June 27, 2018

அன்வருடன் மோதும் பௌத்தபிக்கு - கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்ட பின் அட்டகாசம்

(அப்துல்சலாம் யாசீம்)

புல்மோட்டை   அரிசிமலை விவகாரம் தொடர்பாக   அரிசிமலை பௌத்த பிக்குவினால் தமக்கான அரிசிமலை பிரதேசத்தை புனித பூமியாக அளவிட்டு தருமாறும் புல்மோட்டை பிரதேசத்திலுள்ள மக்கள் அதிகமான காணிகளை கொண்டிருப்பதாகவும் அரச காணிகளை அதிகமானோர் பிடித்து வருவதாகவும் குற்றம் சாட்டியதுடன் இது விடயமாக குச்சவெளி பிரதேச செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க தவறுவதாகவும்  குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் அவற்றை இனம் கண்டு தீர்வை பெற்று தரவேண்டும் அவ்வாறு புனித பூமிக்கு அளவிடப்பட்டு உரியவர்கள் பௌத்த விகாரைக்கு வரி செலுத்தி வசிக்கலாம் என்ற பௌத்த பிக்குவின் கருத்துக்கு பிரதேச செயலாளர்  பொன்னம்பலம் தனேஸ்வரன் பாரிய பிரச்சினைகள் கடந்த காலங்களை போல் ஏற்பட வாய்ப்புண்டு எனவும்  குறிப்பிட்டார்.

இதன்போது மறுத்து பேசிய பிரதேச செயலாளர் பிக்குவால் குறிப்பிடப்படும் அரிசிமலை காணி எல்லைக்குள் பொது மக்களின் காணிகள் இருப்பதாகவும் ஏலவே பழமை வாய்ந்த காணி உறுதியை கொண்ட நபர் ஒருவர் தமது காணி அளவிடுவது தொடர்பாக நீதிமன்றில் வழக்கு  தொடர்ந்திருப்பதாகவும் இது விடயமாக கடந்த காலங்களில் பல பிரச்சினைகள் ஏற்பட்டத்துடன் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்தியதாகவும் நிள அளவை திணைக்கள அதிகாரி மற்றும் பிரதேச செயலாளர்  குறிப்பிட்டார்.

 அரிசிமலை பௌத்த பிக்கு பணாமுற என்பவர் கடந்த மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் பல பிரச்சினைகளை புல்மோட்டை பிரதேசத்தில் ஏற்படுத்தியவர் மஹிந்தவின் ஆதரவாளர்களின் மிகவும் நெருக்கமானவர் பொது பல சேனா,ராவய, மகா சோன பலாக்காய போன்ற கடும்போக்கு பௌத்த இனவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

 கடந்த மஹிந்த ஆட்சிக்காலத்தில் புனித பூமிக்காக அரிசிமலை மாத்திரமல்ல புல்மோட்டையில் மொத்தமாக புனித பூமியாக அரிசிமலை 500 ஏக்கர் காணிக்கு புறம்பாக 2000 ஏக்கர் காணி புல்மோட்டை தோண்டா முறிப்பு,மண்கிண்டி மலை,யான் ஓயா,கண்ணீராவை,14 ம் கட்டை போன்ற பகுதிகளால் புனித பூமிக்கு அளவீடு செய்வதற்கு அன்றிருந்த மாவட்ட இராணுவ இனவாத அரசாங்க அதிபர் சில்வா வின் தலைமையில் அளவிட முற்பட்டபோது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் தலைமையில் பள்ளிவாசல் நிர்வாகம்,பிரதேச அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து பலமுறை மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாடத்தினால் வீதிக்கு இரங்கி பொலிஸார் குவிக்கப்பட்டும் மக்களின் உதவியோடும்  தடுத்து நிறுத்தப்பட்டது.

மேலும் கடந்த  2004 ம் ஆண்டு காலப்பகுதியில் அரிசிமலை பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட  மூன்று வீடுகளில் ஒன்றை பௌத்த பிக்கு கண்டியில் உள்ள சிங்கள சகோதரருக்கு பணத்தை பெற்றுக்கொண்டு காலித் என்பவரின் வீடு அபகரிக்கப்பட்டதை தொடர்ந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வரால் அந்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அவர்கள் உரியவர்கள் குடியமர்த்த பட்டபோது பொலிஸாரால் அவர்கள் வெளியேற்றப்பட்டது மாத்திரமில்ல கொழும்பில் இருந்து இரவோடு இரவாக ராவணய பலய என்ற இனவாத பௌத்த பிக்குகள் அடங்கிய குழு காலிதின் அரிசிமலை வீட்டிற்கு வருகை தந்து சுற்றி வளைத்து வீட்டை சேதமாக்க துணை நின்றவர் இந்த பௌத்த பிக்கு,

பின்னர் 2016 ம் ஆண்டில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வரின் ஆறு வருடமுயற்சியின் பின் பிரதேச செயலாளரின் ஒத்துழைப்பில் பாதுகாப்பு அமைச்சினால் மூன்று வீடும் விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது 

மேலும் முஸ்லிம்களின் கடைகளின் சிங்களவர்கள் பொருட்களை வாங்க கூடாது அதற்காக மக சோன பலக என்ற அமைப்பின் முக்கிய நபராக கருதப்பட்ட அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிரான கண்டி கலவரத்தில் கைது செய்பட்ட அமித் வீரசிங்க என்பவனை கொண்டு வந்து புல்மோட்டை 14 ம் கட்டை பகுதியில் பட்டாளங்களுடன் சிங்கள கடைகளுக்கான அடிக்கல் நாட்ட முற்பட்டபோது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வரால் அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட பொலிஸ் தலைமை அதிகாரிக்கு அறிவித்ததை தொடர்ந்து குறித்த பிரதேசத்திற்கு விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது இதற்கும் முழுமையான சூத்திரதாரி குறித்த பௌத்த பிக்குவே 

மேலும் பல பௌத்த விகாரைகளை அமைத்து பதிவிடுவதற்கு புல்மோட்டை யான் ஓயா அண்மித்த பகுதி,குச்சவெளி,சலப்பையாறு கருவாட்டுமலை,புல்மோட்டை தோண்டா முறிப்பு,தென்னைமரவாடி  கந்த சாமி மலை போன்ற பகுதிகளில் புதிய பௌத்த விகாரைகளை அமைக்க பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் அவற்றையும் நாம் உரிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தடுத்து நிறுத்தி இருந்தாலும் அவரின் முயற்சி இடம் பெற்றுக்கொண்டேதான் வருகிறது 

இவ்வாறு அணைத்து நடவடிக்கையிலும் தோல்வி கண்ட இவர் மாகாண சபை கலைக்கப்பட்டதின் பின் சிங்கள பகுதியான பதவி ஸ்ரீ புர பகுதிகளுக்கு சென்று அன்வருக்கு சிங்கள மக்கள் வாக்களிக்க கூடாது சிங்கள மக்களுக்கு எதிரானவனுக்கு ஏன் வாக்களிக்க போகிண்றீர்கள் என்ற இனவாத பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார் எனவேதான் தொடர்ந்தும் தன் நடவடிக்கையில் குறியாகவே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் எந்த விதத்திலும் எமது மாவட்ட அரசியல் வாதிகளோ அல்லது தலைமைகளோ எமது மக்களோ விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்பதாகவும் அன்வர் சுட்டிக்காட்டினார் 

0 கருத்துரைகள்:

Post a Comment