­வழி காட்­டக்­கூ­டிய, சத்­தி­யத்­தையும் அசத்­தி­யத்­தையும் பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்­றது. உங்­களில் எவர் அம்­மா­தத்தை அடை­வாரோ அவர் அம்­மா­தத்தில் நோன்பு நோற்­கட்டும்' (அல்­ப­கரா 2: 185). புனி­த­மிக்க அல்­லாஹ்வின் வேதம் இறங்­கிய சங்­கை­யான இந்த மாதத்தில் அல்­குர்­ஆ­னோடு அதனை ஓது­வது, அதன் கருத்­துக்­களை புரிந்து கொள்­வது, தப்ஸீர் விளக்­கங்­களை கற்றுக் கொள்ள முயற்­சிப்­பது என எமது பெண் சகோ­த­ரி­களின் உறவு எவ்­வ­ளவு இறுக்­க­மாக பேணப்­பட்டு வரு­கி­றது என்­ப­தனை அவர்­க­ளா­கவே பரி­சீ­லித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அல்­குர்­ஆனை கற்றுக் கொள்­வது தொடர்பில் இம்­மா­தத்தில் நபி­க­ளாரும் அதிக பிர­யத்­த­னத்தை எடுத்­துள்­ளார்கள் என்­ப­த­னையே பின்­வரும் நபி மொழி எமக்கு சொல்­லித்­த­ரு­கி­றது.

ரம­ழானின் ஒவ்­வொரு இர­விலும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்­களை சந்­தித்து அல்­குர்­ஆனை ஓதிக்­காட்­டு­வார்கள்' (புஹாரி).

புஹாரி மற்றும் முஸ்­லிமின் அறி­விப்பில் வரு­வது போன்று இரவின் மூன்றாம் பகு­தியில் யார் பாவ­மன்­னிப்பை தேடு­கி­றார்கள் என காத்­தி­ருக்கும் அந்த ரப்பை பல பொழு­து­களில் வர­வேற்க எமது பெண்கள் தவ­றி­வி­டு­கின்­றனர். குடும்­பத்­தி­ன­ருக்­கான சுடு­சோறு,பொரியல் என மும்­மு­ரமாய் ஈடு­ப­டு­வதால் அவ­சர அவ­ச­ர­மான இரண்டு ரக்அத் தொழு­கை­யுடன் பெரும்­பாலும் இறை­வ­னு­ட­னான சந்­திப்பை சுருக்கிக் கொள்­கி­றார்கள். குறிப்­பாக இந்த சங்­கை­மிகு ரம­ழானில் சுவர்க்­கத்­தின வாயில்கள் திறக்­கப்­படும், நர­கத்தின் வாயில்கள் மூடப்­படும், ஷைத்­தான்கள் விலங்­கி­டப்­ப­டு­கின்­றனர்' என நபி­களார் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். (புஹாரி, முஸ்லிம்)  என்ற இந்த செய்­தியை அறிந்த பின்பும் வாயில்கள் திறக்­கப்­பட்டு நமது வரு­கையை எதிர்­பார்க்கும் அந்த சுவ­னத்தை அடைய முயற்­சிப்­ப­தில்­லையே என நம்மை நாமே ஒரு கணம் விசா­ரித்துக் கொள்ள வேண்­டிய அவ­சிய தேவைப்­பாடு உள்­ளது.

பஜ்­ரிற்கு பின்­ன­ரான பொழு­து­களில் பாரினில் விசி­றப்­படும் அருள்­களை தேடச் சொன்­னதை மறந்து தொழுகை எப்­பொ­ழுது முடியும்?
எப்­பொ­ழுது தூங்­கலாம்? என்ற அங்­க­லாய்ப்பில் அருள்­க­ளையும் புறக்­க­ணித்து விடு­கிறோம். நன்­மையின் பதி­வு­க­ளுடன் அந்த நேரத்தில் எம்மை நோக்கி வரும் மலக்­கு­மார்­களை இஸ்­திஃ­பா­ரு­டனும் அவ்­ரா­து­க­ளு­டனும்  சந்­திப்­பது பற்றி எது­வித கரி­ச­னையும் இல்­லாமல் உறக்­கத்தை தேடிக் கொண்­டி­ருக்­கிறோம். ரமழான் காலங்­களில் ஒவ்­வொரு செய­லுக்கும் பன்­ம­டங்கு கூலி கொடுக்­கப்­ப­டு­மெனத் தெரிந்­தி­ருந்தும் நன்­மையில் ஆர்­வ­மற்­றி­ருப்­பது எமது பொடு­போக்குத்தனத்­தினை தானே எடுத்­தி­யம்­பு­கி­றது?

