June 06, 2018

நோன்பின் மதிப்பு பற்றி, ஒரு கிறிஸ்தவ சகோதரரின் பதிவு

நோன்பு காலத்தில் என்னோடு வேலைசெய்யும் இஸ்லாமிய நண்பர்களோடு சேர்ந்து நானும் ஒரு நாள் solidarity fasting இருப்பதுண்டு. 

ஆப்கானிஸ்தானில் இருக்கும் போது முதல் தடவையாக இதை ஆரம்பித்ததே இந்த நோன்பிற்கு பின்னாலிருக்கும் நோக்கத்தையும் இந்த செக்கு உடம்பின் வலுவையும் உய்த்தறியவேண்டும் என்பதற்காகத்தான். முதல் முயற்சியிலேயே பசியும் தாகமும் நடு மண்டையில் அறைந்து ஓடிவிடு என்றது. ஓர்மத்தோடு இரண்டாவது தடவை நோன்பு பிடித்தபோது வயிறும் மூளையும் ஒருவழியாக வழிக்கு வந்து சேர்ந்தது.

இந்த நோன்பில் எனக்குப் பிடித்த முக்கியமான விடயம், நோன்பென்பது பசி தாகத்தோடு மட்டும் சம்பந்தப்பட் விஷயமல்ல என்பதுதான். அதைவிட மிகப்பெரிய கஷ்டம் பாய்ந்து திரியும் நம் மனதைக் கட்டுப்படுத்துவது. மூளை சொல்வதைக்கேட்டு நடக்கும்படியா நம் மனம் படைக்கப்பட்டிருக்கிறது?. மாறாக மனம்தானே மூளையின் இயக்கி. அது எதை விதிக்கிறதோ அதைத்தானே நம் மூளை கேட்கிறது. பாய் என்றால் பாய்கிறது. மரி என்றால் மரிக்கிறது.

நோன்பு காலத்தில் தீயதை நினைக்கக்கூடாது. பொய் சொல்லக்கூடாது. பிறருக்கு தீங்கு நினைக்கக்கூடாது. மற்றவர் உடைமையை அபகரிக்கக்கூடாது. பெறாமை, அல்பத்தனம், பழிவாங்கும் எண்ணம், பேராசை, வஞ்சகம், துரோகம், சூது, மது, புகையிலை, உடலுறவு (முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியாதல்) போன்ற சகல இச்சைகளையும் துறக்கவேண்டும் என்கிறது இஸ்லாம். இவற்றை இஸ்லாம் வலியுறுத்துவதற்கான மிகமுக்கியமான காரணம் மனக்கட்டுப்பாட்டை வலுப்படுத்தவும் இறையச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளவும்தான்.

ஆனால் இவை அனைத்தையும் கடைப்பிடிப்பதென்பது ஸஹருக்கும் இப்தாருக்கும் இடைப்பட்ட நேரத்தில் நீராகாரமின்றி பசித்திருத்தலைவிட கடினமானது. பசியையும் தாகத்தையும் வென்றிருந்தாலும், மேற்சொன்ன விடயங்களை எப்பொழுது என்னால் கடைப்பிடிக்க முடியாமல் போனதோ அன்றே இந்த solidarity நோன்பிற்கு குட் பாய் சொல்லிவிட்டேன்.

ஆனால், இப்பொழுது பேஸ்புக் என்கின்ற ஒரு விசித்திர உலகத்தில் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. புனித நோன்பை நோர்த்துக்கொண்டு எப்படி இவர்களால் முன்பு போன்றே வெறித்தனமாக இயங்க முடிகிறது எனத் தெரியவில்லை. பேஸ்புக்கில் கொட்டித்தீர்க்கும் சண்டைகளும், பழிவாங்கல்களும், வசைகளும், தீய விமர்சனங்களும், மரியாதைக்குறைவான பழிச்சொற்களும் எப்படி இவர்களுடைய நோன்பை சுன்னத்தாக்கும்?

உதாரணத்திற்கு ஒன்றை மட்டம் சொல்லுகிறேன். நேற்று ஒரு பெண்ணை பொது வெளியில் வைத்து வாங்கு வாங்கென வாங்கிக்கொண்டிருந்தார் ஒரு முஸ்லிம் நண்பர் (அவருடைய சேனையுடன் சேரந்து). வேசை, தேவடியா, புண்டை என்றெல்லாம் அவருடைய வசையில் diversity வேறு. பார்த்து பிரமித்துப்போனேன். ஆனால் அதே நண்பர் அதே நாளில் ஃபஜ்ர் தொழுகையை முடித்துவிட்டு இப்தார் பந்தியில் வந்து அமர்ந்துகொண்டு அதைப் படம் பிடித்து முகப்புத்தகத்தில் அப்லோட் பண்ணுகிறார். (அதற்கு அல்லாஹ்வின் வாக்கியத்தை quote பண்ணி கப்ஷன் போட்டிருந்தால் இன்னும் எடுப்பாய் இருந்திருக்கும்!).

மார்க்கம் என்ற பெயரில் எதற்காக இவர்களுக்கெல்ல்லாம் இந்த வேடமும், முகமூடியும்? ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். நோன்பை முறிப்பதற்கு முகப்புத்தகத்தைவிட இலகுவான ஒரு சாத்தான் இவ்வுலகத்தில் வேறொன்றுமில்லை.

அல்லாஹ், இவர்களுடைய நோன்பு சுன்னத்தல்ல என்பதையும், நீங்கள் அறிவித்த ‘சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம்’ இவர்களுக்கு ஒரு வீணான மாதம் என்பதையும் எப்பொழுது அவர்களுக்கு புரியவைக்கப் போகிறாய்?

“நோன்பாளி கெட்ட பேச்சுக்களை பேச வேண்டாம். முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடவேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!’ என்று இருமுறை கூறட்டும்” - அல்லாஹ்.

Amalraj Francis

6 கருத்துரைகள்:

Definitely, Facebook is a real Satan.

Muslims should avoid this Satan Facebook as much as they can.

very Good Almaraj Francis.

Thanks for your advice for our muslim community I hope hereafter they will follow the queen and sunnah

Excellent knowledge about ramadan and good advice for us, thank you a lot Mr. Almaraj

Post a Comment