Header Ads



மைத்திரியின், பெருநாள் வாழ்த்துச் செய்தி

மானிட வர்க்கத்தின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்வதே முதன்மைத் தேவையாக அமைகின்றது. சமூகத்திற்கு ஒவ்வாத எவ்வாறான செயல்களினதும் ஆரம்பக் கரு மனித மனங்களிலேயே உதிக்கின்றது. அந்தவகையில் மானிட வர்க்கத்தின் விடுதலையும் நலனும் மனிதநேயம்மிகு நற்சிந்தனைகள் வளமாகவும் பலமாகவும் அமையும் பின்னணியிலேயே உருவாகின்றது.  

உலகவாழ் முஸ்லிம்கள் ஒரு மாத காலம் நோன்பு நோற்று தியாகத்தையும் சமாதானத்தையும் நன்மதிப்பையும் முதன்மைப்படுத்தும் ஈதுல் பித்ர் ஈகைத்திருநாள் மூலம் இந்த உன்னதமான செய்தியினையே உலகிற்கு எடுத்துரைக்கின்றார்கள். அது உலக நியதியை உள்வாங்கிய செய்தியுமாகும். உலகவாழ் மக்களின் நலனும் அவ்வாறான நற்செய்திகளின் பொருளைப் புரிந்து மற்றவர்களோடு ஏற்படுத்திக் கொள்ளும் புரிந்துணர்விலேயே தங்கியிருக்கின்றது.

இன்றைய சூழ்நிலையில் பெரும் இக்கட்டான நிலைமையை சந்தித்திருக்கும் தற்கால உலக சமூகங்களுக்கிடையில் நல்லொழுக்கத்தையும் நேசக்கரத்தையும் நீட்டி, நேர்மையாக நடந்து கொள்வதிலேயே சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும் இதமான வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதையே ரமழான் நோன்பு எமக்கு கற்றுக்கொடுக்கின்றது. 

வெறுமனே வேதம் என்ற எல்லையைக் கடந்து உன்னதமான மனிதத்துவத்துடன் உறவாடும் நேர்மையான நோக்கைக் கொண்ட இலங்கையருக்கும் உலகவாழ் இஸ்லாமியருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  

மைத்ரிபால சிறிசேன
2018 ஜுன் 15 ஆம் திகதி

No comments

Powered by Blogger.