லுஹர் தொழுது முடிந்­த­தி­லி­ருந்தே இப்­தா­ருக்­கு­ரிய உண­வு­க­ளுக்­காக இறைச்சி, கிழங்கு அவிப்­பது மாவு பிசை­வது என எமது குடும்பத் தலை­விகள் பர­ப­ரப்­பாக இயங்­கு­வதால் குர்­ஆனை அவ­ச­ர­மாக ஓதி முடிப்­பதை பல வீடு­க­ளிலும் அவ­தா­னிக்­கலாம். நோன்பு என்­பது நன்­மை­களை சேக­ரிப்­ப­தற்கு முயற்­சிக்க வேண்­டிய கால­மே­யன்றி,வித வித­மான உண­வு­களால், அதுவும் ஆரோக்­கி­யத்­திற்கு பாத­க­மான உண­வு­களால் உட­லுக்கு தீங்கு செய்­வ­தற்­கு­ரிய காலம் அல்ல. முடி­யு­மான வரை இறை­வனைப் பற்றி அறிந்து, உணர்ந்து வணக்­கங்­களில் ஈடு­ப­டு­வதன் மூலம் ஆன்­மாவை வளப்­ப­டுத்த வேண்­டிய காலம் என்­பதை எப்­போது உண­ரப்­போ­கிறோம்?

அஸ­ருக்குப் பின்­ன­ரான நேரமும் அதி­காலை நேரத்தைப் போல மலக்­கு­மார்கள் நன்மை, தீமையின் ஏடு­களை சுமந்து கொண்டு எங்­களை தேடி வரும் நேர­மாகும். அந்த நேரத்தில் எண்ணெய் சட்­டி­க­ளு­டனும், பொறியல் கரண்­டி­க­ளு­டனும் அவர்­களை எதிர்­கொள்­வதா? அவ்­ரா­து­களால் ஏடு­களை கனக்கச் செய்­வதா? என இந்த ரம­ழா­னி­லா­வது சிந்­திக்கக் கடமைப்பட்­டி­ருக்­கிறோம். வீட்டு வேலை­களோ சமையல் ஏற்­பா­டு­களோ செய்­வதில் எந்த தவறும் கிடை­யாது. எனினும், ரமழான் காலங்­களில் அதற்கு வழங்­கு­கின்ற முக்­கி­யத்­து­வத்தை விட பன்­ம­டங்கு எமது ஆன்­மாக்­களின் உண­ர்வு­க­ளுக்கு வழங்க வேண்டும் என்­ப­தையே சுட்­டிக்­காட்ட முயற்­சிக்­கிறோம்.

நீண்ட நேரம் பசித்­தி­ருந்­து­விட்டு இப்­தாரின் போது  எண்­ணெயால் செய்த உண­வு­களை அதிகம் உட்­கொள்­வதால் ஏற்­படும் அசதி கார­ண­மாக இப்­பொ­ழு­தெல்லாம் பல பெண்கள் இரவுத் தொழு­கை­க­ளுக்கு சமு­க­ம­ளிப்­பதும் இல்லை, வீட்டில் அதற்­காக நேரம் ஒதுக்கி பிந்­திய இர­வு­க­ளி­லா­வது நின்று வணங்க முயற்சி எடுப்­ப­து­மில்லை. ரம­ழானில் செய்யும் ஒரு சுன்­னத்­தான அம­லுக்கும் மகத்­தான நன்­மைகள் கிடைக்­கு­மெனத் தெரிந்­தி­ருந்தும், அல்­லாஹ்வின் ரஸூல்  ரம­ழானின் இரவுத் தொழு­கைக்கு அதி­க­ளவு முக்­கி­யத்­துவம் கொடுத்­தி­ருப்­பது தெரிந்­தி­ருந்தும் நாள் முழுதும் சமை­ய­ல­றையில் களைப்­ப­டைந்த பெண்கள் இர­வு­களை உயிர்ப்­பிக்­கவும் தவறி விடு­கிறோம்.
நிறைய ஓய்வு நேரம் கிடைக்கக் கூடிய ரம­ழானின் பொழு­து­களில் தனக்குத் தெரிந்த, வகை வகை­யான உண­வு­களால் இப்­தா­ரையும் ஸஹ­ரையும் சிறப்­பிக்­க­வென்று வேலைப்­ப­ளுவை வலிய இழுத்துப் போட்டுக் கொள்­கின்றோம். நன்­மையை அறு­வடை செய்ய வேண்­டிய அற்­புத மாதத்­தையும் வீண­டித்­து­வி­டு­கிறோம்.

