Header Ads



ரணிலின் சகோதரரது தொலைக்காட்சிக்கு சீல் - மைத்திரியின் சகோதரர் அதிரடி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சகோதரரான ஷான் விக்ரமசிங்கவின் தொலைக்காட்சி சேவையான ரீ.என்.எல் தனியார் தொலைக்காட்சி சேவையின் ஒளிபரப்பு நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ரீ.என்.எல் தொலைக்காட்சியின் பொல்கஹாவெல ஒளிபரப்பு நிலையமே இவ்வாறு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவினால் இவ்வாறு சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

உரிய கட்டணங்கள் செலுத்தப்பட்ட நிலையில் தமத தொலைக்காட்சி சேவை சீல் வைத்து மூடப்பட்டதாக நிறுவனத்தின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை கண்டிப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒளிபரப்பு நிலையத்தின் உபகரணங்களையும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் எடுத்துச் செல்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒட்டு மொத்த தொலைக்காட்சி சேவையும் முடக்கப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் சகல ஒளிபரப்புக்களும் நிறுத்தப்பட்டுள்ள சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

அண்மைய நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக ரீ.என்.எல் தொலைக்காட்சியில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபாலவின் சகோதரர் என்பது கவனிக்கத்தக்கது.

2 comments:

  1. மன்னன் ஆட்சின் அதிகாரம் ஆரம்பம், அன்று மகிந்த குழு இன்று மைத்திரிக்குழு

    ReplyDelete
  2. Next one and half years will be like this and both Jokers (My3 & Ranil) will be chased away by the Masses in 2019/2020.

    ReplyDelete

Powered by Blogger.