ரம­ழானின் முதல் இரவு வந்து விடு­மானால் ஷைத்­தான்­களும், அட்­டூ­ழியம் புரியும் ஜின்­களும் விலங்­கி­டப்­ப­டு­கின்­றனர். நர­கத்தின் அனைத்து வாயில்­களும் மூடப்­படும் அதில் ஏதும் திறக்­கப்­ப­ட­மாட்­டாது, சுவர்க்­கத்தின் அனைத்து வாயில்­களும் திறக்­கப்­படும் அதில் ஏதும் மூடப்­ப­ட­மாட்­டாது. ஓர் அழைப்­பாளர் நன்­மையை விரும்­பு­ப­வர்­களே அதிகம் நன்மை செய்­யுங்கள், பாவங்­களை விரும்­பு­ப­வர்­களே பாவங்­களை நிறுத்­திக்­கொள்­ளுங்கள் என்று அழைப்பு விடுப்பார். ஒவ்­வொரு இரவும் நர­கத்­திற்­கு­ரி­ய­வர்கள் விடு­தலை செய்­யப்­ப­டு­கின்­றனர்.' என நபிகள் நாயகம் (ஸல்ய) அவர்கள் கூறி­னார்கள் (அறி­விப்­பவர்: அபூ­ஹு­ரைரா (ரலி), ஆதாரம்: திர்­மிதி, இப்­னு­மாஜா). நன்­மை­களை சேமித்து களஞ்­சி­யப்­ப­டுத்­த­வேண்­டிய புனித மிகு இம்­மா­தத்தில் வேறு தேவை­யற்ற அனைத்து விட­யங்­க­ளிலும் பொன்­னான நேரத்தை வீண் விர­ய­மாக்­கு­கின்றோம்.

ரம­ழானின் இறுதிப் பத்து நாட்­களை அடைந்து விட்டால் நபி­களார் இஃதிகாப் இருந்­தி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளது மர­ணத்தின் பின்னர் அன்­னாரின் மனை­விமார் இஃதிகாப் இருந்­தி­ருக்­கி­றார்கள். ஆனால் எமது ஆண்­க­ளா­கட்டும் பெண்­க­ளா­கட்டும் கடைத்­தெ­ருக்­களில் இருப்­ப­தையே காண முடி­கி­றது, காலையில் சுற்றித் திரிந்த களைப்பில் லைலதுல் கத்ரை தேட வேண்­டிய இர­வு­களில் ஓய்­வையும் உறக்­கத்­தையும் தேடிக் கொண்­டி­ருக்­கிறோம், கடைசிப் பத்து நாட்­க­ளிலும்  எதிர்­பார்க்க வேண்­டிய லைலத்துல் கத்ரை 27ஆம் நாளென்ற ஒரு நாளில் மட்டும் சுருக்கிக் கொண்டு விதவித­மான ஆடை­களை தேடி வேட்­டைக்காய் கிளம்பி விடு­கிறோம். கடைத் தெருக்கள் ஷைத்­தான்­க­ளுக்கு மிகவும் பிடித்­த­மான இடங்­க­ளென்­பதை உணர்ந்து கொண்டே ஆடை வாங்­கு­வதை இறுதி வரை பிற்­போ­டு­கிறோம். புது பெஷன் ஆடை வேண்­டு­மென்­ப­தற்­காக  நன்­மை­களை அடகு வைக்­கவும் துணிந்து விடு­வதை எண்ணி எப்­போது கைசே­தப்­படப் போகிறோம்? ரம­ழா­னுக்கு முன்­னரே அந்த ஆடை­களை வாங்கி வைக்கும் பழக்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொண்டால் கடைசிப் பத்து நாட்­களை நன்மை தேடு­வதில் வினைத்­தி­ற­னாக பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம்.
நோன்பு காலங்­களில் உணவு விட­யத்­திலும் சரி, உடை வாங்கும் விட­யத்­திலும் சரி ஏனைய அனைத்து விவ­கா­ரங்­க­ளிலும் வீட்டுப் பெண்­க­ளுக்கு ஒத்­தாசை புரி­வதன் மூலம் அவர்கள் நன்­மை­களை தேடு­வதில் ஆண்கள் அவர்­களை ஊக்­கப்­ப­டுத்த வேண்டும். ஏனெனில் ஆண்கள் தான் பெண்களுக்கான மேய்ப்பாளர்கள். அதுபற்றிய விசாரணைகள் அவர்களுக்குரியதே. எனவே ஆண்களும் தமது பெண்கள் விடயத்தில் கரிசனையெடுத்து தாமும் அதற்கு சிறந்த முன்மாதிரிகளாக செயற்பட முயற்சிக்க வேண்டும்.

நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாயில் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாயில் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்கள் தவிர வேறு யாரும் அவ்வழியே நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாயில் மூடப்பட்டு விடும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

ரமழான் காலங்கள் நன்மையைத் தேட வேண்டிய காலங்கள். அதை வீணடிக்காமல் தக்வாவை ஏற்படுத்தி ஆன்மாவை போஷித்து  ரய்யான் எனும் சுவன வாயிலால் நாமும் நமது குடும்பமும் சுவனத்தில் நுழையும் பேற்றைப் பெற முயற்சிப்போமாக!
-Vidivelli 

No comments

Powered by Blogger.